Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் அமைச்சர்களுக்கு யாழ் மைந்தனின் பகிரங்க மடல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அமைச்சர்களுக்கு யாழ் மைந்தனின் பகிரங்க மடல்!

வெள்ளி, 29 ஏப்ரல் 2011 21:14

வடக்கின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே கிழக்கின் அமைச்சர் கருணா அம்மான் அவர்களே உங்கள் இருவருக்கும் எனது அன்பான வேண்டுகோள்!

போராட்ட காலத்தில் தமிழினத்துக்கு துரோகம் செய்தீர்கள் அதனால் முள்ளிவாய்க்காலில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களை சிறிலங்கா அரசாங்கம் வேண்டுமேன்றே திட்டமிட்டு குண்டுகள் வீசி கொலையும் செய்தனர்.

தாயின் முன்பு தனையனும் தங்கையின் முன்பு அக்காவும் அம்மாவின் முன்பு அப்பாவும் கொலை செய்யப்பட்ட கொடுரத்தைக் கண்ட வன்னி மண் அந்த கொடுமைகளை எண்ணி இன்றும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் போது அந்த கண்ணீருக்கே காரணமாவர்களை நீங்கள் காப்பாற்ற நினைப்பது இழந்த எம் உறவுகளுக்கு நீங்கள் மீண்டும் செய்யும் மகா துரோகமே.

வடகிழக்கு தாயகத்தில் கடந்த முப்பது வருடகால யுத்தத்தில் எம்மினம் உலகில் எவ்வினமும் சந்திக்காத துன்பங்களை எதிர்கொண்டது. இன்று எத்தனை பெண்கள் விதவைகளாக எத்தனை குழந்தைகள் அநாதைகளாக வாழ்கிறார்கள்.

எமதினத்தின் வருங்காலமே இந்த அரசால் கேள்விக் குறியாக்கப்பட்ட நிலையில் அரசாங்கத்தின் அட்டகாசம் இன்றாவது உலகால் உணரப்பட்டு எமதினத்துக்கு ஏதோ விடிவு கிடைக்கும் நிலைமை உருவாகுகையில் அதனை நீங்கள் குழப்பும் வகையில் உங்களின் நலனுக்காக செயற்படுவது நல்லதா? உங்களின் மனட்சாட்சியை தொட்டுக் கேளுங்கள்.

உங்களுக்கு விடுதலைப்புலிகளை பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் தமிழ் மக்களுக்கு மீண்டும் மீண்டும் துரோகம் செய்து கொண்டு சிங்கள அரசுக்கு வால் பிடிப்பதுதான் கவலையாக இருக்கிறது.

அரசாங்கம் செய்த கொடுரங்களை மறுக்கும் வகையிலும் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாய் கொன்று குவிக்கப்பட்டதையும் மூடி மறைக்கவும் கொழும்பில் நடக்கவிருக்கும் மே தினக் கூட்டத்துக்கு பொது மக்களை திரட்ட அரசு முயற்சிக்கிறது.

அவர்கள் சிங்கள மக்களை அழைக்கலாம் ஆட்சேபனை இல்லை. ஆனால் வடக்கு கிழக்கு மக்களையும் எதிர் பார்ப்பது அரசின் முட்டாள் தனம்.

அதற்கு தாளம் போட்டுக் கொண்டு நீங்கள் இங்கிருக்கும் எதுவுமறியாத அப்பாவி பொதுமக்கள் சிலரை பொய் சொல்லி அழைக்க முற்பட்டுக் கொண்டிருப்பதாக அறிகிறோம். நீங்கள் என்ன திருகுதாளம் என்றாளும் செய்யுங்கள் ஆனால் ஆண்டவன் இருக்கிறான் என்பதை மறக்க வேண்டாம்.

நீங்கள் அமைச்சுப் பதவிகளை எடுத்துக் கொண்டு சுகபோக வாழ்க்கை வாழலாம். உல்லாசம் செய்யலாம். ஏன் அரசின் காலில் விழலாம். அல்லது அவர்களை பல்லக்கில் சுமக்கலாம். நாங்கள் உங்களை கோபிகக்கவுமில்லை உதவி செய்யுங்கள் என்று உங்களை கேட்கவுமில்லை ஆனால் உபத்திரம் செய்யாமல் இருங்கள்.

தெய்வம் நின்று கொல்லும் என்ற காலம் மலை ஏறிவிட்டது தெய்வம் அன்றக்கே கொல்லும் காலம்தான் இது.

அரசு கொத்துக் கொத்தாய் குண்டு வீசி எம் உறவுகளை கொன்று குவித்தபோது நாங்களும் எத்தனை நாடுகளை கெஞ்சியிருப்போம். அப்போது யாரும் பாரா முகமாய் இருந்த போது குதுகுலமாய் இருந்த மகிந்தர் இன்று அதே குற்றத்தில் இருந்து தப்புவதற்காக அதே நாடுகளின் கால்களில் விழுந்து திரிகிறார்.

அது மட்டுமா எம்மினத்தின் குருதியை குடித்த குற்றத்துக்காக சரத்பொன்சேகா அநாதரவாய் கூண்டில் வாடுகிறார்.

நீங்கள் உங்களின் சொந்த இனத்துக்கு செய்த துரோகத்துக்கும் பாவத்துக்கும் பிரயாசித்தம் பெறவேண்டுமானால் இனியாவது சிந்தித்து செயற்படுங்கள்.

அரசாங்கம் செய்த பாவத்துக்கு அண்டவன் தண்டனை கொடுக்க இருக்கும் காலத்தில் குறுக்கே விழுந்து ஏன் மண்கவ்வப் போகின்றீர்கள்?

இனியும் உங்கள் துரோகத்தனம் தொடர்ந்தால் தமிழினம் தரணியில் இனி மன்னிக்காது. உலகமே கண்ணீர் விட முள்ளிவாய்க்காலில் ஒன்றுமறியாத பொதுமக்களின் உயிர் கொத்துக்கொத்தாய் இழந்ததை நீங்கள் நியாயப்படுத்த முனைவதை நிச்சயம் வரலாறு மன்னிக்காது.

விலை மதிக்க முடியாத உயிர்களுக்கும் தியாகங்களுக்கும் நிச்சயம் நியாயமான பதில் கிடைக்கும் காலம் நெருங்கிவிட்டது.

தயவு செய்து எனது இந்த மடலை உங்களின் ஊடகத்தில் பிரசுரிக்கவும்.

நன்றி

யாழ் மைந்தன்.

வினாயகமூர்த்தி முரளிதரனுக்கு (கருணாவுக்கு) மட்டுநகர் மக்களின் ஓர் வேண்டுகோள்!

பிரதி அமைச்சர் முரளிதரன் அவர்களே!

30 வருடகால யுத்தத்தில் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் அனுபவித்த துன்ப துயரங்களை நன்கறிந்தவர் நீங்கள் 1990 ஆம் ஆண்டுகளில் கிழக்கு மாகாணத்தில் அரச பயங்கரவாதத்தால் வந்தாறுமூலை, கொக்கட்டிச்சோலை, சத்துருக்கொண்டான் என படுகொலை பட்டியல் நீண்டு செல்வதையும் நீங்கள் அறிவீர்கள். ஆனால் இத்தமிழர் படுகொலைகளுக்கெல்லாம் யார் பொறுப்பு என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

இன்று வடக்கு கிழக்கில் 89000 விதவைகளும் பலநூற்றுக் கணக்கான அனாதைக் குழந்தைகளும் உள்ளதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகின்றது. இதில் கிழக்கு மாகாணத்திலும் கணிசமான இளம் விதவைகள் உள்ளதையும் அதிலும் மட்டக்களப்பிலேயே அதிகளவான விதவைகள் உள்ளதையும் நீங்கள் அறிவீர்கள் இதற்கெல்லாம் யார் பொறுப்பு நீங்கள் இப்போது சொல்லலாம்.

இதற்கெல்லாம் விடுதலைப் புலிகள்தான் காரணம் என்று உங்களின் கூற்றுப்படி அதை ஏற்றுக்கொண்டாலும் அந்த வேளையில் நீங்களும்தானே விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருந்தீர்கள் அத்துடன் மட்டு அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதியாகவும் விளங்கினீர்கள் கிழக்கு மாகாணத்தில் உங்களின் தலைமையில்தானே கட்டாய ஆட்சேர்ப்பு நடைபெற்றது.

இந்த கட்டாய ஆட்சேர்ப்பின் கதாநாயகனும் நீங்கள்தானே. உங்களின் தலமையில் கொல்லப்பட்ட அப்பாவி இளைஞர்களின் இளம் விதவைகளின் எண்ணிக்கை எத்தனை என்பது இன்று உங்களுக்குத் தெரியுமா? இதையெல்லாம் நீங்கள் மறந்துவிடலாம் ஆனால் மட்டுநகர் மக்களாகிய நாம் மறக்கவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

விடுதலைப் புலிகளின் தலமையுடன் கருத்து முரண்பாடு ஏற்பட்டு நீங்கள் விலகி இருக்கலாம் இது உங்களின் தனிப்பட்ட விடயம். அதற்காக ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உணர்வுகளோடும் உரிமைகளோடும் இனியும் நீங்கள் விளையாடக்கூடாது. அதை மட்டுநகர் மக்களாகிய நாம் அனுமதிக்கவும் மாட்டோம். காரணம் நீங்கள் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதி அல்ல. இன்று நீங்கள் வகிப்பது தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்த துரோகத்திற்கு மகிந்த ராஜபக்ச இட்ட பிச்சை என்பதை நாம் அறிவோம்.

முரளிதரன் அவர்களே

நீங்கள் கூறும் சுபீட்சமும் சகவாழ்வும் உங்களுக்கு நன்றாகவே வழங்கியுள்ளதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம் (மகிந்த அரசு) ஆனால் சுபீட்சமும் சகவாழ்வும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ளதாக நீங்கள் சொல்வது கடைந்தெடுத்த சுத்தப்பொய்.

வன்னியில் மர நிழல்களிலும் தறப்பான் கொட்டில்களிலும் வாழ்க்கை நடாத்தும் அப்பாவித் தமிழ் மக்களை பார்த்த பின்பும் இதற்கு நேர் எதிராக மேடைகளில் நீங்கள் பேசுவது தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யும் பச்சைத் துரோகமாகும். வெறும் அபிவிருத்திக்காக மட்டும் எமது மக்கள் போராடவில்லை சுயமானத்தோடும் சுயகௌரவத்துடனும் வாழவே போராடினார்கள். இது உங்களுக்கு எப்படி விளங்கப் போகிறது. நீங்கள்தான் சுயமானத்தை அடகு வைத்துவிட்டு மகிந்த ராஜபக்சவிற்கு சாமரம் வீசுபவராயிற்றே.

முன்னர் ஒரு காலத்தில் இந்த சிங்கள பேரினவாத அரசு தமிழர்களுக்கு எந்த உரிமையும் தரப்போவதில்லை போராடித்தான் எமது உரிமையைப் பெறவேண்டுமென்று வீர முழக்கம் இட்டவர்தானே நீங்கள். இப்போது அன்று நீங்கள் கூறிய அதே சிங்கள பேரினவாத அரசில்தானே அமைச்சராக உள்ளீர்கள்.

இப்போதாவது உங்களால் தமிழர்களின் உரிமையைப் பெற்றுத்தர முடியுமா? நீங்கள் பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம் 2009 மே 18 இன்பின் கைதுசெய்யப்பட்ட சரணடைந்தவர்களின் பெயர் விபரங்களையாவது உங்களால் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் சேர்ந்து கலந்துரையாடி வெளியிட முடியுமா? வாயளவில் வீரம் பேசுவதை விட்டு விட்டு ஏதாவது உருப்படியாக ஒன்றைத்தானும் செய்து காட்டுங்கள்.

அம்மான் அவர்களே

வடக்கு கிழக்கில் அரசு மேற்கொண்ட பயங்கரவாதத்தின் மூலம் ஆயிரக்கணக்காண உயிர்கள் கொல்லப்பட்டதும் உடமைகள் எல்லாம் நாசமாக்கப்பட்டதும் பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர் யுவதிகள் கைதுசெய்யப்பட்டபின் காணாமல் போனதும் பல நூற்றுக்கணக்கான குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டதும் உலகமே அறிந்த உண்மை. இச்சம்பவங்களை சிங்கள அரசுடன் சேர்ந்த நீங்களும் மூடி மறைக்க முயற்சிப்பதை நாங்கள் அறிவோம். அண்மைக் காலங்களில் உங்களின் பேச்சும் செயலும் இதை உறுதிப்படுத்துகிறது.

நீங்கள் வடக்க கிழக்கு மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்பினால் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டவர்கள் விதவைகள் மற்றும் தாய் தந்தையரை இழந்த அனாதைகள் அங்கவீனமுற்றோர் மற்றும் அழிக்கப்பட்ட வீடுகள் என்பவற்றின் உண்மையான தரவுகளை வெளியிடுங்கள் அதுவே போதும். உங்களால் ஒருபோதும் அது முடியாத காரியம் அவ்வாறு உங்களால் உண்மையான தரவுகளை வெயியிடுவதற்கு சிங்கள அரசு அனுமதிக்கவும் மாட்டாது. அத்துடன் இப்படியான தரவுகள் கூட உங்களிடம் இல்லையென்பதும் எங்களுக்கு நன்கு தெரியும் இதை நீங்கள் மறுக்கத்தான் முடியுமா?

சாதாரணமாகப் பெறக்கூடிய இந்த ஆவணங்களைக்கூட கையில் இல்லாத நீங்களெல்லாம் ஐ.நா குழு தயாரித்த அறிக்கையை விமர்சிப்பதும் அதற்கு கண்டனம் தெரிவிப்பதும் ஐ.நா விற்கு எதிராக பலவந்தமாக மக்களைத் திரட்டி போராட அழைப்பதும் மகிந்த அரசுக்கு நீங்கள் காட்டும் அதி உன்னத விசுவாசம் என்பதை மட்டுநகர் மக்கள் நாம் அறிவோம். ஆனால் நீங்கள் செய்யப்போகும் மகிந்த விசுவாசமானது தமிழ் மக்களின் மனங்களில் வெந்த புண்ணில் வேல் பாச்சுவது போல் இருக்குமென்பதை நீங்கள் மறந்துவிட்டீர்கள்.

பிரதி அமைச்சர் அவர்களே

கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை அரசு மேற்கொண்ட பயங்கரவாதத்தின் எச்சங்களாக வன்னி மக்களே சாட்சியாக உள்ளபோது உண்மையை நீங்கள் மறைப்பதை மனச்சாட்சியுள்ள எந்த மனிதனும் அனுமதிக்க மாட்டான்.

ஐநாவிற்கான எதிர்ப்பு ஆற்பாட்டத்தை நீங்கள் நடாத்த விரும்பினால் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஒரு இடத்தில் சிங்கள அரசுடன் இணைந்து நடாத்துங்கள். அதற்கான முழு உரிமையும் உங்களுக்குண்டு. அதை விடுத்து நொந்து போயுள்ள அப்பாவித் தமிழ் மக்களை உங்களின் இராணுவப் பலத்துடன் ஆற்பாட்டம் நடாத்த அழைப்பதை விட்டு விடுங்கள்.

தன்மானமுள்ள தமிழ் அன்னையின் வயிற்றில் பிறந்த எந்த தமிழ் மகனும் இப்படியான ஈனச் செயலை செய்யமாட்டான். இனிமேலாவது அப்பாவித் தமிழ் மக்களை அவர்களின் விருப்பப்படி வாழ விடுங்கள். உங்களின் சுயநலத்திற்கெல்லாம் ஆட்டம்போட மட்டுநகர் மக்கள் ஒன்றும் மாந்தைகள் அல்ல.

இப்படிக்கு

மட்டுநகர்வாழ் தமிழ் மக்கள்

tamilenn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.