Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பில் நேற்று பொலிஸ் குவிப்பு: புத்தாண்டு கலகலப்பும் இல்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் நேற்று பொலிஸ் குவிப்பு: புத்தாண்டு கலகலப்பும் இல்லை

புத்தாண்டையொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்குடன் நாடு முழுவதும் பெரும் எண்ணிக்கையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். குறிப்பாக கொழும்பு நகரிலும் சுற்று வட்டாரங்களிலும் இம்முறை ஏராளமான பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

சட்டம், ஒங்கைச் சீர்குலைக்கும் வகையில் சம்பவங்கள் இடம்பெறலாம் என்று கருதி வழமையை விடவும் கூடுதலான பொலிஸார் ரோந்துப் பணிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர்.ஆனால் கொழும்பு நகரில் இம்முறை மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததையும் அவதானிக்க முடிந்தது.நண்பகலுக்குப் பின்னர் வீதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. கலகலப்பின்றி அமை தியான முறையில் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. முன்னய வருடங்களைப் போன்று பெரிய அளவில் வெடி கொளுத்தி மக்கள் ஆரவாரம் செய்யவில்லை.இதேவேளை வீதிவிபத்துக்கள், வெடி கொளுத்தியதால் ஏற்பட்ட எரிகாயங்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட 230 பேர் நேற்றுப் பிற்பகல் வரை கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர் என்று வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குடாநாட்டிலும் புத்தாண்டு ஆரவாரமின்றி கொண்டாட்டம்

யாழ். குடாநாட்டில் நேற்று சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் மிகவும் அமைதியான முறையில் கழிந்தன.குடாநாட்டு மக்கள் ஆலயங்களுக்குச் சென்று பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டு புத்தாண்டை அமைதியாக வரவேற்றனர்.

"கர" என்ற பெயருடன் சித்திரைப் புத்தாண்டு நேற்றுப் பிறந்தது. புதிய ஆண்டை குடாநாட்டு மக்கள் பெரிய ஆடம்பரங்கள் எதுவுமின்றிக் கொண்டாடினார்கள்.சுபநேரப்படி நேற்று முற்பகல் 11.35 மணிக்குப் புத்தாண்டு பிறந்தது. அந்த சுபவேளையில் அனைத்து இந்து ஆலயங்களிலும் பூசை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன. நண்பகலில் புத்தாண்டு பிறந்த மையால் குடாநாட்டு மக்கள்காலை தமது அன்றாடப் பணிகளை அவசரமின்றி முடித்துக் கொண்டு புத்தாண்டு பிறக்கும் சுப வேளையில் ஆலயங்களில் கூடி பூசை வழிபாடுகளில் பங்குபற்றி மன அமைதியுடன் புத்தாண்டை வரவேற்றனர். வீடுகளிலும் மக்கள் பாரம்பரிய முறைப்படி பொங்கலுடன் புத்தாண்டை ஆரம்பித்தனர்.புத்தாண்டை வரவேற்பதற்காக இளம் மட்டத்தினர் வெடி கொளுத்தி ஆரவாரத்தில் ஈடுபட்டனர். எனினும் பெரிய அளவில் ஆடம்பரமான கொண்டாங்கள் எதுவும் இல்லை.புத்தாண்டு வியாபார நடவடிக்கைகளுக்காக குடாநாட்டில் உள்ள வங்கிகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் நேற்று நண்பகலுக்குப் பின்னர் திறக்கப்பட்டன. வங்கிகளில் வாடிக் கையாளர்கள் புதிய வைப்புக்களை ஆரம்பித்தனர். இதன் போது அவர்களுக்கு கைவிசேடமும் வழங்கப்பட்டது. வர்த்தக நிலையங்களிலும் புத்தாண்டு வியாபாரம் ஒரு சில மணி நேரங்கள் இடம்பெற்றன.புத்தாண்டை முன்னிட்டு நேற்றுப் பல இடங்களில் பாரம்பரிய விளையாட்டுக்கள், கலை நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றன.குடாநாட்டில் நிலை கொண்டுள்ள படையினரும் நேற்றுப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். படையினரின் ஏற்பாட்டில் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.

ஆர்வமின்றி வன்னி மக்கள் புதுவருடத்தைக் கழித்தனர்

எல்லாவற்றையுமே இழந்த நிலையில் வன்னி மக்கள் இவ்வருட புத்தாண்டை மிகவும் அமைதியான முறையில் கடைப்பிடித்தனர்.எந்தவித ஆடம்பரக் கொண்டாட்டங்களும் இன்றி மக்கள் "கர" வருடத்தைக் கொண்டாடினர். ஆலயங்களிலும் மக்கள் பெரியளவில் திரண்டு வழிபாடுகளில் ஆர்வமுடன் ஈடுபட்டிருக்கவில்லை.சிலர் புத்தாண்டையே புறக்கணிப்பது போல் எந்தக் காரியங்களிலும் ஈடுபடாமல் தமது இருப்பிடங்களில் முடங்கிப் போயிருந்ததையும் காணக் கூடியதாக இருந்தது.இராணுவத்தினரின் ஏற்பாட்டில் புத்தண்டு நிகழ்வுகள் இந்தப் பகுதிகளில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த போதிலும் மக்கள் அவற்றிலும்கூட விருப்புடன் கலந்துகொண்டதாகத் தெரியவில்லை.உறவினர்களின் இறப்புகள், துன்பச் செயல்கள் என்பவற்றின் வடுக்கள் இன்னும் எம் மனங்களில் இருந்து அகலாத நிலையில் எவ்வாறு புத்தாண்டைக் கொண்டாடுவது என்று வன்னிமக்கள் பலர் தெரிவித்தனர்.

15 ஏப்ரல் 2011, வெள்ளி 7:10 மு.ப

uthayan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.