Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நகரசபை உறுப்பினர் பதவியில் இருந்து லிங்கநாதன் இராஜிநாமா! பிரதேச சபை பதவியேற்பு வைபவத்தில் உணர்ச்சி வசப்பட்டு அறிவித்தார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நகரசபை உறுப்பினர் பதவியில் இருந்து லிங்கநாதன் இராஜிநாமா! பிரதேச சபை பதவியேற்பு வைபவத்தில் உணர்ச்சி வசப்பட்டு அறிவித்தார்!

Posted by admin2 On April 20th, 2011 at 10:20 pm /

வவுனியா நகரசபையின் முன்னாள் தலைவரும், தற்போதைய நகரசபையின் உறுப்பினருமாகிய ஜி.ரி.லிங்கநாதன் தனது நகரசபை உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவித்தல் கடிதம் நகரசபையின் செயலாளருக்குக் கையளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தான் இராஜிநாமா செய்யப் போவதை அவர் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் வவுனியா தெற்குத் தமிழ்ப்பிரதேச சபை உறுப்பினர்களின் பதவியேற்பு வைபவத்தில் உரையாற்றுகையில் அறிவித்துள்ளார்.

இந்த அறிவித்தல் குறித்து அவரிடம் வினவியபோது, தான் இராஜிநாமா செய்யப்போவதை அவர் உறுதிப்படுத்தினார்.

ஜி.ரி.லிங்கநாதன் புளொட் அமைப்பின் (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின்) மத்திய குழு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. புளொட் அமைப்பு நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இணைந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா தெற்குத் தமிழ்ப்பிரிவு பிரதேச சபை உறுப்பினர்களின் பதவியேற்பு வைபவத்தில் அவர் தெரிவித்ததாவது:

நகரசபைக்கான தேர்தலில் நாங்கள் புளொட் தனியாகப் போட்டியிட்டிருந்தோம். தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எங்களிலும் பார்க்க 143 வாக்குகள் அதிகமாகப் பெற்று நகரசபையின் அதிகாரத்தைக் கைப்பற்றியது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல் இருந்தது, நகரசபையின் உறுப்பினர் பதவிகளைக் கைப்பற்றுவதற்கான அரசியல் பேசினோம். அரசியல் ரீதியாகச் செயற்பட்டோம். அத்துடன் அரசியல் முடிந்துவிட்டது. பதவியேற்றதன் பின்னர் மக்களுக்கு சேவையாற்றுவதற்காக அரசியல் பேதமின்றி ஒற்றுமையாகச் செயற்படுவோம் என்றும் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்ற உறுதியை நாங்கள் வழங்கி செயற்பட்டோம்.

ஆனால் நகரசபைத் தலைவரின் செயற்பாடுகள் இந்த நோக்கத்திற்கு மாறாக இருந்ததனால், 29 விடயங்களில் குற்றங்கள் குறைகள் காணப்பட்டு தலைவர், உபதலைவர் செயலாளர் மீது குற்றம் சுமத்தி நாங்கள் விளக்கம் கேட்டோம். அதற்கான விளக்கம் தரப்படவில்லை. இந்த நிலையில் சபையின் செயற்பாடுகளுக்கு எங்களால் ஒத்துழைக்க முடியாமல் போனது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தலைவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததையடுத்து, அவர் தனது பதவியை இராஜிநாமா செய்தார். புதிய தலைவரை நியமிக்க வேண்டியது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பொறுப்பாகும்.

நாங்கள் முன்னர் நகரசபையை நிர்வகித்த போது எங்களால் முடிந்த சேவைகளை மக்களுக்காக நாங்கள் செய்தோம். அந்த அனுபவத்தையும் ஆர்வத்தையும் கொண்டு இந்த முறையும் மக்களுக்கு நாங்கள் சேவையாற்றுவதற்குத் தயாராக இருந்த போதிலும், அதற்கான சந்தர்ப்பமும், ஒத்துழைப்பும் எங்களுக்கு கிடைக்கவில்லை. எனவே இந்த நிலையில் வவுனியா நகரசபையில் தெரடர்ந்தும் இருப்பதில் எந்தவிதமான பயனும் இல்லை என்பதனால், நான் எனது பதவியை இராஜிநாமா செய்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

saritham.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.