Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் வவுனியா பயணம் கோத்தாவினால் நிறுத்தம்: போராளிபட்டியலும் காட்டப்படமாட்டாது

Featured Replies

வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 15, 2011

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாளைய வவுனியா விஜயத்தை அரசாங்கம் ஒத்தி வைக்கும்படி தம்மைக் கோரியுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம.;ஏ. சுமந்திரன் சற்று நேரத்துக்கு முன்னர் எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்..

புத்தாண்டு காலம் காரணமாக அரசாங்க அதிகாரிகள் விடுமுறையில் உள்ளனர் என்று கூறியே அரசாங்கம் எமது பயணத்தை ஒத்திவைக்கும்படி கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் அரசதரப்பு பேச்சுவார்த்தைக் குழுவின் செயலாளர் சஜின் வாஸ் குணவர்த்தனவும் வவுனியாவில் நாளை சந்திப்பதற்கு ஏலவே தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அரசு தரப்பு இந்தத் திடீர் முடிவை அறிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க, ஏலவே திட்டமிடப்பட்டிருந்த நாளைய சந்திப்பின் போது வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளின் பெயர்ப் பட்டியலை கூட்டமைப்பினரிடம் அரச தரப்பு கையளிக்கவிருந்தது.

இதனைத் தவிர்க்கும் முகமாகவே நாளைய சந்திப்பை அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக ஒத்திவைத்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கையையடுத்து சிறிலங்கா அரசின் மீது எழுந்துள்ள சர்வதேசத்தினதும் அமைப்புகளினதும் அழுத்தத்தின் மத்தியில், வவுனியாவில் தடுத்து வைக்கபப்ட்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளின் பட்டியலை வெளியிடுவதானது நிலைமையை மேலும் சிக்கலாக்கலாம் என்பதன் காரணமாக இந்த விஜயத்தை அரசு தரப்பு ஒத்திவைத்துள்ளது என ஊர்ஜிதமான தகவல்கள் எமக்குத் தெரிவித்தன.

அரச தரப்பினரால் வழங்கப்படும் பெயர்ப் பட்டியலைக் கூட்டமைப்பினர் ஒப்பிட்டுப் பார்க்கவும் முன்னர் இணக்கம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிபுணர் குழுவின் அறிக்கையின் தாக்கத்தின் ஒரு பகுதியாகவும் இது இருக்கலாம் எனவும் கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஈழ நாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.