Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்ணாவிரதமிருந்துவரும் என் மகனை விடுதலை செய்யுங்கள்: தமிழ்த் தாயின் வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உண்ணாவிரதமிருந்துவரும் என் மகனை விடுதலை செய்யுங்கள்: தமிழ்த் தாயின் வேண்டுகோள்

Saturday, April 30, 2011, 13:45

புதிய மகசின் சிறைச்சாலையில் கடந்த நான்கு நாட்களாக உண்ணா விரதமிருந்துவரும் திரு.அஞ்சலோ என்பவரின் தாயார் திருமதி லில்லி மரியதாஸ் என்பவர் தனது மகனை விடுதலை செய்யக்கோரி நீதி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேலுள்ளவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதத்தின் முழு வடிவம் வருமாறு.

மரியதாஸ் லில்லி

இல : 490

குட்செட் வீதி

தோணிக்கல்

வவுனியா

29.04.2011

கௌரவ நீதி அமைச்சர் அவர்கட்கு

நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சு

கொழும்பு

ஐயா

ஓர் அபலத் தமிழ்த் தாயின் வேண்டுகோள்

எனது மகனான அன்ரனி மரியதாஸ் அஞ்சலோ என்பவர் கடந்த 23.02.2009 இல் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டு எந்தக் குற்றமும் சுமத்தப்படாமல் புதிய மகசின் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

எனது மகன் கைதுசெய்யப்பட்டு 6 மாதங்களின் பின் எனது கணவரும் இறந்துவிட்டார். தந்தையின் ஈமக்கிரியையைக்கூட செய்ய என்மகன் வரவில்லை எனக்கு தற்போது 57 வயதாகின்றது கணவனும் மகனும் இன்றி என் வாழ்க்கையைக் கொண்டுசெல்ல தினம் தினம் நான் படும் துயரம் எண்ணிலடங்காது

கௌரவ அமைச்சர் அவர்களே

57 வயதான என்னால் பிச்சை எடுப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். இதுவரை பொறுமையாக இருந்த என்மகன் தன் விடுதலை கோரி 25.04.2011 திகதி முதல் நீர் ஆகாரமின்றி இன்று நான்காவது நாளாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதை பத்திரிகையில் படித்துவிட்டு கலங்கி நிற்கின்றேன். உண்ணாவிரதமிருக்கும் என் மகனைப் போய்ப் பார்க்கக்கூட எனக்கு எதுவித உதவியுமின்றி அல்லல்படுகின்றேன்.

கௌரவ அமைச்சர் அவர்களே

கடந்த 2010 நவம்பர் 29 இல் நீங்கள் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்தபோது முதலில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றியே உரைநிகழ்த்திநீர்கள் இது தொடர்பாக பாதுகாப்பு செயலாளருடனும் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்று கூறிநீர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எமது உறவுகளின் விடுதலை தொடர்பில் சில அரசியல் அளுத்தங்கள் உங்களுக்கு இருப்பதையும் நான் அறிவேன் இருந்தும் நீதி அமைச்சர் என்ற ரீதியில் நீண்டகாலமாய் தடுத்துவைக்கப்பட்டுள்ள எனது மகனின் விடுதலை தொடர்பிலும் மேலும் நூற்றுக்கணக்கான அப்பாவி இளைஞர் யுவதிகளின் விடுதலை தொடர்பிலும் மனிதாபிமான முறையில் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகின்றேன்.

மேலும் அண்மைய காலங்களில் பிரதம நீதியரசரான அசோக டி சில்வா அவர்களும் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்யவோ அன்றி பிணையில் விடுவிக்கவோ முயற்சி எடுத்துள்ளதை மனமார வரவேற்கின்றேன் அத்துடன் இந்நடவடிக்கையை வெறும் வாய் வார்த்தையில் நிறுத்திவிடாமல் உடனடியாக அமுலுக்குட்படுத்தி எமது பிள்ளைகளை விடுதலை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இப்படிக்கு

உண்மையுள்ள

அ.ம.லில்லி

பிரதி : பிரதம நீதியரசர், அசோக்கடி சில்வா

tamilthai.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.