Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா.அறிக்கை: கிருஷ்ணா, பெய்ரீஸ் சந்திப்பு

Featured Replies

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் குறித்து ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கை தொடர்பாக இந்திய அரசின் ஆதரவைப் பெற டெல்லி வந்துள்ள சிறிலங்க அயலுறவு அமைச்சர் ஜி.எல்.பெய்ரீஸ், இந்திய அயலுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்துப் பேசினார்.

ஆனால் இந்தச் சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து மத்திய அரசின் சார்பில் எந்த ஒரு அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

ஐ.நா.அறிக்கை தொடர்பாக டெல்லியின் ஆதரவை நாடியே பெய்ரீஸ் வந்துள்ளார் என்றாலும், அவருடன் அமைச்சர் கிருஷ்ணா நடத்திய சந்திப்பில் தமிழக மீனவர்கள் பாதுகாப்பு பிரச்சனை குறித்துப் பேசப்பட்டதாக அரசு அதிகாரிகள் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

http://tamil.webdunia.com/newsworld/news/national/1105/16/1110516049_1.htm

  • தொடங்கியவர்

ஐ.நா நிபுணர் குழு விவகாரம் - இந்தியாவின் ஆதரவு யாருக்கு?

இலங்கை போர்க்குற்ற விவகாரத்தில் இந்தியாவின் ஆதரவை கோரி இலங்கை வெளிவிவகார் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று இந்திய உயர்மட்ட குழுவினருடன் முக்கிய பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார்.

இதற்காக இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு நேற்று மாலை இந்தியா சென்றடைந்த ஜீ.எல்.பிரீஸ் குழுவினர், ஐ.நா நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இந்திய அரசுக்கு தெளிவுபடுத்தவுள்ளனர்.

மேலும் இச்சந்திப்பின் போது பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளிவிவகார் அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பாதுகாப்பு செயலர் பிரதீப் குமார், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் ஆகியோரையும் அவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் சந்தர்ப்பம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை எதிர்த்தும், இலங்கைக்கு ஆதரவு தெரிவித்தும், சீனா,ரஷ்யா, மாலைதீவு, பங்களாதேஷ் முதலான பலநாடுகள் கருத்து வெளியிட்டுள்ளன.

ஐ.நா குழு அறிக்கையை ஆதரித்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், சுவிற்சர்லாந்து, கனடா போன்ற நாடுகள் கருத்துவெளியிட்டுள்ளன.

http://www.4tamilmedia.com/ww5/index.php/newses/srilanka/4596-2011-05-16-07-40-26

  • தொடங்கியவர்

மீனவர்கள் மீது பலாத்காரத்தை பிரயோகிக்க வேண்டாம்: இந்தியா

இந்திய மீனவர்கள் விடயத்தில் பலாத்காரத்தை பிரயோகிக்க வேண்டாம் என இலங்கையிடம் இந்தியா கூறியுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இன்று இதைத் தெரிவித்துள்ளார்.

இலங்கை மீது போர்க்குற்றச்சாட்டு சுமத்திய ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை குறித்து இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெரிவிப்பதற்காக அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும்  பரஸ்பர நலன்களுடன் தொடர்பான இரு தரப்பு,  பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினர்.

இந்திய மீனவர்களின் பாதுகாப்பு அதிமுக்கியத்துவம் வாய்ந்தது எனவும் இலங்கையின் நீர்ப்பரப்பிற்குள் அவர்கள் நுழைந்தால் பலாத்காரத்தை பிரயோகிப்பதை இலங்கை தவிர்க்க வேண்டும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா இச்சந்திப்பின்போது கூறியதாக உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/21495-2011-05-16-17-46-41.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.