Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை போர்க்குற்றங்களுக்கான கோர்ட்டில் இந்திய அரசு நிறுத்த நடவடிக்கை எடுப்பேன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை போர்க்குற்றங்களுக்கான கோர்ட்டில் இந்திய அரசு நிறுத்த நடவடிக்கை எடுப்பேன்

13 மே 2011

சென்னை போர்க்குற்றம் புரிந்த, இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை போர்க்குற்றங்களுக்கான கோர்ட்டில் இந்திய அரசு நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் பதவியை ஏற்கவுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக நான் பலமுறை விளக்கியுள்ளேன். இது ஒரு சர்வதேசப் பிரச்சினை. தமிழக அரசால், ஒரு மாநில அரசால் குறிப்பிட்ட அளவில் மட்டுமே செயல்பட முடியும். அதற்கு மேல் செயல்படுவதென்றால் அது மத்திய அரசால் மட்டுமே, இந்திய அரசால் மட்டுமே செய்ய முடியும்.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நான் இரண்டு தீர்வுகளை தெரிவிக்க விரும்புகிறேன்.

முதல் தீர்வு : போர்க்குற்றம் புரிந்த இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச போர்க்குற்றங்களுக்கான நடுவத்தில் நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம். அதை செய்யுமாறு இந்திய அரசை நான் தொடர்ந்து வலியுறுத்துவேன். இரண்டாவது தீர்வு : ஈழத் தமிழர்கள் கெளரவமான, சுதந்திரமான வாழ்க்கை வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும்.

ராஜபக்சே மறுத்தால்இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும். அப்படிச் செய்தால், ராஜபக்சே பணிவதைத் தவிர வேறு வழியில்லை. இதைச் செய்யுமாறு இந்திய அரசை நான் தொடர்ந்து வலியுறுத்துவேன் என்று முதல்வர் பதவியை ஏற்கவுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தல் வெற்றிக்குப் பின்னான தனது முதல் ஜெயாதொலைக்காட்சிப் பேட்டியில் கூறியுள்ளார்.

3ஆம் இணைப்பு:- தமிழக முதலமைச்சராக 3ஆவது முறையாக ஜெயலலிதா பதவியேற்கிறார்.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலின் வாக்குகள் எண்ணும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், முடிவுகளும் வெளியாகிவந்த வண்ணமுள்ளன.

இதில் அ.தி.மு.க. ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது. இதுவரை வெளிவந்துள்ள முடிவுகளின்படி 191 தொகுதிகளில் அ.தி.மு.க. முன்னணியிலுள்ளது. தி.மு.க. 34 தொகுதிகளிலில் மாத்திரமே முன்னணியில் உள்ளது.

ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் 14,940 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையிலுள்ளார்.

தி.மு.கவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் நான்கு தொகுதிகளில் மாத்திரமே முன்னிலையில் உள்ளது.

இந்த நிலையில், இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள இறுதி முடிவுகளுக்கமைய அ.தி.மு.க. 7 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ள நிலையில், தி.மு.க. 03தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளன.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சராக 3ஆவது முறையாக ஜெயலலிதா பதவியேற்க தயாராகி வருகிறார். சென்னையில் மே15 ஆம் திகதி பதவியேற்பு விழா நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக டிஜிபி லத்திகா சரண், சென்னை பொலிஸ் ஆணையாளர் ராஜேந்திரன் ஆகியோர் ஜெயலலிதாவுடன் சந்தித்து ஆலோசனை நடத்துவதாக செய்திகள் வருகின்றன.

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவியேற்பு விழா நடத்த முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆளுநர் சுர்ஜித் பர்னாலா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். மே 16ஆம் திகதி அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், அனைத்து முடிவுகளும் இந்திய நேரப்படி 4 மணியளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து கருணாநிதி இன்று ராஜிநாமா செய்துள்ளார்.

ஆளுநர் பர்னாலாவிடம் தனது இராஜிநாமா கடிதத்தை கொடுத்ததை அடுத்து அதை ஏற்றுக்கொண்டதாக ஆளுநர் அறிவித்துள்ளார்.

அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலையில் ஜெயலலிதா

தமிழ் நாட்டில் அ.தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்க உள்ளது. அ.தி.முக., 198 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தி.மு.க., 36 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. மேலும் தி.மு.க., அமைச்சர்களான பொங்கலூர் பழனிச்சாமி, வீரபாண்டி ஆறுமுகம், தமிழரசி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உட்பட பலர் தோல்வியைத் தழுவும் நிலையில் உள்ளனர். எனவே தேர்தல் முடிவு அ.தி.முக.,வுக்கு சாதகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்குவங்கத்ததில் திரிணாமுல்காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணியினர் 205 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். இடதுசாரி கட்சியினர் 67 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். புதுச்சேரியில் இன்று காலை ஓட்டு எண்ணும் பணி ஆரம்பமாகியது முதல் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி பின்னடைந்துள்ளது. என்.ஆர்., காங்கிரஸ் அ.தி,மு.க., கூட்டணி 7 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

கேரளாவில் காங்கிரஸ் 73 இடங்களிலும், ஆளும் இடதூரி கூட்டணியினர் 66 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.அசாமில் காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களிலும், அசாம் கனபரிஷத் 6 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. பா.ஜ., 8 வது இடங்களிலும், முன்னிலை வகிக்கிறது.மாலை 5 மணிக்குள் முழு முடிவுகள் வெளியாகி விடும்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை வெற்றியை நோக்கி அதிமுக சென்று கொண்டிருக்கிறது.

கூட்டணி கட்சிகள் தயவின்றி, அறுதிப் பெரும்பான்மை பெறும் நிலையில் உள்ளது அதிமுக உள்ளது.

காலை 10.15 மணி வரை வெளியான 205 தொகுதிகளில் அதிமுக கூட்டணி இதுவரை 162 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதில் அதிமுக மட்டும் தனித்து 157 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

விஜயகாந்தின் தேமுதிக வெறும் 4 இடங்களில் மட்டும் முன்னிலை வகிக்கிறது. சரத்குமாரின் சமக ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையை நோக்கி அதிமுக முன்னேறுகிறது.

திமுக கூட்டணி 41 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதில் திமுக மட்டும் 31 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

தமிழக தேர்தல் முடிவுகள்.

பல்வேறுபட்ட எதிர்பார்ப்புகள் மத்தியில் தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை ஆரம்பமாகியது.

தமிழ்நாடு சட்டசபைக்கான தேர்தல் கடந்த மாதம் 13 ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது.

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்கெடுப்புகள் நடைபெற்றன.

தமிழ்நாடு முழுவதிலும் 4 கோடியே 59 இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்ற போதிலும் இவர்களில் 78.80 சதவீதமான வாக்காளர்களே நடைபெற்று முடிந்த தேர்தலில் வாக்களித்திருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிட்டது.

எனினும் இந்த வாக்களிப்பு வீதம் கடந்த சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்தோர் தொகையுடன் ஒப்பிடுகையில் 11.26 வீதம் அதிகம் என்றும் தேர்தல் ஆணையம் கூறுகிறது.

இவ்வாறு 234 தொகுதிகளிலும் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை தமிழ் நாட்டில் அமைக்கப்பட்டுள்ள 91 வாக்குகள் எண்ணும் நிலையங்களில் எண்ணப்படுகின்றது.

வாக்குகளை எண்ணும் பணிகளில் சுமார் 16 ஆயிரத்து 996 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளளர்.

இந்த வாக்கு எண்ணும் நிலையங்கள் உட்பட சகல இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

45 காம்பனிகளைச் சேர்ந்த 4500 இற்கும் அதிகமான ஆயுதம் தாங்கிய துணை இராணுவ படைப்பிரிவினர் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் இணைந்து தமிழ் நாடு பொலிஸார் விசேட கலகம் அடக்கும் படையினர் உள்ளிட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். வாக்கெண்ணும் நிலையங்களுக்கு மூன்று வளைய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர வாக்குகள் எண்ணும் பணி முழுமையாக கண்காணிப்பு கமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

அத்துடன் இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணும் பணிகளை பார்வையிட கட்சிப் பிரதிநிதிகளுக்கு கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.

கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி. மு. க. கூட்டணியா, அல்லது செல்வி ஜெயலலிதா தலைமையிலான அ. தி. மு. க. கூட்டணியா? தமிழகத்தை அடுத்து ஆளப்போவது என்ற பலத்த எதிர்பார்ப்புக்கள், எதிர்வுகூறல்கள் மத்தியில் இன்றைய வாக்கு எண்ணும் பணி ஆரம்பமாகியுள்ளது.

gtn

Edited by கறுப்பி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த இந்திய அரசு முயல வேண்டும் – வெற்றி பெற்ற ஜெயலலிதா!

Posted by admin On May 13th, 2011 at 5:03 pm / No Comments

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது எங்களது வெற்றியல்ல; இது மக்கள் வெற்றி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஜெயா தொலைக்காட்சிக்கு ஜெயலலிதா அளித்த நேர்காணலில் அவர் கூறிய விவரங்கள் வருமாறு:

கொடுங்கோல் சர்வாதிகார ஆட்சியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என மக்கள் விரும்பினார்கள். அதிமுக ஆட்சி மீண்டும் வராதா என்று ஏங்கினார்கள். தி.மு.க ஆட்சியின் மீது மக்களின் கோபம் தெளிவாகத் தெரிந்தது. மக்கள் தக்க ருணத்திற்காக காத்திருக்கிறார்கள் என்பது எனக்கு விளங்கியது. கருத்துக்கணிப்புகள் என்ன சொன்னாலும் மக்கள் தங்கள் முடிவை மாற்றத் தயாராக இல்லை என்பதை நான் அறிவேன்.

இந்த வெற்றி என் வெற்றியல்ல; எங்கள் கூட்டணியின் வெற்றியும் அல்ல. இது தமிழக மக்களின் வெற்றி! ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி! மீண்டும் ஜனநாயகம் மலர வேண்டும் என்ற எண்ணதில் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பல ஆண்டுகளுக்குப் பின் தேர்தல் ஆணையம் பல ஆண்டுகளுக்குப் பின் நேர்மையாக நடத்தியிருக்கிறது. மிக நேர்மையாக தேர்தலை நடத்திய தேர்தல் ஆணையத்திற்கும் எனது நன்றிகள்.

இலங்கைத் தமிழர்கள் சொல்லொணாத் துன்பம் அடைந்து வருகிறார்கள் என்பதை நான் அறிவேன். அவர்கள் வாழ்வு வளம்பெற நாம் முயல வேண்டும். மாநில முதல்வர் என்ற அடிப்படையில் ஓரளவுதான் என்னால் செய்ய முடியும். மத்திய அரசுதான் இருநாடுகளுக்கிடையேயான பிரச்சனைகளில் தலையிட முடியும்.

ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த இந்திய அரசு முயல வேண்டும்.

தமிழர்கள் கவுரவமான வாழ்வை அமைத்துக் கொள்ள இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். இலங்கை அரசு ஒத்துழைக்க மறுத்தால் இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும்.

5 ஆண்டுகளில் தமிழ்நாடு சீரழிக்கப்பட்டுவிட்டது. அனைத்தும் நாசம் செய்யப்பட்டுவிட்டது. மின்வெட்டு, விலைவாசி உயர்வு, விவசயாம், நெசவு சீரழிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தையே கடனாளி ஆக்கிவிட்டார்கள். 1 இலட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளதாகக் கூறப்படுகிறது.

5 ஆண்டுகாலம் ஆட்சி நிர்வாகம் நடைபெறவே இல்லை. தி.மு.க ஆட்சி அமைக்கும்போதெல்லாம் தமிழகத்தை சீரழிக்கவே செய்துள்ளது. நான் பொறுப்பேற்று அதனை சரியாக்கினேன்.

மிகவும் கடினமான பணி என் மீது சுமத்தப்பட்டுள்ளது. தமிழகத்தையே மீண்டும் கட்டமைக்க வேண்டும். என்னால் இயன்ற அளவு முயற்சிகளை மேற்கொள்வேன்.

saritham.com

ஈழத்தமிழர்கள் பற்றிய இரண்டையும் செய்யவும் செய்யாமல் தடுக்கவும் டெல்லியால் முடியும்.

- சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இந்தியா இந்த விசாரணையை மேற்கொள்ள கேட்டால் அது அவர்களை தூக்குமேடை வரை கொண்டு செல்லும்

-தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வை இந்தியா நினைத்தால் மேற்குலகம், உருசிய ஆதரவுடன் நிறைவேற்றலாம்.

இவற்றை புதிய தமிழக அமைச்சர் டெல்லி ஊடக செய்தால் அவர் என்றும் உலக தமிழ் நெஞ்சங்களில் இருப்பார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.