Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐநாவும், இலங்கையுமா? அல்லது மேற்கு நாடுகளும் ஆசியா நாடுகளுமா? யாருக்கு என்ன பயன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐநாவும், இலங்கையுமா? அல்லது மேற்கு நாடுகளும் ஆசியா நாடுகளுமா? யாருக்கு என்ன பயன்?

Wednesday, May 4, 2011, 4:16

இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், தமிழ் இன அழிப்பு தொடர்பான தமது அறிக்கையை ஐ.நா. நிபுணர் குழு, செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கையளித்துள்ளது. இந்த அறிக்கை ஏதோ தமிழர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி போலவும், இத்தோடு தமிழர்களுடைய பிரச்சினைகள் யாவும் தீர்ந்துவிடும் என்பது போலவும் சில உள்நாட்டு, வெளிநாட்டுத் தமிழ்த் தரப்புக்களும், ஊடகங்களும் இதற்கு அதி முக்கியத்துவம் கொடுத்து மாறி மாறி கருத்து வெளியிட்டு வருகின்ற இன்றைய சூழலில்.

இறுதி யுத்த காலத்தில் நடைபெற்ற பல்வேறு மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், தமிழ் இன அழிப்புகள் தொடர்பான தகவல்களும் வெளிப்படையாக உலக அளவில் முக்கிய தரப்பு ஒன்றிடம் இருந்து வெளியிடப் பட்டிருப்பதுதான் தான் இந்த அறிக்கையின் முக்கிய அம்சம். இதில், அரசாங்கத் தரப்பு மட்டுமன்றி, தமிழீழ விடுதலைப் புலிகள் மேற் கொண்டதாகவும் குற்றச் சாட்டுக்களையும் நிபுணர்கள் குழு பட்டியலிட்டுள்ளது.

அரச படைகள் ஷெல் தாக்குதல்கள், உணவுத் தடை, யுத்தப் பகுதிகளிலிருந்து வந்த மக்கள் மீதும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் மீதும் துன்புறுத்தல்களை மேற்கொண்டு மனித உரிமை மீறல்களை மேற்கொண்டது என்றும், தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பும் பொதுமக்களைக் கேடயங்களாகப் பயன்படுத்தியதாகவும், அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு தப்பியோட முயன்றவர்களைச் சுட்டுக் கொன்றதாகவும், சிறுவர்களைப் பலாத்காரமாகப் படையில் சேர்த்தமை உள்ளிட்ட குற்றங்களைப் புரிந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.அதாவது தமிழர்களின் உரிமைகளுக்காக போராடியவர்களே தமது மக்களை கொன்றதாக குற்றம் சாட்டுகிறது ஐநா. அப்படியானால் இன்றுவரை தமிழர்களைத் தமிழரே படுகொலை செய்வோர் பட்டியலில் டக்ளஸ், கருணா, வரதர், பிள்ளையான், மற்றும் இவர்களுடைய சகபாடிகள் அமைப்புக்கள் மீதுதான் தமிழர்களை சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டுக்களை சந்தேகம் இன்றி முன்வைக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து அல்ல ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்து.

இந்த அறிக்கையில் கூறப்பட்ட விடயங்கள் எதுவும் இப்போதுதான் தெரியவந்துள்ள புதிய விடயங்கள் என்று சொல்வதற்கில்லை. போர் நடைபெற்ற காலத்தில் அந்த பகுதிகளில் வாழ்ந்த மக்களும், அவர்கள் மூலமாக ஏனையோரும் அறிந்திருந்த விடயங்களே, இன்று ஐ.நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கையாக வந்திருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டதாக சொல்லப்படும் போர்க் குற்றங்கள் பற்றி சொல்லப்பட்டு இருப்பதே இதில் புதிதாக உள்ளது. இதன் நோக்கம் என்ன?

தமிழர் தாயகத்தில் போர்க் காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பாக இப்போது அக்கறைப்படும் ஐ.நா., போர்க் குற்றங்கள் நடைபெற்ற காலத்தில் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக இருந்தது ஏன்? இப்போது என்ன புதிய அக்கறை வந்துள்ளது? இந்த அறிக்கையினால் இனப்படுகொலைக்கு உள்ளாகிய மக்களுக்கு கிடைக்கப் போவது தான் என்ன?

அழிந்து கொண்டிருந்த மக்களுக்கு அத்தியா அவசிய பொருட்களையோ மருந்து வகைகளையோ அனுப்பி வைக்க மறுத்தன, மக்களின் பகுதிகளுக்குள் இருந்த தொண்டு நிறுவனக்களும் இன வெறியர்களால் ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டனர். உச்சக்கட்டப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில், பல நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் ஐநா சபையின் வளாகத்திலும் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இன அழிப்பினை நிறுத்தக் கோரியும் தமிழர்கள் பலர் தீக்குளித்து தம் உயிர்களை மாய்த்துக்கொண்ட போதும், புலம்பெயர் தேசங்கள் எங்கும் வீதிகளில் இறங்கி வீதி மறியல் போராட்டம் செய்தும் உண்ண மறுத்தும் போரை நிறுத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு எந்தத் தரப்பும் செவிமடுக்கவும் இல்லை. மக்களைக் காப்பாற்றுவதற்கு அப்போது ஐ.நா.வோ, அல்லது எந்தவொரு மேற்குலக நாடோ முன்வரவும் இல்லை.

மக்கள் செத்துக் கொண்டிருக்கும் போது கண்டுகொள்ளாமல் கண்மூடி இருந்தவர்கள், இப்போது திடீர் அக்கறை கொள்ளும் உள் நோக்கம் என்ன? இந்த அறிக்கையும், இதன் மூலமாக எடுக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நடவடிக்கைகளும், இறந்து போனவர்களை மீட்டுத் தருமா? அல்லது காணாமல் போனவர்களை மீட்டுத் தந்து விடுமா? பாதிக்கப்பட்டு உரிமைகளை உடமைகளை உடல் உறுப்புகளை இழந்த மக்களுக்கு உரியவற்றை பெற்றுத் தந்துவிடுமா? புனர்வாழ்வு என்ற பெயரில் சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப் படுவாகளா? இதில் எதை உரியவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப் போகிறது இந்த நிபுணர்கள் குழுவின் அறிக்கை?

தமிழீழ மக்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதிரான போரை இலங்கை அரசாங்கத்தோடு சேர்ந்து முழு உலகமுமே நடத்தியது என்பது தான் உண்மை. புலிகளின் ஆனையிறவு முகாம் தாக்குதல், கட்டுநாயகா விமானத்தளத் தாக்குதல் போன்றவற்றால் விழித்து எழுந்த உலக வல்லரசுகள், விடுதலைப் புலிகளை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதற்காகவே போர்நிறுத்த உடன்படிக்கை ஒன்று ஏற்பட வழிசெய்தனர்.

இந்து சமுத்திரப் பிராந்தியம் என்பது முழு உலகத்தினதும் முக்கியமான கப்பல் போக்குவரத்து மார்க்கம். இதனால்தான் காலனித்துவக் காலம் முதல் உலக நாடுகள் இலங்கை மீது ஒரு கண் வைத்து வருகின்றன.

இந்த இந்துசமுத்திரப் பிராந்தியத்திலுள்ள இலங்கை என்ற குட்டித் தீவில், ஒரு அரசு அல்லாத விடுதலை அமைப்பு, வான்படை, கடற்படை, பீரங்கிப் படைகள், தற்கொலைப் படை என்று அதீத பலத்துடன் இருப்பதை எந்த நாடும் விரும்பவில்லை. அரசாங்கம் ஒன்றைப் போலன்றி, அரசு அல்லாத அமைப்பொன்றை எந்தவொரு சர்வதேச சட்டங்களும் கட்டுப்படுத்தாது. இந்த நிலையில், அத்தகைய அமைப்பிடம் இருக்கக்கூடிய அதீத போர்வலு, முழு உலகுக்குமே ஆபத்தாகிவிடும் என்பதே உலக வல்லரசுகளின் கணி்ப்பாக இருந்தது.

இதனாலேயே, போர்நிறுத்த உடன்படிக்கை, பேச்சுவார்த்தை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு நோர்வே மூலமாக மேற்குலகம் அதிக பணத்தையும், முயற்சிகளையும் அள்ளிக் கொட்டியது. நீண்ட காலப் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் மூலம் விடுதலைப் புலிகளின் போர் வலுவைக் குறைத்து அல்லது சிதைத்து, ஏதோவொரு தீர்வை ஏற்படுத்துவதன் மூலம் தொடர்ந்து போர் நடைபெறாமல் செய்வது அவர்களது நோக்கமாக இருந்தது.

ஆனால், மேற்குலகின் செல்லப் பிள்ளையாக இருந்த ரணில் விக்கிரமசிங்காவின் நரித்தனமான காய் நகர்த்தல்களால் விடுதலைப் புலிகளுக்குள் பிளவை ஏற்படுத்தினார் விடுதலைப் புலிகள் அமைப்புக்குள் ஒட்டுக் குழுக்களை உளவாளிகளாக ஊடுருவ விட்டார் இதனால் முக்கிய தளபதிகளின் இருப்பிடங்களையும் பிரையான வழிகளையும் தெரிந்து கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல்களில் போராளிகள் பலர் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில் இலங்கை இராணுவத்தினால் புலிகள் மீது திட்டமிட்ட வகையில் வலிந்த தாக்குதல்களும் தொடுக்கப்பட்டது. இதன் விளைவாக இலங்கை அரசினதும் உலக நாடுகள் மற்றும் ஆசியாவின்பிராந்திய வல்லரசுகளின் போக்கில் சந்தேகமும் அதிர்ச்சியும் அடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் போரை ஆரம்பிப்பதற்கான வழிமுறைகளை விடுதலைப் புலிகள் முன்னெடுத்த பொழுது, சாம, பேத, தானம் கடந்து, தண்டமே ஒரே வழி என்ற முடிவுக்கு உலக வல்லரசுகள் வந்துவிட்டன தமிழீழத்தில் நடத்தப்பட்ட இன அழிப்பு போரை உலக நாடுகள் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டான.

தமிழீழ மக்களுக்கு எதிரான போர் இந்த உலக வல்லரசுகள் அனைத்தினதும் ஒத்துழைப்புடன் தான் முன்னெடுக்கப்பட்டது. அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, ரசியா, இந்தியா, பாகிஸ்தான், உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்கு படைக்கல உதவிகளையும், பயிற்சிகளையும், கடற் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், புலனாய்வுத் தகவல் மற்றும் சற்றலைட் தகவல் உதவிகளையும் வழங்கின. இதற்குப் பல ஆதாரங்களும் உள்ளன.

முக்கியமான மேற்குலக நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் இணைத்து தடை செய்திருந்தமையும் உலக அரசியல் இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்வதிலும் விடுதலைப் புலிகளுக்கு பலவிதமான சிக்கல்களையும் உருவாக்கியது என்றே கூறவேண்டும். சமாதான பேச்சுவார்த்தைகளை அதன் வழியிலேயே எதிர்கொள் வதிலும் பின்னடைவுகள் ஏற்பட்டதாலும் வேறு தெரிவுகள் எதுவும் இல்லாமல் போகவே இராணுவத்தின் வலிந்த தாக்குதல்களுக்கு எதிர்த் தாக்குதல் போர் வழியைத் தெரிவுசெய்த விடுதலைப் புலிகள், இந்த அனைத்துலகப் போர் பொறிமுறையில் மிகப்பெரிய பின்னடைவை தற்காலிகமாக சந்திக்க நேர்ந்தது.

இதனால், போரின் இறுதி நாட்கள் மற்றும் போருக்குப் பிந்திய சூழலை இந்தியாவும், சீனாவும் வேகமாகத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ள அனைத்து முயற்சிகளையும்போட்டி போட்டுக்கொண்டு முழு வேகமாக முன்னெடுத்தன. இதனால், இதுவரை காலமும் மேற்கு நாடுகளின் பிடிக்குள் இருந்த இலங்கை, அதிலிருந்து விடுபட்டு இந்திய, சீன, ரஷ்ய போன்ற நாடுகளின் ஆதரவுடன் மேற்கு நாடுகளுக்கு சவால் விட முடிந்தது.

இதுவே மேற்கு நாடுகளுக்கு இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கைகளில் தர்ம சங்கடம் ஏற்படக் காரணமாக அமைந்தன. இதனால்தான் இப்போது அவர்களுக்குப் போர்க்குற்ற விசாரணை தேவைப்படுகிறது. போர்க்குற்ற விசாரணை என்ற நெருக்குவாரத்தின் மூலம் இலங்கை அரசாங்கத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் முடிந்தளவுக்குக் கொண்டுவருவதே இந்த நிபுணர்கள் குழுவின் இலங்கை போர்க்குற்றம் தொடர்பான பிரதான நோக்கம் ஆகும்.

மேற்கு நாடுகளின் இந்த நெருக்குவாரத்துக்கு ஓரளவுக்கேனும் இலங்கை அரசு பணிந்து அசைந்து கொடுக்குமானால், இந்தப் போர்க்குற்ற விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டு விடும். இதுவே இன்றைய உலக அரசியலிளும், நிபுணர்கள் குழுவின் அறிக்கையிலும் தெரிந்துகொள்ளக் கூடியதாகவும் உள்ளது.

இந்த சர்வதேச அரசியல் யதார்த்தம் புரியாமல், ஐ.நா. வின் நிபுணர் குழுவின் அறிக்கையால் ஏதோ தமிழர்களுக்கு நீதி கிடைத்து விட்டதுபோல் மகிழ்ச்சியடைவது சுத்த மடமைத்தனம். நீதி கிடைக்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கையே ஆயினும், மேற்குலகின் நலன்களுக்காக முன்னெடுக்கப்படும் இந்த அரசியல் சாணக்கியத்தால் தமிழர்களுக்கு நீதி கிடைத்துவிடும் என்று பகல் கனவு காண்பது அடி முட்டாள்த் தனம். இதுவே நடந்து முடிந்த சமாதானப் பேச்சுக்களிலும் நடந்தவை அதையும் நாம் இன்றைய சூழலில் மறந்து விட முடியாது.

ஒருவேளை இந்த விசாரணைகள் மூலம் இலங்கை அரசாங்கம் தண்டிக்கப்பட்டு விட்டால், அதன்மூலம் தமிழர்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துவிடுமா? அதற்கு என்ன உத்தரவாதத்தை இந்த அறிக்கை தமிழர்களுக்கு வழங்குகிறது?

இலங்கைத் தீவில் தமிழர் பிரச்சினையை இலங்கை, இந்திய, ஆசியா, மற்றும் மேற்குலக நாடுகள் இதுவரை காலமும் தமது நலன் நோக்கிலிருந்து பந்தாடி வந்தனவோ, அதுவே இப்போதும் மீண்டும் அரங்கேறுகிறது. இதைப் பார்த்து மயங்கினால் இன்னும் இன்னும் ஆபத்துக்களை நோக்கித்தான் தமிழர்கள் செல்லவேண்டி இருக்கும்.

மேற்குலக நாடுகளின் நலன்களை மையப்படுத்தும் இந்த அறிக்கை, அந்த நாடுகளில் அதிகளவில் வாழும் புலம்பெயர் தமிழர்களை அதிகளவில் மகிழ்வித்திருப்பதை அவதானிக்க முடிகிறது. ஆனால், இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களுடைய நிலைமை அப்படியல்ல. மேற்குலகின் நலன்களுக்கோ அன்றி வேறு எந்த நாடுகளின் நலன்களுக்கோ துணை போவதால் தாயகத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு கிட்டிவிடப் போவதில்லை. இன்னும் மோசமான எதிர் விளைவுகளே ஏற்படக்கூடும் .

போரின் இறுதி நாட்களில், ஒரு கவளம் சோற்றுக்கும் குடிப்பதற்கு தண்ணீருக்கு வழியின்றியும், தினம் தினம் பிணங்களாகக் குவிந்து கொண்டிருந்த போது திரும்பிப் பார்க்காத தேசங்களும், சர்வதேச மனித உரிமைகளும், சட்டங்களும், எல்லாம் முடிந்தபின் இப்போது ஏதோ தமது தேவைகளுக்காக அறிக்கைகள் விடுவதும் அந்த அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வரவேற்பதாலும் என்ன ஆகிவிடப்போகிறது என்பதே கேள்வியாக இருக்கிறது.

சட்டம் எப்போதும் குற்றம் புரிபவர்களைத் தண்டிப்பதிலேயே குறியாக இருக்கும். இனிமேல் அத்தகைய குற்றங்கள் நடப்பதைத் தடுப்பது அதன் நோக்கம் என்று அது வக்காளத்து வாங்கும். ஆனால், குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர் போனபின், எஞ்சியிருப்பவர்களின் நிலை பற்றி சட்டங்கள் ஒரு போதும் பேசுவதில்லை.

நடந்து முடிந்த அழிவுகளுக்கு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து தாம் செய்த தவறுகளை மூடி மறைத்து. , விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் குற்றம்சாட்டிக் கொண்டிருப்பதும், ஏசி அறைகளுக்குள் இருந்து கொண்டு அறிக்கை தயாரித்து ஆய்வு செய்பவர்களுக்கு வேண்டுமானால் நன்மை அழிப்பது போல் இருக்கலாம். இந்த அறிக்கையால் இன அழிப்பில் ஈடுபட்டவர்களுக்கும், போர்க் குற்றவாளிகளுக்கும் தண்டனை கிடைத்து விடுமா? என்பதே இன்று பலகோடி கேள்விக் கணைகளாக உள்ளது.

ஆனால் போரில் இறந்தவர்களும், இழந்தவர்களும், இழந்தவைகளும், போக, இன்று தமிழர்கள் என்ற காரணத்திற்காக தமிழர் பிரதேசங்களில் எந்த விதமான வாழ்வு ஆதாரங்களும் இன்றி அநாதரவாக விடப்பட்டவர்களுக்கும், வதை முகாம்களிலும் சிறை கூடங்களிலும் தடுத்து வைக்கப்பட்டு நடை பிணங்களாக மிஞ்சியிருப்பவர்களும், தமது வாழ்வைக் கட்டியெழுப்ப தமது பூர்வீக தாயக நிலங்களில் நிம்மதியாக எந்த விதமான அச்சுறுத்தல்களும் இன்றி கலை கலச்சார பண்பாடுகளோடு வாழ்வதற்கு உரிய புறச் சூழல்களை ஏற்படுத்த இந்த நிபுணர்கள் குழுவின் அறிக்கையை மையமாக வைத்து ஐக்கிய நாடுகள் சபையினாலும், உலக நாடுகளாலும் ஏதாவது உருப்படியாக உடனடியாக செய்ய முடிந்தால், அதுவே இன்றைய சுழ்நிலையில் இன அழிப்பில் இருந்து உயிர் பிழைத்துள்ள தமிழர்களுக்கு சிறிய அளவிலான ஒரு ஆறுதலையும் அவர்களின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும் ஏற்படுத்தும் மிகச் சிறந்த ஆதாரமாக அமையும் என்பதில் எதுவித ஐயமும் இருக்காது.

அதன் தொடர் நடவடிக்கைகளாக தனித் தமிழீழ நோக்கி நாம் பயணிக்கலாம்!

தி.தமிழரசன்.

ஈழம்5 இணையம்.

tamilthai.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.