Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமணத்தின் முன்னர் கட்டாய இரத்தப் பரிசோதனை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருமணத்தின் முன்னர் கட்டாய இரத்தப் பரிசோதனை!

Posted by admin On May 4th, 2011 at 7:02 pm

தலசீமியா நோய் பரவுதலை தடுப்பதற்காக திருமணம் செய்யவுள்ள ஜோடிகளுக்கு இரத்த பரிசோதனை கட்டாயமாக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் கூறினார். தலசீமியா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குருநாகல் பொது வைத்தியசாலையில் தேசிய தலசீமியா நிலையத்தினால் கண்டறியப்பட்டுள்ளது என அமைச்சின் பேச்சாளர் டபிள்யூ.எம்.டி.வன்னிநாயக்க கூறினார்.

1,600 தலசீமியா நோயாளிகள் நாட்டில் காணப்படுவதாகவும் இதில் 160பேர் சிறுவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயை மாற்ற முடியாது. இதற்க வாழ்நாள் முழுதும் மருந்து வழங்க வேண்டும். இந்த நோயாளிகளை தொடர்ந்து அவதானிக்க வேண்டும்.

இந்த நோயை கட்டுப்படுத்துவதற்குள்ள ஒரேயொரு வளி தலசீமியா காவிகளாகவுள்ள இருவர் திருமணம் செய்வதை தடுப்பதாகும். பெற்றோர் இருவரும் தலசீமியா காவிகளாக இருப்பின் பிள்ளைகள் நிச்சயமாக தலசீமியா நோயாளிகளாக வருவர் என்றும் அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார்.

திருமணம் செய்யவிருக்கும் ஜோடிகளுக்கு அரசாங்க வைத்தியசாலைகளில் தலசீமியா நோய்க்கான இந்தப் பரிசோதனை இலவசமாக செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இதன்மூலம் தலசீமியா நோய்க்காவிகள் இருவர் திருமணம் செய்வதை தடுக்க முடியும். சுகாதார அமைச்சு ஆண்டுதோறும் 350 மில்லியன் ரூபாவை தலசீமியா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக செலவளித்து வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

saritham.com

  • கருத்துக்கள உறவுகள்

மேலுள்ள கணக்குப் படி சிங்களம் ஒரு நோயாளிக்கு 218 ,750 ரூபா செலவளிக்கின்றது!

அதாவது $2100 அமெரிக்க டாலர்!

இலங்கை மூன்றாவது உலக நாடுகளின் வரிசையில் இருந்து எடுக்கப் பட்டு, வளர்ச்சியடைந்த நாடுகள் வரிசையில் சேர்க்கப் பட வேண்டும்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.