Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தின் சொல்லப்படாத செய்திகளைக் கூறும் சிங்கள நூல் வெளியீடு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தின் சொல்லப்படாத செய்திகளைக் கூறும் சிங்கள நூல் வெளியீடு!

வியாழன், 21 ஏப்ரல் 2011 16:12

இலங்கையின் கிழக்கு மாகாணத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா எழுதிய விடுதலைப்புலிகளுடனான யுத்தகள அனுபவத்தை கூறும் சுயசரிதை வடிவிலான சிங்கள நூல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

“அவி பிமக்க ஹன்த கெஸ்ம” (போர்முனையில் ஒரு இதயத்தின் துடிப்பு) என்ற தலைப்பிலான இந்த நூல் கொழும்பு மகாவலி நிலையத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய வெளியிட்டு வைத்தார்.

இந்த நூலில் இராணுவத்தின் முக்கியமான படை நடவடிக்கைகள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளும், புலிகளுடனான போரில் படையினர் எதிர்கொண்ட சிக்கல்கள் குறித்தும் விபரிக்கப்பட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தனது 18 வயதில் இராணுவத்தில் இணைந்தது தொடக்கம் 20 வருட யுத்த அனுபவத்தையும் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தின் களமுனை அனுபவங்களை கூறும் முதலாவது நூலாக இது அமைந்துள்ளது.

இதுவரை சொல்லப்படாத பல விடயங்கள் இந்த நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

போரின் போது மரணமடைந்த படைவீரர்களுக்கு இந்த நூலை சமர்ப்பிப்பதாக மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.

tamilenn

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளுடனான போரில் இராணுவத் தளபதியொருவரின் திகில் அனுபவங்கள்!

வியாழன், 21 ஏப்ரல் 2011 20:39

இலங்கை இராணுவச் சேவையில் 30 வருட அனுபவத்தைக் கொண்டுள்ள, கிழக்குப் பிராந்திய கட்டளையிடும் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா “ஹவி பிமக ஹட கெஸ்ம” (யுத்த களத்தின் நாடித்துடிப்பு) என்ற பெயரில் ஒரு நூலை எழுதியுள்ளார்.

இவர் 20 வருடங்கள் யுத்த சேவையில் இருந்தவர். தனது இராணுவ அனுபவங்களையே இவர் நூல் வடிவில் வெளியிட்டுள்ளார்.

படையினரின் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த நூலில், இரண்டாவது ஈழப்போரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சகல இராணுவ நடவடிக்கைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

18 வயதில் இராணுவ சேவையில் இணைந்துகொண்ட இவர் அன்று முதலே டயரியில் குறிப்புக்களை எழுதும் பழக்கத்தையும் கொண்டிருந்தவர். என்றாவது ஒருநாள் தனது அனுபவங்களை ஒரு நூலாக எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இவர் டயரி எழுதும் பழக்கத்தையும் கொண்டிருந்தார்.

எனது 20 வருட இராணுவ அனுபவம் ஒரு சிப்பாயின் மன உணர்வுகள் பற்றிய ஆழமான உணர்வுகளை நன்றாகப் புரிந்து கொள்ள வைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

1990களில் இராணுவம் பல வெற்றிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதுவே இரண்டாவது ஈழப்போர் பற்றி தன்னை எழுத வைத்ததாக அவர் கூறுகின்றார்.

இதில் ஆறு பிரதான இராணுவ நடவடிக்கைகள் பற்றிப் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று ஆனையிறவு முகாமை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட “பலவேகய1” நடவடிக்கையாகும். ஆனையிறவு முகாம் நான்கு மாதங்களாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.

யாழ்ப்பாண முகாமில் சிக்கியிருந்த சிப்பாய்களை மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்ட “திரிவிட பலய” நடவடிக்கை மறக்க முடியாத ஒரு அனுபவமாகும் என்று மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா கூறுகின்றார்.

அப்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணக் கோட்டையை மீட்பதற்காகவே இந்த முகாம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் மற்றும் குண்டு வீச்சு மோட்டார் வீச்சு என்பனவற்றுக்கு இந்த முகாம் ஆளாகியிருந்தது. சுமார் 100 சிப்பாய்கள் அதில் சிக்குண்டிருந்தனர்.

அவர்களிடம் உணவோ, ஆயுதமோ கூட போதிய அளவு இருக்கவில்லை. கிட்டத்தட்ட சரணடையும் நிலையில் அவர்கள் இருந்தனர். உணவு, ஆயுதம் என்பனவற்றை விமானம் மூலம் போடுவது கூட சாத்திய மற்றதாகவே காணப்பட்டது.

முகாமில் இருந்த சிப்பாய்களுள் பலர் இறந்தும் இன்னும் பலர் காயமடைந்தும் காணப்பட்டதால் அவர்களை அப்புறப்படுத்தக் கூட முடியாத நிலை காணப்பட்டது.

சிதறிக்கிடந்த சடலங்கள் பல முகாமுக்குள்ளேயே அடக்கம் செய்யப்பட்டன. நான் யுத்த களத்தில் இருக்கின்ற போது பணத்தை சேகரிப்பது பற்றி ஒருபோதும் யோசித்ததில்லை. காரணம் எமது வாழ்வு நிச்சயமற்றதாக இருந்தது.

மரணத்தை எந்த நேரமும் எதிர்ப்பார்த்திருந்தோம். எனது கவனம் முழுவதும் எனக்கு கொடுக்கப்பட்ட பணியிலும் எனது சக சிப்பாய்களின் உயிர்களைக் காப்பாற்றுவதிலுமே இருந்தது. நான் விடுமுறையில் வீடு செல்லும்போது கையில் உள்ள எல்லாப் பணத்தையும் நண்பர்களோடு சேர்ந்து செலவழித்து விடுவேன்.

எதிர்கால இலட்சியம் எதுவும் என்னிடம் இருக்கவில்லை. வடக்கில் உள்ள நகரங்கள் மற்றும் காடுகள் எல்லாம், எனது சொந்த ஊரை விட அல்லது நாட்டின் வேறு எந்தப் பகுதியையும் விட எனக்கு நன்கு பரிச்சயமானவை.

காலநிலை மிகவும் உஷ்ணமாக இருப்பதால் எப்போதும் கடினமாகவே இருக்கும். உறக்கம், உணவு, குளிப்பு என்பன கூட உரிய நேரத்துக்குக் கிடைப்பதில்லை. அன்றைய காலகட்டத்தில் கையடக்கத் தொலைபேசிகள் இல்லாததால் குடும்பத்துடனான தொடர்புகள் கூட பெரும்பாலும் இருப்பதில்லை.

நான் எங்கு இருக்கின்றேன் என்பது எனது பெற்றொருக்குக் கூட தெரியாத நிலை. ஈழப்போர் மூன்றில் “சதிஜய” இராணுவ நடவடிக்கையின்போது கிட்டத்தட்ட புலிகளிடம் பிடிபடும் நிலை எனக்கு ஏற்பட்டதை எப்போதும் என்னால் மறக்க முடியாது.

1996ல் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து கிளிநொச்சி நகரை மீட்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒருநாள் கிளிநொச்சி நகருக்கு அருகில் லாலனாகுளம் பகுதியில் அதிகாலை வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதல் ஒன்றைத் தொடுத்தனர். இதில் 150 படையினர் கொல்லப்பட்டனர்.

நான் முன்னணி நிலையில் இருந்தபோது சுமார் 15 புலிகள் இயக்க உறுப்பினர்கள் எம்மை நோக்கி முன்னேறி வந்தனர். எனக்கு வேறு வழி தெரியவில்லை எனது வாழ்வை நானே முடிவுக்குக் கொண்டுவருவதா அல்லது சரணடைவதா என்று யோசித்தேன். தற்கொலை தான் கௌரவமான ஒரு வழி என்று கருதினேன்.

என்னுடைய துப்பாக்கியை தலையில் வைத்துவிட்டேன். ஒரு கணம் எனது எண்ணங்கள் சுழன்றோடியது. நிச்சயமாக எனது குடும்பத்தைப் பற்றியல்ல. எனது சக சிப்பாய்களைப் பற்றி எண்ணினேன். அவர்களின் மரணங்களை நினைத்துப் பார்த்தேன்.

இரண்டு தினங்களுக்குப் பின் நடக்கப்போகும் எனது மரணச்சடங்கைப் பற்றியும் எண்ணினேன். நான் துப்பாக்கி விசையை நசுக்கத் தயாரான போது. சுட்டுக்கொள்ள வேண்டாம் அவர்களால் உங்களை கொல்ல முடியாது என்று பலத்த குரலில் கத்தும் சத்தம் கேட்டது.

உடனே நான் முழங்காலிட்டு சுழன்றுச் சென்று நான் தஞ்சம் புகக் கூடிய ஒரே இடமான அருகில் உள்ள வாய்க்கால் ஒன்றுக்குள் புகுந்து கொண்டேன். அங்கிருந்து எனது வானொலி கருவி மூலம் அந்த இடத்தைத் தாக்கி அழிக்குமாறு கோரிக்கை விடுத்தேன். இப்படித் தான் எனது உயிர் அன்று தப்பியது.

இதுபோன்ற இன்னும் பல மரண அனுபவங்களையும் அவர் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். கடும் எதிர்ப்புக்களை சமாளிக்கப் படையினர் சில சமயங்களில் வீடுகளை எரித்ததுண்டு.

இந்த நூல் இலங்கை இராணுவத்தின் சகல சிப்பாய்களுக்காகவும் அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளதாம்.

tamilenn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.