Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா அறிக்கைக்கு பின்னால்: ஒரு மாற்றுப் பார்வை

Featured Replies

ராஜபக்சவின் அரசவைக் கோமாளியான, விமல் வீரவன்ச: "ஐ.நா. நிபுணர் குழுவுக்கு புலி ஆதரவு அமைப்புகள் லஞ்சம் கொடுத்திருப்பதாக..." வாய்க்கு வந்த படி உளறுகிறார். பணக்கார நாடுகளே ஐ.நா.வுக்கு நிதியுதவியளிக்கின்றன என்பது ஆரம்ப பாடசாலை மாணவனுக்கே தெரிந்த விடயம். மேற்குலகை நேரடியாக எதிர்க்க திராணியற்ற சிங்களப் பேரினவாதிகளின் வாய்ச் சவடால்களுக்கு ஐ.நா.

மிரண்டு விடப் போவதில்லை. சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும் உண்மையான பிரச்சினையை மக்களுக்கு அறிய விடாமற் செய்வதில் வல்லவர்கள்.

"ஐ.நா. சபை தமிழர்கள் மீது இரக்கப்பட்டு போர்க்குற்ற விசாரணை நடத்தப் போவதாக", தமிழ் இனவாதிகள் பரப்புரை செய்கின்றனர். "ஐ.நா. விசாரணை, தேசத்திற்காக போராடி மரித்த இராணுவவீரர்களின் தியாகத்தை கொச்சைப் படுத்துவதாக", சிங்கள இனவாதிகள் பரப்புரை செய்கின்றனர். "அமெரிக்காவினால் கூட வெல்ல முடியாத பயங்கரவாதத்தை நாங்கள் அழித்து விட்டதால் பொறாமை கொண்ட நாடுகளின் செயல்", என்று இலங்கை அரசு விளக்கம் கொடுக்கின்றது. எல்லோருக்கும் அவரவர் நியாயம் மட்டுமே முக்கியமாகப் படுகின்றது.

உள்நாட்டுப் பிரச்சினையில் அந்நிய நாடுகளோ, ஐ.நா.வோ தலையிடுவதை விரும்பா விட்டால், முன் கூட்டியே அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். அரசு ஏற்படுத்திய நல்லிணக்க ஆணைக்குழுவின் மெத்தனப் போக்கையும், இயலாமையையும் ஐ.நா. சுட்டிக் காட்டியுள்ளமை குறிப்பிடத் தக்கது. தனது படையை சேர்ந்தவர்கள் ஆயினும், குற்றம் செய்தவர்களை தண்டிக்கும் பொறுப்பை இலங்கை அரசு ஏற்றிருக்க வேண்டும். வேடிக்கை என்னவென்றால், அரச படைகளால் கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர்கள் மீது கூட போர்க்குற்ற வழக்குகள் போடப்படவில்லை.

ஏற்கனவே மேற்கத்திய நாடுகளில் அத்தகைய வழக்குகள் நடந்துள்ளன. அந்த நாடுகளில் அகதியாக தஞ்சம் கோரிய முன்னாள் புலிகள் உறுப்பினர்கள் சிலரும், சிங்கள இராணுவவீரர்கள் சிலரும், போர்க்குற்றவாளிகளாக இனங்காணப் பட்டுள்ளனர்.

அவர்களை குற்றவாளிகளாக கருதி, பிற அகதிகளிடமிருந்து வேறு படுத்தி சிறையில் அடைத்து வைத்துள்ளனர். குற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இலங்கையில் இன்னும் தோன்றவில்லை. சிறிலங்கா படையினரின் குற்றங்களை ஒப்புக் கொண்டால் அது புலி ஆதரவுப் பிரச்சாரமாக கருதப்படும். புலிகளின் குற்றங்களை ஒப்புக் கொண்டால் அது சிறிலங்கா அரசு ஆதரவுப் பிரச்சாரமாக கருதப்படும். இரண்டு தரப்பினரும் எதிரும் புதிருமாக நிற்கும் நிலையில், மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை.

ஐ.நா. அத்தகைய நல்லெண்ணத்துடன் நடவடிக்கை எடுத்து வருகின்றதா? தற்போது சமர்ப்பிக்கப் பட்டுள்ள நிபுணர் குழு அறிக்கை ஒரு ஆலோசனை மட்டுமே. போர்க்குற்ற விசாரணை குறித்த முடிவு இனிமேல் தான் எடுக்கப் பட வேண்டும். ஆனால் தன்னிடம் அதற்கான அதிகாரம் இல்லை என்கிறார், ஐ.நா. செயலாளர் பான் கி மூன். இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணையோ, குற்றவாளிகளுக்கான தண்டனையோ இன்னும் பல வருடங்கள் போனாலும் நிறைவேறுமா என்பது கேள்விக்குறி தான்.

அநேகமாக, அடுத்த தேர்தலில் மகிந்த ராஜபக்ச பதவி விலகும் வரையில் காத்திருக்கிறார்கள் போலும். ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அரை மனதுடன் சமர்ப்பிக்கப் படும் விசாரணைக்கான திட்டத்தை, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் எதிர்க்கலாம். அந்த எதிர்ப்பைக் காட்டியே, விசாரணை நடத்தப் படாமல் இழுத்தடிக்கப் பட்டு, இறுதியில் யோசனையை குப்பைக் கூடையில் வீசி விடலாம். யாராவது கேட்டால், ரஷ்யா, சீனா எதிர்த்தன என்று சாட்டுச் சொல்லலாம்.

ஐ.நா. இலங்கை போர்க்குற்றம் பற்றிய அறிக்கை தயாரிக்க வேண்டுமென, பிரிட்டனும், அமெரிக்காவும் வலியுறுத்தி வந்தன. உலகில் பலம் வாய்ந்த நாடுகளான, தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடிய பிரிட்டனும், அமெரிக்காவும் ஐ.நா. பாதுகாப்புச் சபையை மதிப்பதில்லை. ரஷ்யாவோ, சீனாவோ வீட்டோ அதிகாரம் பாவித்து தடுத்தாலும், திட்டத்தை நடைமுறைப் படுத்தும் வல்லமையைக் கொண்டுள்ளன.

சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களை தமிழ் மக்கள் மன்னித்து விடலாம், ஆனால் மறக்கப் போவதில்லை. போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப் படுவதால், தங்களுக்கு கிடைக்கப்போகும் நீதியை விட, இனப்பிரச்சினை தீர்க்கப் படுவதையே தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அமெரிக்க அரசும், பிரிட்டனும் தமது நாடுகளில் வதியும் தமிழர் பிரதிநிதிகளை அழைத்துப் பேசியுள்ளது. விடுதலை புலிகளின் கொள்கைகளை புலத்தில் முன்னெடுக்கும் அமைப்புகளை சேர்ந்தவர்கள், சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களை காட்டும் ஆதாரங்களை வைத்திருப்பார்கள் என்ற எண்ணத்திலேயே அவ்வாறு நடந்து கொண்டுள்ளது.

போர் நடந்த காலத்தில் சிறிலங்கா அரசுக்கு துணை நின்று புலிகளை அழித்த நாடுகளுக்கு, தமிழர்கள் மேல் திடீர் கரிசனை வந்து விட்டது, என்று சிலர் நினைக்கலாம். முன்னாள் ஆங்கிலேயக் காலனியான இலங்கையில், சிங்களத் தேசியத்தையும், தமிழ்த் தேசியத்தையும் அவர்களே வளர்த்து விட்டார்கள். இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் கொதிநிலைக்கு வந்து, யுத்தம் நடந்து கொண்டிருக்கையில் ஆயுதம் விற்று இலாபம் சம்பாதித்தார்கள். அமெரிக்காவும், பிரிட்டனும் தங்கள் நலன் சார்ந்தே சிந்திக்கின்றனர், செயற்படுகின்றனர். போர்க்குற்ற குற்றச்சாட்டில் சிறிலங்கா அரசை சிக்க வைப்பது கூட, தமிழர் நலன் சார்ந்தல்ல. நாம் எப்போதும் இனத்தை மையப் படுத்தியே சிந்தித்துக் கொண்டிருப்பதால், பொருளாதாரப் பிரச்சினைகளை புறக்கணிக்கின்றோம்.

சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில், புலிகள் மட்டுமே தீர்வுக்கு தடையாக இருக்கின்றனர் என்று, சிறிலங்கா அரசு சர்வதேச சமூகத்தை நம்ப வைத்திருந்தது. (ஸ்கண்டிநேவிய கண்காணிப்பாளர்கள் பதிவு செய்த யுத்த நிறுத்த மீறல்களில் அதிகமானவை புலிகளுடையவை.) சமாதானப் பேச்சுவார்த்தையில் எட்டப்படும் உடன்படிக்கையின் பிரகாரம், புலிகளும், அரசும் அதிகாரத்தை பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்த்தது.

புலிகள் மீண்டும் போருக்கு தயாரானால், தாங்கள் சிறிலங்கா அரசுக்கு வேண்டிய உதவிகளை செய்யப் போவதாக அமெரிக்க தூதுவர் அறிவித்திருந்தார். "எத்தனை ஆயிரம் மக்கள் மடிந்தாலும் பரவாயில்லை. ஈழப்போர் இனிமேல் தொடரக் கூடாது." என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடாக இருந்தது. மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அதனை எதிர்பார்த்தன. உலகில் தீராத போர் நடக்கும் நாடுகளில் இருந்து அகதிகள் வந்து குவிவதை தடுப்பது, அவர்களது முக்கிய நோக்கமாக இருந்தது. ஏற்கனவே அதிக அகதிகளை உற்பத்தி செய்து அனுப்பிக் கொண்டிருந்த பொஸ்னியா, ஈராக், ஆப்கானிஸ்தான், சியாரா லியோன் போன்ற நாடுகளில் நடந்த போர்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

விடுதலைப் புலிகள் யாருடைய சொல்லுக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமான முடிவுகளை எடுக்கும் திறனைக் கொண்டிருந்தமை, மேற்கத்திய நாடுகளை எரிச்சலூட்டியது எனலாம். புலிகள் அமைப்பை வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் தூக்கிப் போட வேண்டும் என்று, அவை முடிவெடுத்தன.

உலகில் எந்தவொரு நாடும் புலிகளை ஆதரிக்கவில்லை. ஆனால், அந்த அமைப்பின் உயிர்நாடியான நிதி சேகரிப்பு முதலாளித்துவ நாடுகளிலேயே இடம்பெற்றது. சர்வதேச மூலதனத்தை கட்டுப்படுத்தும் அமெரிக்காவுக்கு அதனை தடுப்பது மிகவும் இலகுவானது. மேற்குலக நாடுகள் எடுத்த புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் , சிங்கள பேரினவாத சக்திகளை உற்சாகப் படுத்தின. அதே சர்வதேச மூலதனத்துடன் பின்னிப் பிணைந்துள்ள சிறிலங்கா அரசின் மீது பொருளாதாரத் தடைகள் கொண்டு வருவதும் இலகுவானது என்பதை அவர்கள் அன்று உணரவில்லை. ஐ.நா. நிபுணர் குழு சமர்ப்பித்த போர்க்குற்ற அறிக்கை, அந்த சூட்டைக் கிளப்பியுள்ளது.

http://akkinikkunchu.com/new/

Edited by சிறிலிங்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.