Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மிருசுவில் படுகொலை நடந்த இடத்திற்கு நீதிபதிகள் குழு இன்று விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மிருசுவில் படுகொலை நடந்த இடத்திற்கு செல்கிறது நீதிபதிகள் குழு!

Posted by uknews On April 26th, 2011 at 12:09 pm

மிருசுவிலில் இடம்பெற்ற கூட்டுப்படு கொலை புதைகுழியைப் பார்வையிட கொழும் பிலிருந்து நீதிபதிகள் குழாம் நாளை யாழ்ப்பாணத்திற்கு வரவுள்ளது.இரண்டு குழந்தைகள் உள்ளிட்டட எட்டு பேர் கூட்டாகக் படுகொலை செய்யப்பட்டு மிருசுவிலில் புதைக்கப்பட்டமை தொடர்பான வழக்கிற்காகவே இந்த நீதிபதிகள் குழு இங்கு வருகின்றது.

2000ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினமொன்றில் மிருசுவில் வாசியான ஞானபாலன் ரவிவர் மன் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட எட்டுப்பேரை கொன்றது தொடர்பாக 5 இரா ணுவத்தினருக்கு எதிராக ஏற்கனவே வழக்குத் தொடரப்பட்டுள்ளது.வழக்கு தற்போதைக்கு ட்ரையல் அட்பார் முறையில் மூன்று நீதிபதிகள் குழாவினால் விசாரிக்கப்படுவதுடன் வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் சம்பவம் இடம்பெற்ற இடத்தை நேரடியாக பார்வையிட்டு மேலதிக விபரங்களை சேகரித்து கொள்ளவுள்ளனர்.

அத்துடன் வழக்கின் சாட்சிகளான யாழ். மாவட்ட நீதிபதி, சாவகச்சேரி நீதிபதி, தற்போதைய வெல்லவ காவற்துறையில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் பிரதான காவற் துறை பரிசோதகர் ஆகியோரையும் நாளை சம்பவம் நடந்த இடமான மிருசுவிலுக்கு விஜயம் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிமன்றம் கேட்டுள்ளது. இந்த கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட் டுள்ள 5 இராணுவத்தினரையும் கொழும்பி லிருந்து சம்பவ இடத்துக்கு அழைத்துச்செல்லும் பொறுப்பை வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

வழக்கு விசாரணைக்காக வரும் சாட்சிகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள், நீதிபதிகள் ஆகியோரின் பாதுகாப்பை உறு திப்படுத்துமாறு யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சரிதம்

Edited by கறுப்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிருசுவில் படுகொலை நடந்த இடத்திற்கு நீதிபதிகள் குழு இன்று விஜயம்!

Posted by uknews On April 28th, 2011 at 5:45 am /

2000ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரணை செய்வதற்கு நீதவான் அடங்கிய குழு ஒன்று நேற்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. இக்குழுவினர் வியாழக்கிழமை சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிடவுள்ளனர். இதற்கேற்ப இப்பகுதி இராணுவம் மற்றும் பொலிசாரினால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மிருசுவிலில் படுகொலை செய்யப்பட்ட மிருசுவில் வாசியான ஞானபாலன் ரவிவர்மன் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 8 பேரை கொலை செய்தமை தொடர்பாக 5 இராணுவத்தினருகு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இவ்வழக்கு விசாரணைகள் ட்ரைறர் அட்பார் முறையில் 3 நீதிபதிகள் குழுவினரால் விசாரிக்கப்படுவதுடன் வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் சம்பவம் நடைபெற்ற இடத்தை நேரடியாகப் பார்வையிட்டு மேலதிக விபரங்களைச் சேகரிக்கவுள்ளனர். அத்துடன் வழக்கின் சாட்சிகளான யாழ் மாவட்ட நீதிபதி, சாவகச்சேரி நீதிபதி தற்போதைக்கு வெல்லவ பொலிஸ் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் பிரதான பொலிஸ் பொறுப்பதிகாரியையும் சம்பவ இடமான மிருசுவிலுக்குச் சென்று பார்வையிடுமாறு கொழும்பப் பிரதான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன் பிரகாரம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இக் குழு இன்று 28.04.2011 சம்பவஇடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொள்ளவுள்ளது.

saritham

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.