Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலைக் கரங்களுடன் இனியும் கைகோர்க்க முடியுமா?

Featured Replies

இனப்படுகொலைக் கரங்களுடன் இனியும் கைகோர்க்க முடியுமா?

'பயங்கரவாத ஒழிப்பு' என்பதன் பெயரில் ஈழத்தமிழரை இனப்படுகொலை செய்வது என்ற முடிவில் சிங்கள அரசு உறுதியாக இருந்தது.

2009 மே 16ம் தேதி காலை 10.00 மணிக்கு போராளிகளை சுய முடிவு எடுக்க அனுமதிப்பது என்று விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் தீர்மானித்தது. ஆயினும் அந்த அறிவிப்பு மாலை 3.00 மணிக்கே வெளியானது. 'போராளிகள் சுய முடிவெடுக்கலாம்' என்று 3.00 மணிக்கு அறிவிக்கப்பட்டதோடு புலிகளின் தரப்பில் தோல்வி நிச்சயிக்கப்பட்டு விட்டது. இம்முடிவு போராளிகளைச் சென்றடைந்ததும், சரணடைவது என்ற முடிவைப் பெருமளவு போராளிகள் எடுத்து சரணடையத் தொடங்கும் படலம் மாலை 4.30 மணியளவில் ஆரம்பமானது. புலிகள் சரணடையத் தொடங்கியமை அரச உயர்மட்டத்திற்கு எப்படியோ மாலை 5.00 மணியளவில் உறுதிப்படுத்தப்பட்டதாகி இருக்கும். ஆதலால் அரசுக்கு மாலை 5.00 மணிக்கு வெற்றி நிச்சயமானதாகிவிட்டது. அவ்வாறு வெற்றி நிச்சயிக்கப்பட்டதில் இருந்து 18 ம் தேதி காலை 5.00 மணிவரையான 36 மணி நேரத்துக்குள் 20000 - 30000 இடைப்பட்டளவு பொதுமக்கள் கொடூரமாய்க் கொன்று குவிக்கப்பட்டனர்.

போராளிகள் சரணடையத் தொடங்கிய பின்பு முழுவேகத்தில் அரசபடை மக்களைக் கொன்று குவிப்பதில் ஈடுபட்டது. இது தெளிவாகவே இனப்படுகொலையைப் பறைசாற்றும் அம்சமாகும். பயங்கரவாதத்தை அழிப்பது என்பதன் பெயரால் அரசு உண்மையில் இறுதிக்கட்டப் போரில் மட்டும் 100000 இற்கு மேற்பட்ட மக்களைப் படுகொலை செய்துள்ளது என்ற உண்மை இப்போது ஊர்ஜிதமாகி வருகிறது.

இனப்படுகொலையின் இன்னொரு நீட்சி

ஈழத்தமிழரை ஒன்றுபட்ட இலங்கைக்குள் தம்முடன் இணைந்து வாழுமாறு கோர எந்தச் சிங்கள மகனுக்கும் இனி உரிமையில்லை. சிங்கள மக்கள் மத்தியில் இருந்து இப்பாரிய இனப்படுகொலைக்கு எதிராக நீதியின் பெயரால் குரல் எழும்பவில்லை. சிங்கள ஊடகங்களும் கொழும்பில் இருந்து வெளியாகும் சிங்களவருக்குச் சொந்தமான ஆங்கில ஊடகங்களும் இவ் இனப்படுகொலைக்கு ஆதரவாகவே தொடர்ந்து செயற்பட்டு வருகின்றன. அவை வெட்கமின்றிச் சிங்கள அரசின் இனப் படுகொலையை மூடிமறைப்பதுடன் அரசுக்குச் சாதகமான செய்திகளையே கூறியும் வருகின்றன. சிங்கள மக்கள் மத்தியில் இருந்து குறிப்பிடக் கூடியளவிற்குப் புத்திஜீவிகளின் குரலும் எழவில்லை.

சூரியகந்தவில் நூற்றுக்கணக்கான ஜே.வி.பி இளைஞர்களை அரசு கொன்று புதைத்திருந்தபோது அதற்கெதிராகச் சிங்கள, ஆங்கில ஊடகங்கள் போர்க்கொடி ஏந்தின. ஆனால் இலட்சக்கணக்கில் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டபோது சிங்கள ஊடகங்களும் புத்திஜீவிகளும் இந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்காமை மட்டுமன்றி இப்பாரிய இனப்படுகொலை செய்த அரசைப் பாராட்டிப் பாதுகாக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றன. இது இனப்படுகொலை செய்த அரசாங்கத்தையும், அதன் இராணுவத்தின் செயலையும்விட மோசமான செயலாகும். இது இனப்படுகொலையின் இன்னொரு நீட்சியாகும். கற்றறிந்த சிங்கள ஊடகத்தினரும், புத்திஜீவிகளும், சட்டவாளர்களும் இத்தகைய மனநிலையிற்தான் செயற்படுகிறார்கள் என்றால் இவ்வாறான மனநிலையைக் கொண்ட சிங்கள இனத்தவருடன் இனியும் எவ்வாறு தமிழர்கள் இணைந்து வாழ முடியும்?

பல்லாயிரக் கணக்கில் அப்பாவித் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டதை ஐ நா நிபுணர்குழு அறிக்கை அதிகம் விஞ்ஞானபூர்வமாக நிரூபித்துள்ளது. இதன் பின்னும் சிங்களக் கட்சிகளோ, சிங்களத் தொழிற்சங்கங்களோ, சிங்களச் சட்டவியலாளர்களோ இந்த அநீதிக்கு எதிராகத் தீர்மானங்களை நிறைவேற்றிக் குரல் கொடுக்கத் தயாராக இல்லை. சர்வதேச சமூகத்தின் முன் இந்த இனப்படுகொலைக்கு எதிரான அறிக்கைகளையோ அன்றி ஐ நா நிபுணர்குழுவின் அறிக்கைக்கு ஆதரவான கருத்துக்களையோ முன்வைக்கவில்லை. எனவே இவர்களுடன் சகோதரத்துவம் பேசித் தமிழர்கள் எவ்வாறு இணைந்து வாழ முடியும்.

இனபடுகொலையைக் கொண்டாடும் நிறுவனங்கள்

இங்கு ஆயுதம் தாங்கிய அரச இராணுவத்தின் கண்மூடித்தனமான இனப்படுகொலை ஒருபுறம் அமைய, அந்த இனப்படுகொலையைக் கொண்டாடும் வகையிலேயே சிங்கள நிறுவனங்கள் அனைத்தும் செயற்படுகின்றன என்பது பெரிதும் கவனத்துக்குரியது. சிங்கள நிறுவனங்கள் என்பது அதனுடைய கல்வி நிறுவனக் கட்டமைப்புக்கள் தொடக்கம் நிருவாகக் கட்டமைப்புக்கள், பௌத்த மதக் கட்டமைப்புக்கள், தொழில்சார் கட்டமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், ஊடகக் கட்டமைப்புக்கள், நீதித்துறை மற்றும் உள்ளக ஆட்சிக் கட்டமைப்புக்கள் என அனைத்து வகை நிறுவனங்களும் நடந்து முடிந்த இனப்படுகொலைக்குச் சுருதி சேர்ப்பனவாகவே உள்ளன. இது நடந்து முடிந்த இனப்படுகொலையின் கொடுமையை விடவும் மேலும் பல மடங்கு கொடுமையானது.

ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையின் பின்னான காலகட்டம் மேற்படி சிங்கள நிறுவனங்கள் அனைத்தையும் நிர்வாணமாகத் தோலுரித்துக் காட்டியுள்ள காலமாகும். இனியும் சிங்களவருடன் இணைந்து வாழ முடியாது என்பதற்கு ஒரு வலுவான சான்றாகும்.

இனப்படுகொலை சொல்லும் செய்தி மிகவும் தெளிவானது. அதாவது இப்பாரிய இனப்படுகொலையைச் செய்துள்ள சிங்களவர்களுடனும், அத்தகையவர்களுடைய மன உணர்வுகளுடனும் இணைந்து இனியும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் நாம் வாழ முடியாது என்பதாகும். அதாவது இனப்படுகொலையை விடவும் மோசமானது அந்த இனப்படுகொலை அம்பலமான பின்பும் அதற்குச் சுருதி சேர்த்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் பரந்துபட்ட சிங்கள இனத்தவரினதும் அவர்தம் அமைப்புக்களதும், நிறுவனங்களதும் மனப்பாங்குதான்.

இணையமுடியா இடைவெளி

சிங்கள அரசு அரசியற் தீர்வுகாணத் தயாரானால் அதற்குக் கைமாறாக இவ்வினப் படுகொலை விவகாரத்தைக் கருத்தில் எடுக்காது கைவிட்டுவிடலாம் என்றொரு யோசனை இப்போது முன்வைக்கப்பட்டு வருகிறது. அரசியல் தீர்வு என்பது சிங்கள அரசு எமக்குத் தரும் ஒரு நன்கொடையல்ல. அது எமது பிறப்புரிமை. அதற்குக் கைமாறாக அப்பாவிப் பொதுமக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தை ஈடுவைக்க முடியாது.

இக்கொடூரமான இனப்படுகொலை செய்த கரங்களுடன் நாம் இனியும் எவ்வாறு கைகோர்க்க முடியும்?

இக்கொடூரமான இனப்படுகொலை செய்த முகங்களுடன் நாம் எவ்வாறு முகங் கொடுக்க முடியும்?

வேட்டைக்காரனுக்கும் வேட்டையாடப்பட்ட பிராணிக்கும் இடையிலான உறவையா நாம் ஐக்கியம் என்று சொல்லப் போகிறோம்?

இன்றும் படுகொலையை அவர்கள் வெற்றி விழாக்களாகக் கொண்டாடுகிறார்கள். அப்படிப்பட்ட வெற்றி மனப்பாங்கு கொண்டவர்களுடன் தோற்கடிக்கப்பட்டவர்கள் என்ற அடிமை நிலையிலான உறவை ஐக்கியம் என்று ஒருபோதும் அழைக்க முடியாது. அதாவது இந்த இனப்படுகொலை முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்குத் தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையிலான இடைவெளியை இணைய முடியாத அளவிற்கு அகட்டி அதலபாதாளமாக்கிவிட்டது.

மேற்படி இனப்படுகொலையும் அதைத் தொடர்ந்து சிங்கள நிறுவனங்கள் நடந்துகொள்ளும் முறையும் சொல்லும் செய்தி என்னவெனில்; சிங்களவர்களுடன் தமிழர் ஒருபோதும் இணைந்து வாழ முடியாது என்பதுதான். பிரிந்து செல்வதற்கான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பிரகடனத்தைவிடவும் பிரிந்து செல்ல வேண்டியதற்கான செய்தியை இவ்வினப்படுகொலை தமிழர்க்கும் வெளியுலகிற்கும் மிக ஆழமாகவும் வலிமையாகவும் பறைசாற்றி நிற்கிறது. அதாவது தமிழரைப் பிரிந்து செல் என்று இவ்வினப்படுகொலை ஆணையிட்டுப் பிரகடனப்படுத்துகிறது.

அரசியற் தீர்வும் இனப்படுகொலைக் குற்றச்சாட்டும்

இனப்பிரச்சினைக்கு அரசு தீர்வை முன்வைத்தால் அதற்குப் பதிலாக இனப்படுகொலைக் குற்றச்சாட்டில் இருந்து அரசை விடுதலை செய்தல் என்ற சூத்திரம் மிகவும் ஆபத்தானது. அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. அரசு தீர்வை முன்வைக்காது ஏமாற்றித் தான் தப்பபோகிறது என்பதே ஒருபுறம் உண்மையானாலும் இதன் அடிப்படையை நாம் சரிவரப் புரிந்து கொள்ள வேண்டும்.

இனப்பிரச்சினை முதன்மையானது அது நூற்றாண்டுக் கணக்கில் காணப்படுகிறது. ஆனால் இனப்படுகொலை இப்போது நிகழ்ந்துள்ள ஒரு குற்றச் செயல். இனப்பிரச்சினை என்பது இருந்து வரும் ஒன்று. ஆனால் இனப்படுகொலை அதன்மேல் புரியப்பட்டுள்ள புதியதொரு குற்றச் செயல். இனப்பிரச்சினையின் உச்சக்கட்டமே இனப்படுகொலை. ஆதலால் இனப்படுகொலையைக் குற்றத்தைக் கைவிட்டுவிட்டு இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது. இனப்பிரச்சினையின் உச்சமான இனப்படுகொலைக் குற்றத்திற்குத் தண்டனையும், அதற்கான தீர்வும் ஒருபுறம் அமையும்போது அரசியற் தீர்வு இன்னொரு புறம் நோக்கப்பட வேண்டியது. சிங்களவர்களிடமும் அவர்களது பொலிஸ், இராணுவத்துடனும் இணைந்த தீர்வுக்கு வரலாற்றிலோ சிங்கள அரசியில் அகராதியிலோ இடமில்லை.

நிராயுதபாணிகளான மக்களைக் கொன்றுகுவித்தது மட்டுமன்றி சரணடைந்த நிராயுதபாணிகளான போராளிகளை அனைத்துவகை யுத்த தர்மங்களையும் மீறி பேரினவாத மமதையுடன் சித்திரவதை செய்து படுகொலை செய்த ஒளிநாடாத் தகவல்களும் மற்றும் ஏனையவகைத் தகவல்களும் சிங்கள இன உணர்வின் கொரூரமுகத் தோற்றத்தை மிகவும் அருவருக்கத் தகுந்த வகையில் வெளிக்காட்டுகின்றன. 'மிருகத்தைக் கொல்வது பாவமே ஆயினும் தமிழனைக் கொல்வது பாவமில்லை' என்று பௌத்த மகாசங்கத்தினர் துட்டகைமுனுவுக்கு ஆறுதல் கூறும் பாணியில் அமைந்துள்ள மகாவம்சப் போதனையை, நடந்தேறிய இனப்படுகொலையின் மூலம் சிங்கள ஆட்சியாளர்கள் 21ம் நூற்றாண்டில் தமிழ் மண்ணில் அரங்கேற்றியுள்ளனர்.

இனப்படுகொலையை பண்டாரநாயக்க 1956ம் ஆண்டு கல்லோயாவில் 156 தமிழ் விவசாயிகளைச் சிங்களக் காடையர்களை ஏவிப் படுகொலை செய்ததன் மூலம் ஆரம்பித்தார். 1958ம் ஆண்டு 'இனக் கலவரம்' என்று அழைக்கப்படும் இனப்படுகொலை இதன் அடுத்தகட்டத் தொடர்ச்சியாய் அமைந்தது. 1977, 1979, 1980, 1983 என சிங்களக் காடையர் மூலமான இனப்படுகொலை வளர்ந்து சென்றது. இதன்பின்பு அரசு இராணுவத்தைப் பயன்படுத்தி தமிழ் மண்ணில் இனப்படுகொலை செய்யும் படலத்தை நேரடியாக ஆரம்பித்தது. அதன் உச்சக்கட்டமே முள்ளிவாய்க்காற் படுகொலை.

எனவே இவ்வினப்படுகொலை வரலாற்றின் உச்சக்கட்டத்தை எவன் ஒருவன் மறப்போம் மன்னிப்போம் என்றோ கைவிடுவோம் என்றோ கூறமுடியும். கைவிடுவோம் என்று கூறுவது எதிரியுடன் ஒத்துப்போகும் செயலாக மட்டுமன்றி அநீதிக்கு காவலராகப் போகும் செயலுமாகும். இனப் படுகொலை என்பது இனப்பிரச்சினையின் தலையாய அம்சம் என்ற வகையில் அதற்குத் தீர்வுகாணும் வகையில் இருந்தே இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கவும் வேண்டும்.

தமிழின அழிப்பு என்பது சிங்கள அரசின் தலையாய கொள்கை. இன அழிப்பு பல அம்சங்களை உள்ளடக்கியது. மொழியுரிமை மறுப்பு, பண்பாட்டு உரிமைகள் மறுப்பு, வாழ்விட உரிமைகள் மறுப்பு, சிங்களக் குடியேற்றம், கல்வி, வேலைவாய்ப்பில் புறக்கணிப்பு, ஒன்றுகூடல் சுதந்திர மறுப்பு, வெளிப்பாட்டுச் சுதந்திர மறுப்பு, கலைகலாச்சார உரிமை மறுப்பு அல்லது புறக்கணிப்பு, சிங்கள மயமாக்கல் நிருவாக அமைப்பு ஏற்பாடு, தனிமனித உரிமை மறுப்பு, கூட்டுரிமை மறுப்பு, சட்டவகையான தடை நடவடிக்கைகள், நிருவாக ரீதியான முடக்கங்கள், நிதி ஆதார பாரபட்சம், பொருளாதார ஒடுக்குமுறை, சுயமான தீர்மானங்களுக்கு இடமின்மை, அரசியற் தீர்மானங்களில் பங்கின்மை, காடைத்தன ஒடுக்குமுறை, பொலிஸ், இராணுவ ஒடுக்குமுறை, என இவை அனைத்தும் சேர்ந்து இன அழிப்பு என்ற முழு வடிவத்தைப் பெறுகிறது. இந்தவகையில் இனப்படுகொலை இன அழிப்பின் ஓர் உச்ச வடிவம். அத்தகைய புரிதலுடன்தான் முள்ளிவாய்க்காற் படுகொலையை நாம் கையாள வேண்டும்.

சிங்களத்தின் இராஜதந்திர நகர்வுகள்

இது ஓர் உள்நாட்டுப் பிரச்சினை என்ற பரிமாணத்தைத் தெளிவாகத் தாண்டிச் சர்வதேச மட்ட நீதி கோரும் நிலைக்குப் போய்விட்டது. சர்வதேச நீதி கோரும் விடயத்தைக் கீழ் இழுத்து வீழ்த்தி எதற்காகவும் காலடியில் அடகு வைக்க முடியாது. உள்நாட்டில் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணுவதற்கான முயற்சிகளைத் தந்தை செல்வா வெளிப்படையாகவும், கண்ணியமாகவும், ஆயுதம் தாங்காது நேசக்கரம் நீட்டியும் மேற்கொண்டார். மாறி மாறிப் பதவிக்கு வரும் இரண்டு சிங்களக் கட்சியின் தலைவர்களும் செல்வாவுடன் குறைந்தபட்ச உடன்பாட்டுக்கு வந்தனர். ஆனால் தாம் ஒப்புக்கொண்ட குறைந்த பட்ச உடன்பாடுகளையே அவர்கள் மீறினர்.

உள்நாட்டு ரீதியாகப் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியாத போது இந்தியாவின் துணையுடன் 1983ம் ஆண்டிலிருந்தே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தந்தை செல்வாவை ஏமாற்றியது போலவே இந்தியத் தலைவர்களையும் சிங்களத் தலைவர்கள் ஏமாற்றித் தீர்வுகாண்பதற்கான எத்தகைய கண்ணியமான பாதைகளையும் பின்பற்றத் தவறினர். இந்தவகையில் சிங்களத் தலைவர்கள் ஒருபோதும் தீர்வுக்குத் தயாரில்லாதது மட்டுமன்றி இந்தியாவையும் 1987ம் ஆண்டு போருக்குள் சிக்கவைத்து வேடிக்கை பார்த்து இறுதியில் தம் தலையில் வெற்றிவாகை சூடினர். இனப்பிரச்சினையைக் காட்டி இந்தியாவின் எதிரி நாடுகளைத் தமக்குத் துணைக்கழைப்பதன் மூலம் இந்தியாவை இனப்பிரச்சினை விவகாரத்தில் புறந்தள்ளச் செய்யும் தந்திரத்தைச் சிங்கள அரசு மேற்கொள்கிறது. இது ஈழத்தமிழரையும் இந்தியாவையும் ஒரே நேரத்தில் தோற்கடிக்கும் சிங்கள அரசின் இராஜதந்திர நகர்வாகும்.

உள்நாட்டு மட்டத்தில் தீர்வுகாண எடுக்கப்பட்ட முயற்சிகளை சிங்களத் தலைவர்கள் ஏமாற்றித் தோற்கடித்தார்கள். இந்திய உதவியுடன் தீர்வுகாண எடுத்த முயற்சிகளையும் சிங்களத் தலைவர்கள் ஏமாற்றித் தோற்கடித்தார்கள், சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் அவர்கள் ஏமாற்றித் தோற்கடித்ததார்கள். அதாவது இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் எந்தவொரு சிங்களத் தலைவனும் தேசிய நல்லிணக்க நோக்குடனும், நேர்மையுடனும் விசுவாசத்துடனும் செயற்படவில்லை.

தீர்வு காண்பதற்குப் பதிலாகத் தமிழ்மக்களைக் கொன்று குவிப்பதில்தான் அக்கறையாக இருந்தார்கள் என்பதை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை முழு அளவில் நிரூபித்துள்ளது. இனப்படுகொலை செய்வதில் அவர்கள் காட்டிய திடசித்தத்தையும் வள விரயங்களையும் ஒருபோதும் நீதியான தீர்வு காண்பதில் அவர்கள் காட்டியதில்லை. ஐநா நிபுணர்குழு அறிக்கையின்படி ஒருபுறம் படுகொலைக்கான விசாரணையும் மறுபுறம் தீர்வுக்காண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. அதற்குக் கீழ் இப்பிரச்சினையை திசைதிருப்பினால் படுகொலை ஆளர்கள் தப்பிப் பிழைக்க கால இடைவெளியைப் பெற்று தமது ஏமாற்று நாடகத்தின் அடுத்த கட்டத்துக்குப் போய்விடுவார்கள்.

விட்டுக்கொடுப்பின்றிச் சிங்கள அரசுடன் கடுமையாக நடக்கும் ஒரு போக்கு மட்டுமே வரலாற்றில் வெற்றி பெற முடியும். சிங்கள அரசு தனது 2500 ஆண்டுகால இராஜதந்திர வரலாற்றில் அடைந்துள்ள மிகப்பெரும் இராஜதந்திரத் தோல்வியாக ஐ.நா நிபுணர்குழு அறிக்கை வெளிவந்தமை அமைந்துள்ளது. இவ்வறிக்கை மிகவும் உறுதியான நிலைப்பாட்டுடன் வெளிவந்ததால் சிங்கள அரசு அதனைத் தடுக்க முடியாத இராஜதந்திரத் தோல்விக்கு உள்ளானது. இதிலிருந்து இராஜதந்திரப் பாடத்தைக் கற்கத் தவறினால் சிங்கள அரசிடம் எந்தப் பெரிய அரசும் இராஜதந்திரத் தோல்வியடையும் வரலாறு நீடிக்கும்.

http://ponguthamil.com/aayirampookal/aayirampookalcontent.asp?sectionid=10&contentid={C53C9D7D-7FBD-4E46-97ED-1901885B296D}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.