Jump to content

மெளனப் புரட்சி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமாத கால புதிருக்கு விடை கிடைத்துவிட்டது. அ.தி.மு.க. தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருக்கிறது. இது அ.தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றி என்பதைவிட, தி.மு.க.வுக்கு கிடைத்த தோல்வி என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க. ஆட்சியில் முதல்வர் கருணாநிதி நாட்டுப் பிரச்னைகளைப் பற்றி யோசித்ததைவிட வீட்டுப் பிரச்னைகளைப் பற்றி யோசித்த நேரம்தான் அதிகம்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி செய்திகள் வெளியாகத் தொடங்கியதுமே, தி.மு.க. மீதான இமேஜ் சரியத் தொடங்கியது. இலவசங்களாலும், பணத்தாலும் மக்களின் மனதை மாற்றி விடலாம் என தி.மு.க. நினைத்தது. அந்த எண்ணத்தை மாற்றியிருக்கிறார்கள் மக்கள்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஈழத் தமிழர் பிரச்னை தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்திய காலம் அது. ஈழ ஆதரவாளர்களும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக வேலை செய்தனர். அதையும் தாண்டி தி.மு.க.வுக்கு கிடைத்த வெற்றியை கரு ணாநிதி தனக்கு சாதகமாக நினைத்திருக்கக் கூடும். ஆனால், மத்தியில் ஆட்சி என்பது வேறு, மாநில ஆட்சி என்பது வேறு என்பதை மக்கள் தெளிவாகவே புரிந்து வை த்துள்ளார்கள் என்பதைத்தான் சட்டமன்றத் தேர்தல் வெற்றி உணர்த்துகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி என்று முடிவானதுமே, தி.மு.க.வின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியானது. அ.தி.மு.க.

வலுவான கூட்டணியை அமைத்திருந்தது அதற்கு ஒரு காரணம்.

ஜெயலலிதாவா, கருணாநிதியா என ஜம்ப் ஆகிக் கொண்டிருந்த ராமதாஸ் கருணாநிதியுடன் இணைய, தி.மு.க.வுக்கு வட மாவட்டங்களில் பலம் கிடைத்தது போல் ஒரு தோற்றம் உருவானது. ஆனால் அது தோற்றம் மட்டுமே என்பதை தேர்தல் பிரசாரத்தின் போது காண முடிந்தது.

‘‘முதல்முறையாக நாங்கள் இணைகிறோம், எங்கள் கனவு நனவாகி விட்டது’’ என்றெல்லாம் ராமதாஸும், திருமாவளவனும் கட்டியணைத்து போஸ் தந்தார்கள். ஆனால், தலைவர்களிடம் இருந்த நெருக்கம் தொண்டர்களிடம் இல் லாமல் போனது.

வட மாவட்டங்களில் வன்னியர்களால் தலித்துகள் தாக்கப்படும் சம்பவங்களும், தலித்துகள் வன்கொடுமைச் சட்டத்தில் பொய்ப்புகார் கொடுக்கிறார்கள் என வன்னியர்களும் புகார் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், இரு கட்சித் தொண்டர்களும் இணைந்து தேர்தல் பணியாற்றவே இல்லை.

இளைஞர் காங்கிரஸ் நடைபயணம், காங்கிரஸ் தலைவர்களின் தி.மு.க.விற்கு எதிரான பேச்சு என காங்கிரஸ் தொண்டர்களிடையே தி.மு.க.விற்கு எதிரான மனநிலையே தேர்தலுக்குச் சில மாதங்கள் முன்புவரை இருந்தது. திடீரென காங்கிரஸுடன் தி.மு.க. கூட்டணி என அறிவிக்க, தொண்டர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காங்கிரஸ் போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் தி.மு.க.வினரும், தி.மு.க. போட்டியிட்ட இடங்களில் காங்கிரஸ்காரர்களும் வேட்பாளர்களுக்கு எதிராக வேலை பார்த்தார்கள்.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியில் பல இடங்களில் போட்டி வேட்பாளர்கள் வேறு நிறுத்தப்பட்டனர். நானா, நீயா என போட்டி போட்டு மாறி, மாறி தோற்கடிக்கும் வேலையை காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியினர் சரியாகவே செய்தார்கள். பா.ம.க. - காங்கிரஸ் மோதல், விடுதலைச் சிறுத்தைகள் - காங்கிரஸ் மோதல் என கூட்டணிக்குள் குழப்பங்களுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.

ஆனால் இது எதுவும் வெளியில் தெரியாதவாறு, அதன் தலைவர்கள் ஒற்றுமையாக இருப்பதுபோல் சித்திரிக்கப்பட்டது. அனைவரும் மேடையில் ஒன்றாகப் பேசி, தங்கள் கைவசம் இருக்கும் மீடியாக்கள் மூலம் ஒற்றுமையை பரப்பிக் கொண்டிருந்தார்கள்.

அ.தி.மு.க.வில் நிலைமை நேர் எதிராக இருந்தது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட மேடையில் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை, ஜெயலலிதா பெயரை விஜயகாந்த் சொல்லவில்லை. ஆனால் அ.தி.மு.க., தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்களின் நோக்கம், தலைவர்களைப் போலவே, தி.மு.க.வை வீழ்த்துவதாக இருந்தது. இந்த நோக்கத்தில் அவர்கள் ஒன்றுபட்டு தேர்தல் வேலை செய்தார்கள்.

இந்த எல்லா அரசியலையும் தாண்டி ஓட்டுப்போட்ட மக்களுக்கு மின்வெட்டுதான் தி.மு.க. அரசின் மீது தீராத கோபத்தை வரவழைத்தது. காலை ஆறுமணிக்கே தொலைந் துபோகும் மின்சாரத்தின் முன் கிரைண்டர், கலர் டி.வி. எல்லாம் எடுபடவில்லை. கடந்த ஆண்டுகளில் இந்த மின்தடையால் ஏராளமான சிறுதொழில்களும், விவசாயமும் கிட்டத்தட்ட அழிந்து போனது என்பதுதான் உண்மை.

அதிரடியாய் உயர்ந்து கொண்டிருக்கும் விலைவாசியை சமாளிக்க முடியாமல் நடுத்தர, ஏழை மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அதைக் கட்டுப்படுத்த எந்த முயற்சியும் செய்யாமல், ‘‘மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து விட்டது, எவ்வளவு விலை உயர்ந்தாலும் மக்கள் பொருட்களை வாங்குவார்கள் என்பதற்கு தி.நகரே சாட்சி’’ என்றெல்லாம் கருணாநிதி பேசி மக்களை வெறுப்பேற்றினார்.

கடந்த தேர்தல்களில் தங்களுக்கு வெற்றியைத் தந்ததாக தி.மு.க. நம்பிக் கொண்டிருக்கும் திருமங்கலம் ஃபார்முலாவும் இந்தமுறை கவிழ்த்து விட்டது.

தேர்தல் கமிஷனின் எல்லாக் கெடுபிடிகளையும் மீறி, கடைசி நாட்களில் தி.மு.க. பணப்பட்டுவாடா செய்தது.

‘‘ஸ்பெக்ட்ரம் பணத்தில் கொள்ளையடித்ததை உங்களுக்குத் தருவார்கள் வாங்கிக் கொள்ளுங்கள்’’ என எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்து கொண்டிருக்க, இந்தப் பணம் பெ ரும்பாலும் பொதுமக்களுக்கு போய்ச் சேரவேயில்லை என்பதுதான் உண்மை. கட்சி கொடுத்த பணத்தை கட்சிக்காரர்களே அமுக்கிக் கொண்டனர்.

கடந்த தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்குக் காரணமாக சொல்லப்பட்ட தேர்தல் அறிக்கை நலத்திட்டங்கள் முழுக்க மக்களை போய்ச் சேரவேயில்லை.

கலர் டி.வி., இலவச சிலிண்டர் எல்லாவற்றையும் கட்சிக்காரர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கே தந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பூஜ்யங்களை எண்ண முடியாத அளவுக்கு ஊழல் செய்திருக்கிறார்கள் என்பது மக்களிடையே பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது. ஊழல் பணத் தில்தான் கலைஞர் டி.வி. தொடங்கப்பட்டது, கனிமொழி, தயாளு மீது வழக்கு, ராஜாத்தி அம்மாள் நீரா ராடியாவுடன் நடத்திய பேச்சு, பேரனுக்கு பதவி கொடுக்க தயாளு அம்மாள் 600 கோடி வாங்கினார் என கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கம் மக்களை எரிச்சலடையச் செய்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் கருணாநிதி மகன்களும், பேரன்களும் சினிமா, டி.வி., பத்திரிகை என எல்லாத் தொழில்களிலும் கால் பதிக்க, அவர்கள் அனுமதி இல்லாமல் ஒரு சினிமா கூட வெளிவர முடியாது என்ற நிலை ஏற்பட்டது. ஆட்சி மாறினால் உடனே அவர்களுக்கு ஜால்ரா அடிக்கும் சினிமா துறையினர் கூட கருணாநிதி கு டும்பத்தின் ஆதிக்கம் குறித்து வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தனர்.

இந்தக் குடும்ப ஆதிக்கம் தி.மு.க.வின் அமைச்சர்கள் மட்டத்திலும் பரவ ஆரம்பித்தது. மாவட்ட வாரியாக அமைச்சர்கள் தங்கள் வாரிசுகளைக் களமிறக்க கட்சிக்காக வேலை செய்த தொண்டர்கள் குமுற ஆரம்பித்தார்கள். அமைச்சர்கள் மீது தொடர்ந்து கூறப்பட்ட நில ஆக்கிரமிப்பு, மிரட்டல், கட்டப் பஞ்சாயத்து கொலைக் குற்றப் புகார்களால் தி.மு.க.வின் இமேஜ் கடுமையாகச் சரிந்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க. அமைச்சர்களின் சொத்து மதிப்பு கற்பனை பண்ண முடியாத அளவுக்கு வளர்ந்து விட்டது.

கருணாநிதியின் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்கள் எல்லாம் ஆளாளுக்கு விளையாட ஆரம்பித்தார்கள். கருணாநிதியின் உதவியாளர் தனி ராஜ்ஜியமே நடத்த ஆரம்பித்தார். குடும்ப நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அதிகார மையமாகச் செயல்பட்டது கட்சியினரிடையே கோபத்தையே ஏற்படுத்தியது.

இதுவரை இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் இரண்டு புதிய விஷயங்களை கவனிக்க வேண்டும். தி.மு.க. அரசுக்கே வாக்களித்த வரலாறுடைய அரசு ஊழியர்கள் இந் தமுறை பெருமளவில் அ.தி.மு.க.விற்கு வாக்களித்திருக்கிறார்கள். தி.மு.க.வின் உண்மையான கட்சித் தொண்டர்கள், ‘‘கட்சி வளர வேண்டுமானால் குடும்ப ஆதிக்கம் ஒழிய வேண்டும். அதற்கு இந்த முறை தி.மு.க. தோற்க வேண்டும். அதிலிருந்தாவது கட்சி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்’’ என வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தார்கள்.

கட்சியில் பல ஆண்டுகளாக வேலை செய்பவர்களை விட, அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.விற்கு வந்தவர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட, சீனியர் தி.மு.க.வினர் எரிச்சலடைந்தனர்.

தி.மு.க.வின் பலவீனங்கள் அ.தி.மு.க.வுக்கு பலமாகி விட்டது. அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்டத் தலைவர்களின் உழைப்பு இந்தத் தேர்தல் வெற்றிக்கு முக்கியக் காரணம். வெற்றி பெறும் தொகுதிகளாக தேர்வு செய்தது, மக்களுக்கு நெருக்கமாக காட்டிக் கொண்டது, தி.மு.க.வின் பலவீனங்களை சரியாக பயன்படுத்திக் கொண்டது என பல காரணங்களை அடுக்கலாம். பெரிய ஊடக பலம் இல்லாததால் இந்த வேலைகள் வெளித்தெரியாமல் போயின.

இதைத்தவிர, அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட இலவச ஆடு, பசுமை வீடு போன்ற திட்டங்கள் கிராம மக்களை அதிகம் ஈர்த்துள்ளன என்பதும் உ ண்மை. விஜயகாந்துக்கு எதிராக தி.மு.க.வால் களமிறக்கப்பட்ட வடிவேலு, அ.தி.மு.க.வை தாக்கி ஒரு வார்த்தையும் பேசவில்லை.

எம்.ஜி.ஆர். பாடல்கள் வேறு பாடி ஓட் டுக்கேட்க, அதுவும் அ.தி.மு.க.வுக்கு சாதகமாக அமைந்ததுதான் பெரும் நகைச்சுவை.

சீமான் போன்ற தமிழ்த்தேசியவாதிகள் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணிக்கு எதிராக பெரிய அளவில் வேலை செய்ய, அதுவும் அ.தி.மு.க.வுக்கு சாதகமானது.

நாட்டை விட, வீட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் பலனை கருணாநிதி இப்போது உணர்ந்திருப்பார்.

புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்கும் ஜெயலலிதா நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது, ‘‘இது அ.தி.மு.க.வின் வெற்றி அல்ல. தி.மு.க.விற்கு எதிரான கோபம் மட்டுமே’’ என்பதைத்தான். மக்களின் மௌனப் புரட்சியே இந்த வெற்றியை சாத்தியமாக்கி இருக்கிறது.

தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்குவதற்கு முன்பாக அறிவாலயத்தில் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். முடிவுகள் வரத்தொடங்கிய சிறிது நேரத்திற்கெ ல்லாம், ஒரு போலீஸார் கூட அங்கு இல்லை. கட்சி அலுவலகத்தில் தேர்தல் பொறுப்பாளர்கள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், பொன்முத்துராமலிங்கம் ஆகியோர் மட்டும் இ ருந்தனர். பின்னர் ஆயிரம்விளக்கு உசேன் மட்டும் வந்து சேர்ந்தார். சளித் தொல்லை காரணமாக முதல்வர் யாரையும் பார்க்காமல் கோபாலபுரம் இல்லத்தில் இருந்தார். அங்கு பாதுகாப்புக்குப் போடப்பட்டிருந்த போலீஸாரும் சிறிது நேரத்தில் காணாமல் போயினர்.

வடிவேலு வீட்டுக்கு காவல்!

1967-ம் ஆண்டு அண்ணாதான் பிரசார பலமாக இருந்தார். அண்ணாவை முன்னிலைப்படுத்தியே தி.மு.க. பிரசாரம் செய்தது. மக்கள் அலைகடலென திரண்டு வந்து அவரது பேச்சை கேட்டார்கள்.

இந்தத் தேர்தலுக்கு அதே தி.மு.க., நடிகர் வடிவேலுவை நம்பியே களத்தில் இறங்கியது. விஜயகாந்தை திட்டுவது, எம்.ஜி.ஆர். பாட்டைப் பாடி தி.மு.க.வுக்கு ஓட்டுக் கேட்பது, தேர்தலுக்குப் பிறகு கருணாநிதியைச் சந்தித்து, தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று அறிவிப்பது...என பிஸியாகவே இருந்தார் வடிவேலு.

தேர்தல் முடிவு வேறுவிதமாக அமைந்ததால், வடிவேலுவின் வீட்டுக்கு பலத்த போலீஸ் காவல் போடப்பட்டது. வடிவேலு வீட்டருகே அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நிருபர்களைச் சந்தித்தார். நடிகர் வடிவேலுவைப் பற்றி கருத்துக் கூறுவதை அவர் தவிர்த்துவிட்டார்.

சட்டசபையில் எதிர்க்க ட்சியாகும் வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்ச்சியுடன் ஏற்போம் என்று முடித்துக்கொண்டார்.

- குமுதம் ரிப்போட்டர்

Link to comment
Share on other sites

இந்த மௌன புரட்சியில் சீமானின் பங்கு

Significantly, film director and activist, Mr Seeman who runs a NAAM TAMILAR outfit met the AIADMK chief Miss J Jayalalitha before the polls and offered his support to defeat the DMK-Congress alliance. The DMK government had come down heavily on Mr Seeman and arrested him under NSA, in an apparent bid not to rub up the Congress the wrong way, even as Mr Karunanidhi himself never approved of the LTTE.

A powerful orator, Mr Seeman was drawing huge crowds from the day he addressed his first meeting on the Lankan Tamil plight just as the war began to escalate in Sri Lanka towards the end of 2008. In order not to have him challenge his hold on power, the DMK government had him arrested a few times and then under the NSA. As the election campaign drew to a close, the DMK chief gained an image as a friend of the Sri Lankan president, Mr Mahinda Rajapaksa.

After offering support to the AIADMK, Mr Seeman’s outfit got down to the job of exclusively targeting the Congress constituencies and campaigned widely in those constituencies. Elsewhere, the Lankan Tamil issue and Karunanidhi’s duplicity along with the “heartless” stand of the Congress was taken up by every Opposition party from the AIADMK to the BJP and even the BSP and independents

http://www.thestatesman.net/index.php?option=com_content&view=article&id=369625&catid=36

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.