Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு தண்ணி காட்டும் அரசாங்கம்

Featured Replies

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அரசாங்க பேச்சுவார்த்தைகள் பலகட்டங்களாக நடைபெறுகின்றன. மேற்படி பேச்சுவார்த்தைகளின் ஆரம்ப நிலைமைகளில் தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களைத் தருமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கோரியதையடுத்து, மேற்படி விபரங்கள் தரப்படும் என அரசதரப்பு வாக்குறுதி வழங்கியிருந்தது. இந்த விபரங்களை பாதுகாப்புச் செயலகம், பிரதேச இராணுவத்

தளபதிகளிடம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது.

ஆனால், இவர்களை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அணுகியபோது அவர்கள் கைவித்துள்ளனர். அத்தகைய விபரப்பட்டியல் தம்மிடம் இல்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இது பெரும் பிரச்சினையாக இன்று காணப்படுகிறது. தம்மிடம் எவ்வளவு தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர் என்பதை வெளியிட மறுக்கும் அரசாங்கம், சர்வதேசத்திடம் 11,000 அரசியல் கைதிகள் வரையில் தம்மிடம் உள்ளனர் என்றும், விசாரணைகளின் போது குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுகின்றனர் என்றும், ஏனையவர்கள் மறுவாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் கூறுகின்றது.

இதை ஏற்றுக்கொள்ளடியாது. 1971 இல் 1989-90 காலப்பகுதியில் விடுதலைப்புலிகளைப் போன்று மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள், தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் அரசியல் கைதிகளாகக் கருதப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டனர். ஆனால், பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மக்கள் விடுதலை முன்னணி தலைவர், றோகண விஜயவீரா, சோமவன்ச, விமல்வீரவன்ச ஆகிய அனைவருமே இங்ஙனம் விடுதலையாகி வெளியே வந்தவர்கள் ஆவர். இவர்கள் மீது பல்வேறு குற்றவியல் குற்றச்சாட்டுகள் இருந்தபோதும், இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

தமிழ் அரசியல் கைதிகள் மீது ஏன் இந்தப் பாரபட்சம் காட்டப்படுகிறது. தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான பட்டியல் தம்மிடம் இல்லையென சம்பந்தப்பட்டவர்கள் கூறுகின்றார்களாயின், இவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டனரா? என்ற கேள்வியே இங்கு எழுகின்றது.

இதே நேரம், காலத்திற்குக் காலம் 600 பேர் வரையில் அல்லது அதற்குன் பின்னாக தமிழ் அரசியல் கைதிகள் மறுவாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்படுகின்றனர் என்ற செய்தியும் படங்களுடன் வெளிவருகின்றது. அப்படியாயின், இவர்களை எங்கே வைத்திருந்தார்கள்? தமிழ் அரசியல் கைதிகளை மூன்று விதமாக அரசாங்கம் பார்க்கின்றது.

முதலாவதாக குற்றச்சாட்டுடன் தொடர்புபட்டவர்களை வெலிக்கடை, சீ.ஆர்.பி, மகசீன், பூசா, கண்டி, அனுராதபுரம் போன்ற இடங்களில் வைத்துள்ளனர். இவர்களை நீதிமன்றம் முன்நிறுத்தி விசாரணைகள் செய்யப்பட்டு, தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. இவர்களைப் பற்றிய தகவல்கள் நீதித்துறைக்கு தெரியும்.

இரண்டாவதாக நாட்டில் பல பாகங்களிலும் தடுப்பு காம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் இதில் உள்ளனர்.

மூன்றாவதாக பல்வேறு இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் முதலாவது பிரிவில் 500-1000 வரையிலான கைதிகள் உள்ளனர். இவர்களில் பலர் எம்முடன் தொடர்பு கொண்டு தமக்கு நடைபெறுவதைக் கூறுகின்றனர். நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டு இவர்களில் பலர் சிறைகளுக்கு அனுப்பப்படுகின்றனர். பலரது வழக்கு தொடர்கதையாகத் தொடர்கிறது.

விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களான கருணா, பிள்ளையான், கேபி போன்றோர்கள் இன்று சகல வசதிகளுடனும் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு உதவியாக நின்றவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள், தடுத்து வைக்கப்படுகின்றார்கள். இது எந்த வகையான நீதி என்று எனக்குப் புரியவில்லை. தடுப்புக் காவலில் உள்ள கைதிகள் பல விதமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். தொடர்ச்சியாக விசாரணை இன்றி மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். சிறைச்சாலை நிர்வாகத்தின் கெடுபிடிகள், போதிய வசதிகள் இன்மை நீண்ட காலமாக குடும்பத்தைப் பிரிந்து இருத்தல் போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளுடன் இவர்கள் உள்ளனர்.

இராமசாமி பிரபாகரன் என்ற கைதி மகசின் சிறைச்சாலையில் உள்ளார். இவர் ஒரு நோயாளி. இவரைப் பார்ப்பதற்குச் செல்லும் இவரது குடும்பத்தினர், இவருக்கு உரிய பொருட்களை முன்பு எடுத்துச் சென்றனர். இது வழமையாக இருக்கும் விடயமாகும். தற்போது சிறைச்சாலை அதிகாரிகள் இங்ஙனம் பொருட்களைக் கொண்டுவரடியாது என தடைவிதித்துள்ளனர். வேண்டுமானால் சிறைச்சாலைக் கடையில் பொருட்களைக் கொள்வனவு செய்து கைதிகளுக்கு வழங்கவும் என உத்தரவிட்டுள்ளனர்.

இதனால் தாம் படும் கஸ்டத்தை இந்தக் குடும்ப அங்கத்தினர் என்னிடம் நேரில் வந்து முறையிட்டுள்ளனர். உண்மையில் இந்த கைதியின் மனித உமை மீறறப்பட்டுள்ளதாகவே தெகிறது. மேலும், இவர் அநியாயமான முறையில் எஸ்.எஸ்.பி ஒருவரால் குற்றம் சுமத்தப்பட்டு இங்கு கொண்டுவரப்பட்டுள்ளார் எனக் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

இங்கே வசதியுள்ளவர்கள் பொருட்களைக் கொடுப்பதற்கும், எம்மிடம் வந்து முறையிடுவதற்கும் அவர்களால் முடிகிறது.ஆனால், வசதியற்றவர்கள் நிலையை எண்ணிப் பாருங்கள். விடுதலைப் போராட்டத்தில் ஏராளமான ஏழைகளே கலந்து கொண்டனர்.

பால சிறிதர சர்மா தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் எமது கட்சியின் சார்பில் சிறையில் இருந்து போட்டியிட்டவர் ஆவார். இன்று வரை அவருக்கும் விடுதலை கிடைக்கவில்லை.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழேயே இவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்ட னர். எனவே, சிறைச்சாலைப் பிரிவினர், நீதித்துறையினர் தம்மிடம் பட்டியல் இல்லை எனக்கூறடியாது.

மறுவாழ்வுக்காகத் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைத்திருக்கும் இடங்கள் பற்றி அவர்களது பெற்றோருக்கு அறிவிக்க வேண்டும். அவர்களது பிள்ளைகள் செய்த குற்றமென்ன என்பதை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

இங்கே இராணுவமே முடிவை எடுக்கிறது. தடுத்தும் அவர்களே வைத்திருக்கின்றனர்.

இதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இப்போதும் உபயோகிக்கின்றனர். தற்போதும் தமிழ் இளைஞர்களை அதன் கீழ் கைதும் செய்கின்றனர்.

எனவே, தமிழ்த்தேசியக் கூட்டடைப்பு அரச சந்திப்பு எப்படி சுமூகமாக இருக்கிறது எனக் கூற டியும். இனியாவது அரசாங்கம் தம்மிடம் உள்ள தடுத்து வைக்கப்பட் டிருப்பவர்கள் தொடர்பான தகவல்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்க முன்வருமா? இதுவே பேச்சுவார்த்தையில் முதற்கண் தீர்க்கப்படவேண்டிய விடயமாகும்.

சகல தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யவேண்டும் என்றே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கோர வேண்டும். அத்துடன், அவசரகாலச்சட்டம், பயங்கரவாதச்சட்டம் என்பவை நீக்கப்பட வேண்டும் என்ற போராட்டம் முதலில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

--விக்ரமபாகு கருணாரெட்ன----

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=1628:2011-04-10-07-58-06&catid=1:latest-news&Itemid=18

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை பேருக்கு சிங்கள அரசு தண்ணி காட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.கூட்டணி எம்மாத்திரம்.கூட்டணியில் இருந்து புலிகள் வரை சிங்கள அரசின் ஏமாற்று வித்தைகளில் ஏமாந்தவர்களே.

உ+ம்: சந்திரிக்கா அரசின் தீர்வுப்பொதி.

போர் ஓய்ந்து 2 வருடங்களாகியும் அவசரகால சட்டத்தை தற்போதும் அமுலில் வைத்திருக்கும் சிங்கள அரசு எப்படி தண்ணி காட்டுகிறது என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை.

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.