Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மக்களின் தீர்ப்பும் இந்திய மத்திய அரசின் கடமைப்பாடும்

Featured Replies

தமிழகம் மீண்டும் ஒரு ஆட்சி மாற்றத்தைச் சந்தித்திருக்கின்றது. குடும்ப ஆட்சி என வர்ணிக்கப்பட்ட கலைஞரின் தி.மு.க. ஆட்சிக்குப் பிரியாவிடை வழங்கி மீண்டும் ஜெயலலிதாவின் அ.தி.மு.க. ஆட்சிக்கு மக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். ஊழல், குடும்ப ஆட்சி, அதிகார துஷ்பிரயோகம் மீள முடியாத மக்கள் பிரச்சினை போன்ற பல்வேறு காரணங்களால், தமிழக மக்கள் தாம் கொண்டுள்ள வாக்குப் பலத்தின் மூலம் ஆட்சி மாற்றத்தைத் தமிழகத்தில் கொண்டு வந்துள்ளனர் என்று தேர்தல் முடிவுகள் குறித்து தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை விவகாரம் தமிழக அரசியலில் செல்லாக் காசாகிவிட்டது. தமது உறவுகள் என்ற உணர்வுகளுக்கு அப்பால் இந்திய தேசிய நலனை மட்டுமே நேசிக்க வேண்டும் என்ற போர்வையில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நலன்களுடன் இணைந்த கொள்கைகளுக்கும் தமிழக மக்கள் தமது தீர்ப்பினை நடந்து முடிந்த இந்தத் தேர்தல் மூலம் அளித்துள்ளனர் என்றும் தமிழகச் செய்திகள் தெவிக்கின்றன.

இலங்கைத் தமிழர்களுக்காகத் தீக்குளித்து நீதி கோரிப் பலர் மாண்ட போதும் தமிழக மத்திய அரசுகளின் மனச்சாட்சியைக் கூட அசைத்துவிட முடியவில்லை.

ஆனால், இலங்கை வாழ் தமிழ் மக்களுக்காக நீதிகோ உயிர் நீத்த அந்தத் தியாகிகளின் கோரிக்கைகள் தமிழக மக்களின் மனச் சாட்சியை மட்டுமல்ல அவர்களது உள் உணர்வுகளையும் தணலாக எரிய வைத்துள்ளது.

இந்தத் தியாகிகளிகன் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து, தலைவணங்கி, தமிழக மக்கள் இந்தத் தீர்ப்பினை வழங்கியுள்ளனர் எனத் தமிழகச் செய்திகள் கூறுகின்றன.

கலைஞர் கருணாநிதிக்கும், செல்வி ஜெயலலிதா ஜெயராமுக்கும் இடையில் பல முரண்பாடுகள் இருந்தாலும் அவர்கள் இருவரும் ஒரே கொள்கையுடையவர்கள் என்றால் நிச்சயம் அது ஈழத் தமிழர் விடயமாகத் தான் இருக்க முடியும் என்பது உலகளாவிய அபிப்பிராயமாகும்.

1991 ஆம் ஆண்டு தலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்றிருந்த செல்வி ஜெயலலிதா ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டம் குறித்துப் பல்வேறு பட்ட நோக்கங்களைக் கொண்டிருந்தார்.

““தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடுவது என்ற பாதையிலிருந்து விலகித் தனது அரசியல் எதிரிகளை அழித்து வருகின்ற இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் என்றைக்கு மாறியதோ அன்றிலிருந்து அந்த இயக்கத்தைக் கடுமையாக விமர்சித்து வருகிறேன். இதில் எனது நிலைப் பாடு, ஈழத்தமிழர்கள் வேறானவர்கள், புலிகள் இயக்கம் வேறானது என்பது தான்'' என்றும். ““மத்திய அரசு இந்தியாவில் விடுதலைப் புலிகளைத் தடை செய்வதற்கு நாங்கள் ஒரு கருவியாக இருந்தோம்'' என்றும் பகிரங்கமாகவே இவர் கூறிவந்தார்.

எனினும், கடந்த இரு வருடங்களில் நடந்த இறுதிப் போர் நடவடிக்கைகளினால் தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சிகளின் காரணமாக செல்வி ஜெயலலி தாவின் பார்வையில் ஏற்பட்டுள்ள மாற்றம் கலைஞரிலும் பார்க்க ஒரு மாறுபட்ட கொள்கையை வெளிக்காட்டியுள்ளது.

ஈழத் தமிழர்கள் பிரச்சினை உக்கிரமடைந்த போதெல்லாம் ஆட்சி அதிகாரத்திலிருந்த கலைஞர் பிரதமருக்கு கடிதம் எழுதுவதும், தூதுக் குழுக்களை அனுப்புவதும், உண்ணாவிரதம் இருப்பதும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்துவதும் எனக் காலத்தைக் கடத்தினார் என்பதும் நாம் அறிந்த மறுக்க முடியாத உண்மையாகும்.

இந் நிலையில் தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், இலங்கைத் தமிழர் நலனுக்காக தம்மிடம் 18 அம்சத் திட்டங்கள் உள்ளன என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டது மட்டுமன்றி அதனை அறிவித்தும் இருந்தவர் செல்வி. ஜெயலலிதா.

* இலங்கை வடபகுதி முகாம்களில் இன்னும் ஒரு இலட்சம் பேர் ஆதரவற்றவர்களாய் உள்ளனர். அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும்.

* மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

* அழிக்கப்பட்ட விவசாய நிலங்கள் சீரமைக்கப்பட வேண்டும்.

* அழிக்கப்பட்ட நீர் ஆதாரங்கள் சரி செய்யப்பட வேண்டும்.

* மக்களுக்கு கல்வி வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

* கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டும்.

* புதிய பள்ளிகள் கட்டப்பட வேண்டும்.

* பழைய பள்ளிகள் புனர் நிர்மாணம் செய்யப்பட வேண்டும்.

* போரினால் கணவனை இழந்த, விதவைகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும்.

*போனால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் கவுன்ஸிலிங் வழங்கப்பட வேண்டும்.

* கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் புனர் நிர்மாணம் செய்யப்பட வேண்டும்.

* கோயில்கள், தேவாலயங்கள், புத்த மடாலயங்களாக ஆக்கப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

* போரில் ஊனற்றவர்களுக்கு சிகிச்சையும் , மறுவாழ்வும் வழங்கப்பட வேண்டும்.

* ஆண்கள் குறைந்து விட்டதால் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மனரீதி யான அழுத்தம் போக்கப்பட வேண்டும்.

* பெண்களே நடத்தும் தொழிற்கூடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

* வருகின்ற அனைத்து நிவாரண உதவிகளும் தமிழ் மக்களுக்குச் சரியான முறையில் சென்றடைய வேண்டும்.

* தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அங்கு பணியாற்ற அனுமதிக்கப் படவேண்டும்.

* பத்திகையாளர்கள் தமிழர்களைச் சந்திக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

இவற்றையெல்லாம் நிறைவேற்றிய பின்னர், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்துப் பேசி மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் உலகமே எதிர்பார்க்கின்றது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் தமிழர்கள் எதிர்பார்க்கும் உரிமையும், சுய மரியாதையும் கொண்ட தமிழ்ச் சமூகம் இலங்கையில் அமைக்கப்பட்ட பின்னரே தமிழ்நாட்டில் மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று ஜெயலலிதா கூறியிருந்தார்.

இந்நிலையில், ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை இறுதி யுத்தம் குறித்த தகவல்களை வெளியிட்டதன் பின்னர் இலங்கை தொடர்பில் தமிழகத்தில் மீண்டும் கொந்தளிப்புகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான ஒரு புதிய சந்தர்ப்பத்தில் ஆட்சி பீடம் ஏறத் தயாராகியுள்ள செல்வி. ஜெயலலிதா முதன் முதலாக வழங்கியுள்ள பேட்டியின் போது, ““இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக நான் பல முறை விளக்கியுள்ளேன். இது ஒரு சர்வதேசப் பிரச்சினை. எனவே, தமிழக அரசால், ஒரு மாநில அரசால் குறிப்பிட்ட அளவில் மட்டுமே செயற்பட முடியும். அதற்கு மேல் செயற்படுவதென்றால் அது மத்திய அரசால் மட்டுமே, அதாவது இந்திய அரசால் மட்டுமே செய்ய முடியும்.

இருப்பினும், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நான் இரண்டு தீர்வுகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.முதலாவது போர்க்குற்றம் புரிந்தவர்களை சர்வதேச போர்க் குற்றங்களுக்கான நீதிமன்றில் நிறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம். அதைச் செய்யுமாறு இந்திய அரசை நான் தொடர்ந்து வலியுறுத்துவேன்.

இரண்டாவது ஈழத் தமிழர்கள் கௌரவமான, சுதந்திரமான வாழ்க்கை வாழ இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும். அதைச் செய்ய இலங்கை அரசு மறுத்தால் இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண் டும்.

அப்படிச் செய்தால், இலங்கை அரசு பணிவதைத் தவிர வேறு வழி யில்லை. இதைச் செய்யுமாறு இந்திய அரசை நான் தொடர்ந்து வலியுறுத்துவேன் என்றும் கூறியுள்ளார்.

எம்மைப் பொறுத்தவரையில் நீண்ட காலமாகத் தொடர்ந்து வரும் இனப்பி ரச்சினை விவகாரத்திற்கு நிரந்தரமான தீர்வைப் பெறுவதே முக்கியமான அம்சமாக அமைந்துள்ளது.

உலகளாவிய தியிலான நெருக்குவாரங்கள், நிரந்தரமான தீர்வு ஒன்று ஈழத்தமிழர்களுக்காக எட்டப்பட வேண்டும் என்பதாக அமையுமானால், அதனை வரவேற்பதே ஆக்க பூர்வமானதாக இருக்கும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை அதிகார பூர்வமற்ற வகையில் வெளியாகியதுதல் இந்தியா மௌனம் காத்தே வருகின்றது. இந்த அறிக்கை தொடர்பாக இந்தியா ஏதாவது கருத்தினை முன்வைப்பின் இறுதிக்கட்டப் போருக்கான குற்றப்பழி தன்மீதும் வந்துவிடும் என்ற அச்ச உணர்வு அதற்கு இருக்கிறது.

எனவேதான் இந்தியா அமைதி காக்கின்றது என்று புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் தெற்காசியவியல் துறைப் பேராசியர் பி.சகா தேவன் பி.பி.ஸிக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

தமிழகத் தேர்தலுக்கு பின் வெளியாகிய இந்தக் கருத்தினை தேர்தலுக்கு முன் தமிழக மக்கள் எவ்வாறு தமக்குள் உள்வாங்கிக் கொண்டு வாக்களித்து தீர்ப்பினை வழங்கியுள்ளனர் என்பதை இந்திய மத்திய அரசு தற்பொழுதாவாது உணர்ந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் தமிழக மக்கள் தி.மு.க. அரசின் செய்கைகளுக்கு தீர்ப்பினை வழங்கி அவர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். இந்திய மத்திய அரசு தனது செய்கைகளுக்குப் பிராயசித்தம் தேட வேண்டும் என்று தமிழக மக்கள் தமது தீர்ப்பின் மூலம் உணர்த்தியுள்ளனர்.

தமிழகத்தை இராமர் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன என்ற மனப்போக்கு இலங்கையில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில தமிழர்களிடம் இருக்கலாம். ஆனால், தமிழக மக்களைப் பொறுத்தவரையில், இராவணனையோ, இராமரையோ பற்றி கவலைப்படாது இலங்கை தமிழ் மக்கள் பற்றி மிக ஆழமாகக் கவலைப்படுவது குறித்த உணர்வை தேர்தல் தீர்ப்பாக வழங்கியுள்ளமையைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இலங்கைத் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை பெற்றுக் கொடுப்ப தில் இந்தியாவுக்குள்ள தார்மீகக் கட்டுப்பாடு மிகமிக அதிகம் என்பதை தமிழக மக்களின் சார்பில் மாத்திரமல்ல இலங்கை வாழ் தமிழ் மக்கள் சார்பிலும் இந்தியமத்திய அரசுக்கு கூறிவைக்க விரும்புகின்றோம்.

http://akkinikkunchu.com/new/

இந்தியாவின் தார்மீக தேவைக்கு அப்பால், அதற்கு தனது பிராந்தியத்தில் பாதுகாப்பு, பொருளாதார நலன்களுக்கு நட்பு நாடுகள் தேவை.

சீன வல்லரசுடன் பாகிஸ்தான் பலத்த உறவை வளர்ப்பது, இலங்கைத்தீவில் இந்தியாவிற்கு தென்பகுதியில் ஒரு நல்ல உறவுள்ள நாடு ஒன்றை தேவையாக்கியுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.