Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உரிமைகள் உறுதிசெய்யப்படும் வரை வகுப்புப் புறக்கணிப்பு தொடரும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உரிமைகள் உறுதிசெய்யப்படும் வரை வகுப்புப் புறக்கணிப்பு தொடரும் - யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் -

04 மே 2011

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் வகுப்புறக்கணிப்புப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. மாணவர்களின் கோரிக்கைக்கு நிர்வாகம் இணங்கியதையடுத்தே மாணவர்கள் இந்த போராட்டத்தை நேற்று மாலை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர் என்று குளோபல் தமிழ் செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவிக்கிறார்.

புதிதாக பதியேற்றுள்ள துணைவேந்தருக்கு நல்லெண்ணத்தை வெளிப்படுத்துமுகமாக அவரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் உறுதி மொழிகளை ஏற்றுக் கொள்ளவதாகவும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்த கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் பொழுது மாணவர்களுக்கு நன்மையான விதத்திலும் நீதியான முறையிலும் மாணவர்களின் பிரச்சினையை பரிசீலித்து உரிய தீர்வை பெற்றுத் தருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த சில நாட்களாக மூன்று கோரிக்கைகளை முன் வைத்து வகுப்புக்களை புறக்கணித்து வந்தனர். சிரேஷ்ட மாணவ ஆலோசகரை மாற்ற வேண்டும், மாணவர்கள் மூவருக்கு வழங்கிய வகுப்புத்தடையை நீக்க வேண்டும், மாணவர் ஒன்றியத்தை பதிவு செய்ய வேண்டும் என்று மூன்று கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்திருந்தார்கள். கடந்த வாரம் (29.04.2011) வெள்ளிக் கிழமை முதல் மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரால் நியமிக்கப்பட்ட மூன்று பேராசிரியர்கள் அடங்கிய குழு மாணவர்களின் கோரிக்கைக்கு சாதகமான பதிலை அளித்துள்ளது. பேராசிரியர் வி.சி. சிவநாதன், பேராசிரியர் எஸ். புஷ்பரட்ணம், கலாநிதி எஸ். ஸ்ரீசற்குணராசா ஆகியோரை உள்ளடக்கிய விசாரணைக்குழு சாதகமான பதிலை அளித்துள்ளதாக நேற்று மாலை அனைத்துப் பீட மாணவர் ஒன்றியங்கள் விடுத்த கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் நிர்வாகத்தினருக்கும் மாணவர் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தையின் பொழுது மாணவர்களின் கோரிக்கைக்கு துணைவேந்தரின் விசாரணைக்குழு எழுத்து மூலம் ஒப்புதல் அளித்து தமது போராட்டத்திற்கான தீரவை உறுதி செய்துள்ளதாக மாணவர் ஒன்றியத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. இதனடிப்படையில் இன்று முதல் மாணவர்கள் விரிவுரைகளுக்கு செல்ல வேண்டும் என்றும் மாணவர் ஒன்றியம் மாணவர்களுக்கு அறிவித்துள்ளது.

உரிமைகள் உறுதிசெய்யப்படும் வரை வகுப்புப் புறக்கணிப்பு தொடரும் - யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் -

01-05-2011 - 16:06

மாணவர்களின் உரிமைகள் உறுதி செய்யப்படும் வரை வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் தொடரும் என்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முடிவெடுத்துள்ளதாக குளோபல் தமிழ் செய்திகளின் விசேட செய்தியாளர் குறிப்பிடுகின்றார். கடந்த வெள்ளிக் கிழமை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று கோரிக்கைகளை முன் வைத்து வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தார்கள். இதனையடுத்து யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் மற்றும் மாணவ ஆலோசகர் முதலியோர் அடங்கிய உயர் குழு ஒன்று மாணவப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது.

அந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததை அடுத்து இந்தப் போராட்டம் தொடர்வதாகவும் நாளை திங்கட் கிழமை முதல் தொடர்ந்தும் நடைபெறும் என்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று மாலை விடுத்த அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது என்று குளோபல் தமிழ் செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவிக்கிறார்.

மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முகமாக யாழ் பல்கலைகழக துணைவேந்தர் நடத்திய பேச்சுவார்த்தையின் பொழுது மாணவர்கள்மீது கடும் அதிகாரத்தொனியுடன் நடந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முhணவர்கள் இவ்வாறான போராட்டங்களை நடத்துவது குற்றம் என்றும் துணைவேந்தர் கடுந் தொனியுடன் தெரிவித்துள்ளார். அன்று மாலை துணைவேந்தர் இந்த விடயங்கள் குறித்து மாணவர்களை எச்சிரிக்கும் தன்மையுடன் அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தார். குறித்த அறிக்கை மாணவர்களின் போராட்டங்கள் தொடர்பில் எந்தச் சாதகமான நிலையையும் வெளிப்படுத்தவில்லை என்று மாணவர் தரப்பால் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் வகுப்புப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பற்றிய விபரங்களை இரவு பகலாக படைத்தரப்பு சேகரித்து வருவது பல்கலைக்கழக சூழலில் பதற்றத்தை தோற்றுவித்துள்ளதாக குளோபல் தமிழ் செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இன்று மாலை இந்த விடயங்கள் தொடர்பில் யாழ் பல்கலைக்ழக மாணவர் ஒன்றியம் நீண்ட அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. சமூகவிரோத சக்திகள் சில மாணவரிடையேயுள்ள ஒற்றுமையைச் சீர்குலைத்தும், மாணவர்களின் போரட்டத்தைச் சீர்குலைத்தும் அதனூடகத் தங்களது சுயஇலாபங்களைத் தேடமுனைகின்றனர். அத்துடன், யாழ் பல்கலைக்கழகத்தை தமிழ் மக்களின் சமூக நிறுவனம் என்ற அந்தஸ்திலிருந்தும், எமது இனத்தின் மீதுள்ள பொறுப்பிலிருந்தும் இல்லாது ஒழித்து, எமது சமூகத்திற்கும், பல்கலைக்கழக சமூகத்திற்கும் இடையிலான தொடர்பினை இல்லாமற் செய்வதற்கும் முயற்சிக்கின்றனர் என்று குறிப்பிடும் அந்த குறிக்கையின் முழுமையான வடிவத்தை இங்கு தருகிறோம்.

கடந்த 29-04-2011 (வெள்ளிக்கிழமை) யாழ் பல்கலைக்கழக அனைத்துப்பீட மாணவர்களும் ஒன்றிணைந்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராகப் போராட்டம் ஒன்றை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றோம். அது தொடர்பிலான விரிவான விளக்கத்தையும், எமது பக்க நியாயத்தையும் சமூகத்தின்மீதுள்ள பொறுப்பினிமித்தம் தெரிவிப்பது கடமையென்று உணர்ந்து இச்செய்திக் குறிப்பை வெளியிடுகின்றோம். எமது பல்கலைக்கழகம், மாணவர்களிற்கு மட்டுமன்றித் தமிழ்ச் சமூகத்தையும் வழிநடாத்திச் செல்லும் சமூக அமைப்பு என்பதைத் தாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வீர்கள் என்றும் நம்புகின்றோம்.

மாணவர்களது போரட்டமானது மூன்று பிரதான – நியாயமான- கோரிக்கைகளை முன்வைத்து, தொடர்ந்த வண்ணமுள்ளது. மாணவர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பின்வருமாறு:

1. மாணவர்களால் தொரிவுசெய்யப்பட்ட மாணவர் ஒன்றியத்தலைவரின் பல்கலைக்கழக உட்;பிரவேசத் தடையை உடன் இரத்துச் செய்யவேண்டும். (இந்தத் தடையானது, நியாயமற்ற முறையில், நீதிக்குப் புறம்பாக, மாணவ ஆலோசகரின் தனிப்பட்ட சுயஇலாபங்களிற்காக மேற்கொள்ளப்பட்டது)

2. மாணவர்களின் நலன்களில் அக்கறையில்லாது, தனது சுயஇலாபங்களிற்களிற்காகச் செயற்படும் மாணவ ஆலோசகரின் பதவியை உடனே நீக்கவேண்டும்.

3. மாணவர் ஒன்றியத்திற்கு, மாணவர்களாகிய எங்களாற் தெரிவுசெய்யப்பட்ட ஒன்றியத்தலைவரை உள்வாங்கி, மாணவர் ஒன்றியம் உடன் மீள ஒருங்கமைக்கப்படுதல் வேண்டும்.

எமது பல்கலைக்கழகமானது எமது மாணவர்களிற்கு மட்டுமன்றி, எமது சமூகத்தையும் வழிநடாத்திச் செல்லும் நிறுவனம் என்பது தாங்கள் அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். எம் மாணவர்களின் ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்காகச் சில சமூகவிரோத சக்திகள் கடந்த காலங்களில் பல தடவைகள் முயன்று வருகின்றமையும் தாங்கள் அனைவரும் அறிந்த விடயமாகும். இன்றும் சமூகவிரோத சக்திகள் சில மாணவரிடையேயுள்ள ஒற்றுமையைச் சீர்குலைத்தும், மாணவர்களின் போரட்டத்தைச் சீர்குலைத்தும் அதனூடகத் தங்களது சுயஇலாபங்களைத் தேடமுனைகின்றனர். அத்துடன், யாழ் பல்கலைக்கழகத்தை தமிழ் மக்களின் சமூக நிறுவனம் என்ற அந்தஸ்திலிருந்தும், எமது இனத்தின் மீதுள்ள பொறுப்பிலிருந்தும் இல்லாது ஒழித்து, எமது சமூகத்திற்கும், பல்கலைக்கழக சமூகத்திற்கும் இடையிலான தொடர்பினை இல்லாமற் செய்வதற்கும் முயற்சிக்கின்றனர். இதற்கு சில மாணவர்கள் அறியாமையினாற் துணைபோவதும் எமக்குப் பெரும் வேதனையளிக்கின்றது. இவ்வாறான செயற்பாடுகளையும், இதன் பின்னாலுள்ள விடயங்களையும் மக்களாகிய நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என எண்ணுகிறோம்.

இதனுடன் தொடர்புடையதாகவே, இன்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நடவடிக்கைகளைக் குழப்பும் விதமாக செயற்படுகின்ற சக்திகளின் ஒர் சதியாகவே, மாணவர்களாகிய எங்களாற் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்ட ஒன்றியத்தலைவரிற்கு வகுப்புத்தடை வழங்கப்பட்டிருக்கின்றது. மேலும், கடந்த பல மாதங்களாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மீள உருவாக்கப்படாமல் இருப்பதற்குப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் அசமந்தப்போக்கே காரணம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம். இப்படியான பல்கலைக்கழக நிர்வாகத்தின் அசமந்தப்போக்கை மாணவர்களாகிய நாம் எவ்வாறு ஏற்பது....?

இதனால், பல்கலைக்கழக நிர்வாகத்தின் அசமந்தப்போக்கைக் கருத்திலெடுத்து, காலம் வீணடிக்கப்படக் கூடாது என்ற தீர்மானத்தின் பேரில், மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்களைத் தெரிவு செய்து, பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கையளித்திருந்தோம். இந்நேரத்தில் ஒரு மாதத்திற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய சிறு விடயத்தைச் சர்ந்தப்பவாதத்திற்கேற்ப, நிர்வாகத்தின் அதிகாரத்தை தமக்குச் சாதகமாகப் பாவித்து, நியாயமற்ற முறையில், நீதிக்குப் புறம்பாக, மாணவர் ஒன்றியத்தலைவரிற்கு வழங்கப்பட்ட உட்பிரவேசத்;தடையாகும். இவ்வாறு நியாயமின்றி, நீதிக்குப் புறம்பான முறையில் வழங்கப்பட்ட இந்த வகுப்புத்தடையை நாம் எவ்வாறு ஏற்பது...?.

எமது பல்கலைக்கழக சிரேஷ்டமாணவ ஆலோசகரைப்பற்றி மக்களாகிய உங்களுக்குத் தெளிவுபடுத்தவேண்டிய பாரிய பொறுப்பு எங்கள் முன் உள்ளது. 'பல்கலைக்கழக மாணவ ஆலோசகர்' எனப்படுவது, மாணவர்களின் நலன்களைக் கவனிக்கும் அதேவேளை மாணவர்களுக்கிடையில் ஏற்படும் பிணக்குகளை நடுநிலையாக நின்று, தீர்த்து வைக்கும் பாரிய பொறுப்பும் அவருக்குரியதே. ஆனால் எமது பல்கலைக்கழக மாணவ ஆலோசகா, மாணவர் நலன்களில் அக்கறையில்லாமல், தனது சர்வதிகாரத்துடன், மாணவர்களின் கருத்துக்களை அறவே செவிசாய்க்காமல் தன்னிச்சையாகச் செயற்பட்டு வருகின்றார். மாணவர்களிற்கு வகுப்புதடை விதிப்பதை மட்டும் நோக்கமாக கொண்டு மாணவர்களின் எதிர் காலத்தை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளே இவரது செயற்பாடுகளில் முதன்மையானவை. கடந்தகாலங்களில் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய பல மாணவர்கள் இன்னமும் பட்டதாரிச் சான்றிதழைப் பெறமுடியாமல் உள்ளதற்கும் இவரின் தன்னிச்சையானச் செயற்பாடே காரணமாகும். மேலும், இவரது காலத்திலேயே பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தற்கொலைசெய்து கொண்ட சம்பவங்களும் இடம்பெற்றமையை சுட்டடிக்காட்டுகின்றோம். பல்கலைக்கழக நிர்வாகம் குறிப்பிடுவது போல் இவர் ஒரு சிறந்த மாணவர் நலன்களைக் கவனிக்கும் ஆலோசகரெனின் மாணவர்களுக்கு இத்தகைய பிரச்சினைகள் ஏன் இடம்பெற வேண்டும்? இவ்வாறான ஒரு மாணவ ஆலோசகர் எமது மாணவர்களுக்குத் தேவையில்லை என்பதனாலேயே மாணவர்களாகிய நாம் இவரை நீக்க வேண்டும் என்ற முடிவுக்கு தவிர்க்க முடியாத சூழலில் வந்திருக்கின்றோம்.

எமது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது கடந்த காலங்களில, காலம் நமக்குத் தேவைப்படுத்தும் சமூகப்பணிகளையும் செய்து வருகின்றதென்பதையும் தாங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகின்றோம். குறிப்பாக ¬ கடந்த வருடங்களில் எமது பல்கலைக்கழகத்திற் கற்கும் போரால் பாதிக்கப்பட்ட எமது சக மாணவர்களிற்கும்;, வறிய நிலையில் உள்ள பாடசாலை மாணவர்களிற்கும் உதவிகளை வழங்க நாம் பின்நிற்கவில்லை. மேலும், கடந்தவருடம் வன்னிப் பிராந்தியத்தின் 41 பாடசாலைகளில் சாதாரண தர மாணவர்களிற்குக் கருத்தரங்குகளையும் நாடாத்தி அம்மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்திய பெருமை மாணவர் ஒன்றியத்தையே சாரும். அத்துடன் எமது கிழக்கு மாகான மக்கள் வெள்ளம் காரணமாகத் துன்புற்றவேளை எதிர்கொண்ட வேளை அவர்களின் துயர் துடைக்க, உடனடியாக மாணவர்களை ஈடுபடுத்தி அவர்களின் துன்பங்களில் பங்குகொண்டதையும் தாங்கள் அறீவீர்கள். இப்படியான சமூகப் பொறுப்புக்களை ஆற்றுவதிலிருந்து மாணவர் ஒன்றியத்தை தடுக்கும் நோக்கிலா, ஒன்றியத்தை நிறுவாமல் எமது பல்கலைக்கழக நிர்வாகம் இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றது?

மேலும், மாணவர்களின் போராட்டம் ஆரம்பித்த தினமன்று (29-04-2011, எமது வளாகத்தில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட ஒர் துக்ககரமான நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த ஊடகவியலாளர் நிர்வாகத்தின் சார்பிலான ஒருவரே, மாணவர்களைப் படம்பிடிப்பதாக எண்ணியதாலேயே, அந்த ஊடகவியலாளருடன், - அவர் ஊடகப்பிரதிநிதி என்பதை அறியாமல் - சந்தர்ப்ப சூழ்நிலையில் நடைபெற்ற வருத்தமான நிகழ்வு என்பதுடன், இதற்காக மாணவர்களாகிய நாம் குறித்த பத்திரிகையிடமும், ஏனைய ஊடகச் சமூகங்களிடமும் மன்னிப்புக்கோரி நிற்கின்றோம். இதே போன்ற நிகழ்வு எமது பல்கலைக்கழக வாளாகத்தினுள் மீண்டும் இடம் பெறாமலிருப்பதற்கும் உத்தரவாதம் தருகின்றோம்.

இறுதியாக, மாணவர்களாகிய நாங்கள் எப்பொழுதும் பொறுப்புடனும், எமது மாணவர்களின் கல்விசார்ந்த நடவடிக்கைகள் பற்றிய அக்கறையுடனுமே சிந்தித்துச் செயற்படுகின்றோம். எவருக்கும் அசௌகரியங்கள் ஏற்படுத்துவதையும் நாங்கள் விரும்பவில்லை. அதேநேரம், எங்கள் உரிமைகளையும், யாருக்காகவும் ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லையென்றும் தெரிவித்துக் கொள்கின்றாம்.

எனவே, இச்சூழ்நிலைகளுக்குள், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக மாணவர்களாகிய எங்களால் முன்வைக்கப்பட்ட நியாயமான கோரிக்கைகளை உடனடியாகத் தீர்த்து வைக்க பல்கலைக்கழக நிர்வாகம் முன்வரவேண்டுமென்றும்;, அதுவரை மாணவர்களாகிய நாம் விரிவுரைகளைப் புறக்கணிப்பதென்றும், மாணவர் ஒன்றியம் ஊடகங்களின் வாயிலாக அறிவிக்கும்வரை இப்போராட்டம் தொடருமென்றும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று மாணவர் ஒன்றியத்தின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

uni20statment.jpg

gtn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.