Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கின் வசந்தம்: அழகிய தமிழ் மகன் அழகிய தமிழ் மகள் போட்டி

Featured Replies

சனிக்கிழமை , ஏப்ரல் 23, 2011

வடக்கின் வசந்தம் ஆதரவுடன் பிரபல தென் இலங்கை இசைக்குழுக்கள், தென் இந்திய கலைஞர்கள் ஆகியோருடன் மகாராஜா குழுமம் இணைந்து வன்னி முழுவதும் சித்திரை விழா என்ற பெயரில் களியாட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். களியாட்ட நிகழ்ச்சி சமூக ஆற்றுப்படுத்தல் என்ற பெயரில் நடக்கின்றது. இன்று முல்லை கடற்கரை மைதானத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. இதில் மக்களுக்கு இனாமான பரிசுகள் ஐஸ்கிரீம், இனிப்பு பண்டங்கள் குளிர்பானங்கள் ஆகியவற்றை வழங்கி சிறார்களை கூடுதலாக வரவளைத்து விளையாட்டுப்போட்டிகளும் நடக்கின்றன.

இதில் ஒரு வித்தியாசமான போட்டி நடந்தது அதுதான் அழகிய தமிழ் மகன் மற்றும் அழகிய தமிழ் மகள் போட்டி இதில் இளையோரை பங்குபற்ற வைத்து அதனை வீடியோ எடுத்த இலங்கை அரச ஊடகம் மக்கள் முப்பது வருடத்தின் பின்னர் சந்தோசமாக வாழ்வதாக ஒளிபரப்பிய வண்ணம் இருக்கின்றது.

இது ஒரு புறம் இருக்க இங்கு சிவில் மற்றும் சீருடைகளில் பிரசன்னமாகி இருந்த சிங்கள கூலிப்படைகள் மாணவர்களிடமும் மக்களிடமும் மஹிந்தவிற்கு ஆதரவாகவும் ஐக்கிய நாடுகளின் நடவடிக்கைகள் எமது சந்தோசத்தை கெடுக்கும் என்ற தொனியில் கேள்வி பதில்களை எடுத்து பதிவு செய்து வருகின்றனர்.

இவ்வாறான நிகழ்வுகளில் பங்குபற்றாவிட்டால் தமக்கு வரவேண்டிய நிவாரணங்கள் வராமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் அவர்களின் விளையாட்டுகளுக்கு நாம் பங்குபற்றுகின்றோம் என மக்கள் சிலர் கூறினர்.

இதே வேளை வினோத உடைப்போட்டியில் சிலர் போரினால் பாதிப்புற்றவர்கள் போன்றும் அகதி வாழ்க்கை போன்றும் வேடமணிய முற்பட்ட வேளை அவர்களை அப்படி செய்ய வேண்டாம் என்றும் மாறாக அவர்களுக்கு நாய் மற்றும் குரங்கு அத்துடன் வேடுவ வேடமும் செய்யுமாறு உள்ளூர் அரச ஊழியர்கள் சிலரால் ஆலோசனை கூறப்பட்டதாம்.

விளையாட்டுக்கு கூட அரசுக்கு எதிரான கருத்தை சொல்லமுடியாத அளவிற்குத்தான் அரசாங்கத்தின் கெடுபிடி இருக்கின்றது என கூறினார் இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றிய பொதுமகன் ஒருவர்.

சாப்பாட்டிற்கு கூட வழி இல்லை, இன்னும் சொந்த காணிக்கு நாங்கள் போகவில்லை, இந்த சித்துவத்தில அழகிய தமிழ் மகன் அழகிய தமிழ் மகள் போட்டி எமக்கு தேவையா தம்பி என கூறினார் ஒரு தகப்பன்.

விளையாட்டும் வேணும் களியாட்ட நிகழ்ச்சியும் செய்யலாம் ஆனால் அதனை நாங்கள் மக்கள் செய்யவேண்டும். இதுக்கெல்லாம் எதற்கு அரசபடைகளும் அமைச்சர்களும் என்று அதிர்ப்தியுடன் தனது தொலைபேசியை நிறுத்திக்கொண்டார் முல்லைத்தீவு அளம்பில் கிராமத்தை சேர்ந்த பொதுமகன்.

ஈழ நாதம்

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஒரு வித்தியாசமான போட்டி நடந்தது அதுதான் அழகிய தமிழ் மகன் மற்றும் அழகிய தமிழ் மகள் போட்டி இதில் இளையோரை பங்குபற்ற வைத்து அதனை வீடியோ எடுத்த இலங்கை அரச ஊடகம் மக்கள் முப்பது வருடத்தின் பின்னர் சந்தோசமாக வாழ்வதாக ஒளிபரப்பிய வண்ணம் இருக்கின்றது.

அழகுப்போட்டி நடத்தி இளம் வயதினரை ஏலத்தில் விடவா போகின்றார்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.