Jump to content

தி.மு.க வின் கடைசி நேர, பண விநியோகம்.. வெற்றி தருமா..?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தி.மு.க வின் கடைசி நேர, பண விநியோகம்.. வெற்றி தருமா..?

திருமங்கலம் தேர்தல் ஃபார்முலாவை பயன்படுத்தி இடைத்தேர்தல் போலவே சட்டமன்ற தேர்தலைலும் சுலபமாக வெற்றி பெற்று விடலாம்..என்று தி.மு.க ஆசை ஆசையாக இருந்தது..ஆனால் தேர்தல் கமிசன் இப்படி டங்குவாரை அத்துவிடும் என நினைத்துக்கூட பார்க்கவில்லை...சகாயம் கலெக்டர் மதுரையில் அஞ்சா நெஞ்சரை துரத்தி துரத்தி வளைத்து வளைத்து..நெருக்கடி கொடுத்து உச்சா போக வைத்தார்....நிம்மதியா ஒண்ணுக்கு கூட போக முடியலை...கேமிராவோட வந்துடுறானுக..என்னும் கலங்கடிக்கும் கட்சிகாரர்களே கலங்கி போனார்கள்....ஆனாலும் கடைசி நேரத்தில் தி.மு.க போட்ட வெறியாட்டம் இருக்கிறதே அது உச்சக்கட்டம்....

ஆமாம்..வடிவேலு ஒரு பக்கம் அழுது கொண்டு எல்லாம் வாக்கு சேகரிக்க,குஷ்பூ இன்னொரு பக்கம் என்னை மாதிரியே புள்ளை வேணுமா...என வாக்கு சேகரிக்க...(இது மாதிரி 4 புருஷன் கட்டுற புள்ள எவனும் கேட்க மாட்டான்)...இன்னொரு பக்கம் குப்பை வண்டி,போஸ்ட் மேன் வேசம்,கல்லூரி மாணவர்கள் வடிவில்,விடியற்காலை நாலு மணிக்கு கதவு தட்டி பண விநியோகம் என பண சுனாமி சுழன்றடித்தது....

மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட,பாசூரில் ஒரு சேரிக்கு அதாவது கவுண்டர் தெரு என்றால் அந்த தெரு முக்கியஸ்தருக்கு அந்த வீதி மக்கள் பிரித்து கொள்ள மொத்தமாக 50,000 கொடுத்தார்களாம்..இது போல ஒவ்வொரு தெருவுக்கும் 50,000.இது போக கட்டப்பட்டு கொண்டிருக்கும் குல தெய்வம் கோவில் வகையறா மக்களை சந்தித்து நன்கொடையாக 50,000..என அள்ளிக்கொடுத்திருக்கிறார்கள்..இதனால் அந்த கிராம மக்கள் பெரும்பாலானோர் கை சின்னத்துக்கே வாக்களித்து உள்ளனர்...இதை நான் அந்த கிராமத்தில் பலரிடமும் விசாரித்து தெரிந்துகொண்டேன்..என் சித்தப்பாவிடமும் கேட்டேன்..அவரும் ஆமாம்..எல்லாம் உள்ளூர் காரங்க...நன்கொடை அள்ளிகொடுத்து குரூப் குரூப்பா வளைக்கிறாங்க..சாமி கோவிலுக்கு கொடுத்துட்டானுக..அதனால நன்றி செலுத்த வேண்டாமா என்றார்.

அடேங்கப்பா..எப்படி திட்டம் போட்ருக்காங்க...ஆனாலும் அ.தி.மு.க காரங்களும் அதை தடுக்க முடியலை..காரணம்..ஒரு ஜாதி தலைவருக்கு பெரிய தொகையை மொத்தமா கொடுத்து நீங்களே பிரிச்சுக்குங்க..என்பதும்..குலதெய்வ பங்காளி குடும்பத்தினரை சந்தித்து பெரிய தொகையை நன்கொடையாக கொடுப்பதும் அவர்கள் தடுக்க முடியாத ஒன்று...

மொடக்குறிச்சி தொகுதி தமிழ்கத்திலேயே பெரிய சட்டமன்ற தொகுதி....ஒரு முறை தங்கள் பிரச்சனைகளை தீர்க்க கோரி 1000 சுயேச்சை வேட்பாளர்கள் சட்டமன்ற தேர்தலில் நின்று தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த தொகுதி..தேர்தல் கமிஷன் அந்த அதிரடியை சமாளிக்க முடியாமல் விக்கித்து போனது..

மொடக்குறிச்சி தொகுதி..விவசாயம் அதிகம்..கொங்குவேலாளர்கள் அதிகம்..அதி.மு.க வெர்றி பெற அதிக வாய்ப்புள்ள தொகுதி.....இங்கே எந்த கட்சி ஜெயிக்குதோ அதுதான் கோட்டையில் கொடியேற்றும் என்று சொல்வார்கள் இந்த பகுதி மக்கள் பெருமையாக.

பார்க்கலாம்...பண விநியோகம் தொகுதி முழுவதும் நடைபெறவில்லை என்றுதான் சொல்கிறார்கள்...தேர்தல் கமிஷன் இன்னும் அசால்டா இருந்தா இன்னும் எத்தனை கோடி வெளியே வந்திருக்குமோ....ஒழுங்கா மக்கள் நலதிட்டங்கள் செஞ்சிருந்தா ஏன் இப்படி திருடன் மாதிரி பன விநியோகம் செய்யணும்..மக்களுக்கே இவ்வளவு கொடுத்தா இவனுக எவ்வளவு திருடியிருப்பானுக...?

திருமங்கலம் பாணி என்ரால் அரசு இயந்திரத்தை முழுவதுமாக தொகுதிக்குள் முகாமிட செய்து,கறி விருந்து குவார்ட்டர் கொடுத்து <ஓட்டுக்கு 5000 கொடுத்து,வெற்றி பெறுவது..இந்த ஃபார்முலா முழுவதும் இல்லாமல் கால்வாசிதான் இந்த தேர்தலில் செயல்படுத்த முடிந்தது..அரசு இயந்திரம் முழுவதும் தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில் இருந்தது...சாதாரண கான்ஸ்டபிள் கூட தி.மு.க மந்திரிகளை மதிக்க வில்லை..கறி விருந்து அல்ல டீ கூட வாங்கி தர முடியவில்லை..பண விநியோகத்தை தே.மு.தி.க..,அ.தி.மு.க இரண்டு கட்சியினரும் இணைந்து நின்ரதால் பெருமளவு தடுக்க முடிந்தது...பணம் வாங்கினாலும் தி.மு.க வுக்கு ஓட்டு போட மாட்டோம் என்ர மனோபாவத்தில் பலரும் இந்த முறை இருந்தனர்....

ஆக,திருமங்கலம், ஃபார்முலா இந்த தேர்தலில் தோல்வி.

http://sathish777.blogspot.com/2011/04/blog-post_14.html

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.