Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படாத நிலை தொடர்கின்றது – சர்வதேச மன்னிப்புச் சபை :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படாத நிலை தொடர்கின்றது – சர்வதேச மன்னிப்புச் சபை :

14 மே 2011

சித்திரவதை மற்றும் பலவந்தமாக காணாமல் போதல் சம்பவங்கள் நாட்டில் தொடர்வதாக..

இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படாத நிலை தொடர்கின்றது – சர்வதேச மன்னிப்புச் சபை :

இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கப்படாத நிலைமை தொடர்வதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது. யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் விவகாரங்கள் தொடர்பில் இன்னமும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சித்திரவதை மற்றும் பலவந்தமாக காணாமல் போதல் சம்பவங்கள் நாட்டில் தொடர்வதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கப்பம் கோரல் மற்றும் சட்டவிரோத காணாமல் போதல் சம்பவங்களுடன் பாதுகாப்புப் படையினருக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை அரசாங்கம் நடாத்தும் விதம் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை கடும் விமர்சனத்தை வெளியிட்டுள்ளது. கைதிகள் விவகாரத்தில் அரசாங்கத்தின் அணுகுமுறை ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமையப்பெறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துதல் ஆகியன தொடர்பில் உண்மையக் கண்டறியும் ஆணைக்குழுவின் பங்களிப்பு போதுமானதல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடம்பெயர் மக்களுக்கு இன்னமும் அரசாங்கம் உரிய நிவாரணங்களை வழங்க வில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

gtn

பணத்தை நோக்காகக் கொண்டே மன்னிப்புச்சபை செயற்படுகின்றது - அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குற்றச்சாட்டு

[செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-05-15 14:07:36| யாழ்ப்பாணம்]

சர்வதேச மன்னிப்புச்சபை முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை குப்பைத் தொட்டியில்தான் போடவேண்டும் என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். சர்வதேச மன்னிப்புச்சபையானது பணத்தை நோக்காகக் கொண்டு இயங்குகின்ற ஒரு நிறுவனம். அவர்களுடைய செயற்திட்டங்களுக்கு நிதி வழங்குவர்களின் தேவைக்கேற்பவே மன்னிப்புச் சபையின் அதிகாரிகள் செயற்படுவார்கள் என்றும் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தொடர்பாக சர்வதேச மன்னிப் புச்சபை வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் பெற்றோலிய வளங்கள் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைமீறல்கள் இடம்பெற்று வருவ தாக சர்வதேச மன்னிப்புச்சபை குற்றம் சாட்டியுள்ளது. கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடலுக்கான சுதந்திரம் என்பன மறுக்கப்பட்டுள்ளன. தமிழ்க் கைதிகள் பலர் குற்றச்சாட் டுகளின்றி நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபையின் இவ்வருடத்திற்கான ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரஸ்தாப அறிக்கை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் அதனைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்

http://valampurii.com/online/viewnews.php?ID=19101

இதையும் தேவையான இடத்தில் பரப்புரைக்கு பாவிக்கலாம்:

-------------------------------------------------------------------------------------------------

Hi everyone,

AI has continued to focus on arguing that there needs to be an international, independent investigation of human rights violations that are alleged to have occurred both by the Government of Sri Lanka and by the LTTE in the final months of the armed struggle which ended two years ago in May 2009.

AI has just issued its annual report, and so I copy the section on Sri Lanka below, as well as give you the link to AI to read other parts of the report:

http://amnesty.org/en/region/sri-lanka/report-2011

Best wishes,

John Argue

Sri Lanka co-ordinator

Amnesty International Canada

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.