Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளி மகனை விடுதலை செய்ய கோரிய மனு நிராகரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் போராளி மகனை விடுதலை செய்ய கோரிய மனு நிராகரிப்பு

Thursday, April 28, 2011, 3:58

இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கான வவுனியா புனர்வாழ்வு நிலையம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகன் சட்ட விரோதமாக அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதனால் அவரை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி, வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாயார் ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு ஒன்று நீதிபதியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது என பீபீசி அறிக்கை வெளியிட்டுள்ளது.

வவுனியா தர்மபுரம் புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது மகன் மல்லாவியில் படப்பிடிப்பாளராகத் தொழில் செய்து கொண்டிருந்தபோது, கடந்த 2006 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அவரைப் பலவந்தமாக அழைத்துச் சென்றிருந்ததாகவும், ஆயினும் அவர்களிடமிருந்து அவர் தப்பி வந்து தலைமறைவாக வாழ்ந்து வந்ததாகவும், அவர் எந்தவிதமான ஆயுதப் பயிற்சியும் பெறாத குற்றமற்றவர் என்பதால் அவரை விடுதலை செய்து, தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அந்தத் தாயார் தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஜே.விசுவநாதன் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, பிரதிவாதிகளாகிய இராணுவ தரப்பினரால், இந்த இளைஞன் விடுதலைப்புலிகள் அமைப்பில் ஓர் உறுப்பினராக இருந்தார் என்றும், இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் வந்தபோது, ஓமந்தையில் வைத்து இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும் கூறப்பட்டு, அதற்கான பதிவு அத்தாட்சியும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

சரணடைந்தவர்களுக்கான புனர்வாழ்வு நிலையம் ஒன்றில் அவரது எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான புனர்வாழ்வுப் பயிற்சி அவருக்கு வழங்கப்பட்டு வருவதாக இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை குடும்பத்தினர் அவரைப் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுவதாகவும், பிரதிவாதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இளைஞன் எங்கு வைக்கப்பட்டிருக்கின்றார், எவ்வாறு இருக்கின்றார் என்பது பற்றிய சகல விடயங்களும் அவரது பெற்றோருக்குத் தெளிவாகத் தெரியும். எனவே, அவர் தொடர்பாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அரச தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகிக்கும் ஜனாதிபதியின் கையெழுத்துடன் கூடிய உத்தரவுக்கமைய அவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார். அவசரகாலச் சட்ட விதிகளின் கீழ் பாதுகாப்பு அமைச்சராகிய ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தடுப்புக்காவல் உத்தரவை எந்த காரணத்தைக் கொண்டும் நீதிமன்றத்தில் கேள்விக்கு உட்படுத்தப்பட முடியாது என்றும் அரச தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருகின்றது.

ஆயினும், சரணடைந்தவர்கள் தொடர்பாக கடந்த 12.09.2006 இல் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியின் பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்ட ஒழுங்கு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு முரணாக இந்த இளைஞன் நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக மனுதாரர் தரப்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

எனவே, இது அவரது அடிப்படை உரிமையை மீறிய செயல் என்பதால், அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்த வழக்கை உயர் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்த வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் ஆஜாகியிருந்த வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஜே.விஸ்வநாதன், இந்த இளைஞன் சட்ட விதிகளுக்கமையவே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 10 ஆம் பிரிவுக்கமைய பாதுகாப்பு அமைச்சரின் தடுப்புக்காவல் உத்தரவு இறுதியானது என்பதாலும், இந்த வழக்கை மனுதாரர் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்துமாறு கோரியிருப்பது பொருத்தமற்றது எனக் கூறி இந்த மனுவைத் நிராகரித்துள்ளார்.

tamilthai.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.