Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு பல்கலை கழகத்திலிருந்து பொலிஸ் காவலரணை அகற்றமுடியாது. – எஸ்.பி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு பல்கலை கழகத்திலிருந்து பொலிஸ் காவலரணை அகற்றமுடியாது. – எஸ்.பி.

21 ஏப்ரல் 2011

கிழக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள பொலிஸ் காவலரண் ஒருபோதும் அகற்றபடமாட்டாது பொலிஸ் சாவடி அகற்றப்படவேண்டுமானால் அவ்விடத்தில் வேறு ஒரு படைப்பிரிவின் காவலரணை அமைக்கவேண்டிவரும் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா நேற்று மட்டக்களப்பில் தெரிவித்தார்.

கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு விஜயம்செய்த உயர்கல்வி அமைச்சர் அங்கு பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள், விரிவரையாளர்கள், மாணவர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நீங்கள் பிறக்கும்போதே வடகிழக்கில் இருந்த ஒரு யுத்த சூழ்நிலையில் தான் நீங்கள் பிறந்திருந்தீர்கள். நீங்கள் பிறக்கும்போதே தெற்குடன் ஒரு யுத்தமயமான சூழ்நிலையில்தான் பிறந்தீர்கள், நீங்கள் பிறக்கும்போதே தெற்கு தொடர்பில் ஒரு பயம் ஒரு பீதியுடன்தான் பிறந்துள்ளீர்கள் ஆகவே அந்த சூழ்நிலையில் பிறந்துவளர்ந்த பிள்ளைகளாகத்தான் நீங்கள் இருக்கின்றீர்கள்.

ஆகவே அந்தப்பிரச்சினைகளை எமது மனங்களில் இருந்து அகற்றிக்கொள்வதற்கு சிறிதுகாலம் செல்லும். ஒரு குழந்தை பிறந்து வளரும் சூழலுக்கு ஏற்றால்போல்தான் அந்த குழந்தையின் நடவடிக்கையும் அமையும்.அதேபோல் தாங்கள் படித்த வாழ்ந்த சூழ்நிலையை கொண்டுதான தாங்கள் எடுக்கின்ற தீர்மானங்களும் அமைந்திருக்கும்.

எங்களது இராணுவத்தினருடன் நேருக்கு நேர்நின்று போர்புரிந்த பிரதியமைச்சர் முரளிதரன், இராணுவத்தினருடன் போர்புரிந்த தனது உள்ளத்தினை மாற்றிக்கொள்ள முடிந்துள்ளது. ஏனென்றால் கருணா அம்மான் பிறந்தது ஒரு ஐக்கிய இலங்கைக்குள். அவருக்கு இலங்கை தொடர்பிலும் இலங்கை மக்கள் தொடர்பிலும் சிங்கள மக்கள் தொடர்பிலும் நன்றாக தெரியும் அதனால் அவரது மனதை அவர் மிகவிரைவாக மாற்றிக்கொண்டார்.

ஆனால் அந்த அனுபவம் அந்த உணர்வு சிறிதளவேணும் உங்களிடம் இல்லை. நாங்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து வந்தவர்கள். இந்தியாவின் தெற்கு மற்றும் கேரளப்பகுதியில் இருந்து எமது மக்கள் இங்கு வரும்போது அனேமானவர்களை விஜய அரசன் அழைத்துக் கொண்டுவந்தார். என்றார். பிரதியமைச்சர் வி.முரளீதரன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் உட்பட் பலர் உரைநிகழ்த்தினர். இப்பல்கலை கழகத்திலிருந்து பொலிஸ் காவலரணை அகற்றுமாறு மாணவர்கள் போராட்டம் நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது

gtn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.