Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடித்து கொல்லப்பட்ட கேணல் ரமேஷ் படுகொலை: புதிய ஆதாரம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடித்து கொல்லப்பட்ட கேணல் ரமேஷ் படுகொலை: புதிய ஆதாரம் !

Thursday, April 28, 2011, 2:49

சிறீலங்கா, தமிழீழம்

தமிழீழவிடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண சிறப்புத் தளபதி கேணல் ரமேஷ் வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, அடித்துக் கொல்லப்பட்டிருப்பதாக புதிய போர்க்குற்ற ஆதாரங்கள்

வெகுவிரைவில் மேலும் பார்க்க முடியாத போர்குற்ற படங்கள் வெளியிடப உள்ளோம்..வெளியாகியுள்ளதாக, நிழற்படத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்தச் செய்தியில், குறிப்பிட்ட படத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் அடையாளம் காட்டி உறுதிசெய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போரின் இறுதிக் காலப்பகுதியில் மக்களுடன் மக்களாக, அல்லது சரணடையச் சென்ற பா.நடேசன் ஆகியோருடன் இலங்கைப் படையினரது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் சென்றதாக நம்பப்படும் கேணல் ரமேசை படையினர் தடுத்து வைத்திருக்கும், மற்றும் கடும் தொனியில் விசாரணை செய்யும் காணொளிகள் முன்னர் வெளிவந்திருந்தன.

நாம் வெளியிட்ட போர்குற்ற படங்கள்

இராணுவத்தினர் அவரிடம் விசாரணை நடத்தும் காணொளிகள் வெளியாகியுள்ள நிலையில், இப் புகைப்படமானது வெளியாகியுள்ளது. கேணல் ரமேஸ் உயிருடன் இருக்கின்றரா இல்லையா என்ற சர்ச்சை நீடித்துவந்த பின்புலத்தில் வெளியாகியுள்ள இந்த நிழற்படம் மற்றொரு முக்கிய போர்க்குற்ற ஆதாரமாகும். தற்போது மீண்டும் ஒருமுறை சர்வதேசத்துக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது இலங்கை இராணுவத்தின் அகோரமான போர் குற்றங்கள். இப் புகைப்படமானது இலங்கை இராணுவத்தின் கொடூரங்களைக் கோடிட்டுக்காட்டுகிறது.

(2ம் இணைப்பு)

கேணல் ரமேஷ் அவர்களை இலங்கை இராணுவம் மே மாதம் 22ம் தேதி விசாரணைக்கு உட்படுத்தியது. அப்போது எடுக்கப்பட்ட காணொளிகள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. அதில் ரமேஷ் அவர்கள் சாதாரன உடையில் இருந்தார். ஆனால் விசாரணை நடைபெறும் வேளை அவரை இலங்கை இராணுவம் இராணுவ உடையை போடச் சொல்கிறது. அதனை அடுத்து அவர் இராணுவத்தின் சீருடையை அணிகிறார். அக் காட்சிகள் தெள்ளத் தெளிவாக பதிவாகியுள்ளது. இராணுவத்தின் சீருடையை அவர் அணியும்போது அவரை “டேய்” என்று இராணுவம் கூறி அழைத்து அவமானப்படுத்துகிறதும் பதிவாகியுள்ளது. அப்போது அவர் அணிந்த இராணுவ உடையில் தான் அவர் இறந்து கிடக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

தாம் அவரைக் கொல்ல இருக்கிறோம் என்பது இராணுவத்துக்கு நன்கு தெரியும். ஏதோ அவரிடம் முழுப்பெயரைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, அதனை எழுதி விசாரணை நடத்துவது போல நாடகமாடியுள்ளது இலங்கை இராணுவம். சரணடைந்த தன்னை இராணுவம் கொல்லாது என நினைத்த தளபதி ரமேஷ் அவர்களை இலங்கை இராணுவம் கடுமையாக தாக்கி கொலைசெய்துள்ளது. இது ஒரு அப்பட்டமான போர்குற்றமாகும்.

ப.நடேசனோடு மற்றுமொரு ரமேஷ் (இளங்கே) இலங்கை இராணுவத்திடம் சரணடைந்துள்ளார். இவர் தமிழீழ காவல்துறையின் பொறுப்பாளார் ஆவார். அவரின் நிலை என்ன என்பது குறித்து இன்னும் செய்திகள் வெளியாகவில்லை. ப.நடேசன் உட்பட தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் ரமேஷ் அவர்களும் இலங்கை இராணுவத்திடம் மே 18 காலை சரணடைந்ததாக பாலித கோஹன முன்னர் தெரிவித்திருந்தார். ஆனால் பின்னர் அதனை அவர் மறுத்துவிட்டார். ஐ.நா அதிகாரி விஜய் நம்பியாரின் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த, சரணடைவு நிகழ்வுகள் கொடூரமான வகையில் முடிவுக்கு வந்துள்ளது. சரணடைந்த பலர் தற்போது உயிரோடு இல்லை. இதற்கு விஜய் நம்பியார் என்ன பதில் சொல்லப்போகிறார் ?

http://www.tamilthai.com/?p=15865

  • கருத்துக்கள உறவுகள்

போராடப் புறப்பட்ட வேங்கைகள் நீங்கள்!

போர்க்களத்தில் இறந்திருந்தால்

புனிதர்களாக நினைத்திருப்போம்!!!

கோழிக் குஞ்சுகளாய், நீங்கள் கொல்லப் பட,

வல்லூறுகளைத் தேடி வேட்டையாடும் காலம்

விரைந்தோடி வரட்டும் !!!

அதுவரை, உங்கள் ஆத்மாக்கள்

அணையாத விளக்குகளாய்

எங்கள் மனங்களில் என்றும் எரியட்டும்!!!

Edited by Punkayooran

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேணல் ரமேஷ் உடலத்தை மனைவி உறுதிப்படுத்தினார் !

Thursday, April 28, 2011, 13:04

இலங்கை படைகளால் அடித்து, வதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண சிறப்புத் தளபதி கேணல் ரமேசின் உடலத்தை அவரது மனைவி

வத்சலாதேவி துரைராஜசிங்கம் உறுதிப்படுத்தியுள்ளார். மெல்லிய உடல்வாகுகொண்ட கேணல் ரமேஸ் அவர்களை படையினர் அடித்துப் படுகொலை செய்திருப்பதால், அவரது முகம் மற்றும் உடல் வீங்கிய நிலையில் இருந்ததால் உடலத்தை உறுதிப்படுத்துவதில் சில சந்தேகங்கள் நிலவிய பின்புலத்தில் உடலத்தை மனைவி தற்போது அடையாளம் காட்டியுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தாயான திருமதி வத்சலாதேவியின் பாதுகாப்புக் கருதி அவர் இருக்கும் இடம், மற்றும் சில தகவல்கள் தவிர்க்கப்படுகின்றன. .

http://www.tamilthai.com/?p=15964

A UK based freelance journalist, Para Prabha, told TamilNet Thursday that the wife of Col. Ramesh, Vathsala Thurairasasingham, who has fled the island, was prepared to give evidence verifying the identity of her husband in any international investigation.

http://www.tamilnet.com/img/publish/2011/04/Vathsala_Thurairasasingham_int.mp3

According to an earlier leaked video footage, filmed while Sri Lanka Army soldiers were interrogating the former Tiger commander on 22 May 2009, Col. Ramesh confirmed his identity as Thurairasasingham Thambirajah, born on 18 August, 1964, in Arasadith-theevu, Kokkaddichchoalai of Batticaloa district.

The earlier leaked video footage also documented that Mr. Thurairasasingham in civil clothes was captured by the SLA and was instructed to change into military uniform while he was being interrogated on 22 May 2009.

Ramesh, a father of three children, was a special commander of the Tigers and had been in the LTTE since 1986.

The video evidence also showed identifiable faces of the SL military personnel involved in the interrogation of Col. Ramesh.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33871

Edited by akootha

எப்படி இருந்த நாங்கள் இப்படி ஆக்கிட்டம் :(

இந்த தளபதிகள் தமக்கு இதுதான் இறுதி முடிவு எனத்தெரிந்தே தலைவரின் வேண்டுகோளை ஏற்று அதை சாதித்த மாவீரர்கள்.

தம்மிடம் சரணடைந்த இல்லை தம்மால் கைப்பற்றப்பட்ட சிங்கள வீரர்களை இறுதிவரை காப்பாற்றியவர்கள் புலிகள். ஐ.நா. சாசனங்களில் கையெழுத்திட்ட ஒரு அரசு சென்ற விதத்தில் சிங்களம் ஜெனீவா யுத்த சாசனங்களை அப்பட்டமாக மீறியுள்ளது. அதற்கு தண்டனையை அந்த அரசுக்கு பெற்றுகொடுப்பதுடன் மட்டுமல்லாது எமது மக்களின் நிரந்தர விடிவுக்கும் உழைக்கவேண்டிய நேரம் இது.

நாம் இந்த போர்க்குற்றங்களை உலகத்திற்கு கூறவேண்டியவர்கள். இப்படிபட்ட ஒரு அரசுடன் இனிமேலும் எம்மை சேர்ந்து வாழுங்கள் என்று எவ்வாறு கேட்பீர்கள்? எம்மை பிரிந்து தனியே வாழ வழிசமைத்து தாருங்கள்!, என கேட்போம், போராடுவோம்.

வேதனைகளையும் சோகத்தையும் தாங்கி அடுத்தகட்டத்திற்கு நாம் செல்லவேண்டும்.

முடிந்தால் இந்த இருபடங்களையும் அருகருகே இணைத்து உரியவர்களுக்கு அனுப்பி வைத்து நீதி கேட்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.