Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட தர்மன் சண்முகரட்ணம் சிங்கப்பூரின் பிரதிப் பிரதமர்

Featured Replies

சிங்கப்பூன் நிதியமைச்சராக விளங்கிய தர்மன் சண்முகரட்ணம் சிங்கப்பூன் பிரதி பிரதமராக கடந்த புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். புதிய அமைச்சரவையின் நியமனங்களின்போதே அவருக்கு பிரதி பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு தொடக்கம் நிதியமைச்சராக சண்முகரட்ணம் சேவையாற்றியுள்ளார். சிங்கப்பூல் சிரேஷ்ட அரசியல்வாதியான தர்மன் சண்முகரட்ணம் சர்தேச நாணய நிதியம், சர்வதேச நாணய மற்றும் நிதிக்குழு என்பவற்றின் பணிப்பாளராகவும் இருந்து வருகின் றார். இந்தக் குழுவே நிதிக் கொள்கையில் பிரதான பங்களிப்பை வழங்குவது குறிப்பிடத்தக்கது.

1957 ஆம் ஆண்டு பிறந்த இவர் இலங்கை பூர்வீகத்தைக்கொண்டவர். அவரது பாட்டனார் யாழ்ப்பாணம் ஊரெழுவை சேர்ந்தவர். இவர் இலங்கையில் ஏற்பட்ட சுனாமித் தாக்கத்தின் பின்னர் 2005 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அப்போது சிங்கப்பூரின் கல்வி அமைச்சராக விளங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.

பொருளியல் பட்டதாரியான தர்மன் சண்முகரட்ணம் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் முதுமாணி பட்டத்தை பெற்றவராவார். அத்துடன் ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்துறையில் முதுமாணிப் பட்டம் பெற்றவர். தர்மன் சண்முகரட்ணத்தின் தந்தையான கே. சண்கரட்ணம் மருத்துவ பேராசியராவார்.

சிங்கப்பூல் கடந்த ஏழாம் திகதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆளும் மக்கள் செயல் கட்சி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. சிங்கப்பூரின் முதல் பிரதமரும் அந்நாட்டின் தந்தை என அழைக்கப்படுபவருமான லீ. குவான் யூ அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்து அமைச்சரவையில் இருந்து விலகினார்.

இதே போன்று மற்றுமொரு முன்னாள் பிரதமரான கோ சோக் தாங்குங் அமைச்சரவையிலிருந்து விலகினார். இதனையடுத்து 14 பேர் கொண்ட புதிய அமைச்சரவையை பிரதமர் லீ ஹீசின் லூங்ன் உருவாக்கினார். இவர் முன்னாள் பிரதமர் குவான் யூவின் மகனாவார்.

புதிய அமைச்சரவையில் இடம்பெற் றுள்ள 14 பேல் ஏழு பேர் புதிய முகங்கள்.தமிழ் வம்சாவளியை சேர்ந்த சட்டத்தரணி கே. சண்முகம் சட்டத்துறை அமைச்சராக இருந்தவர். இவருக்கு தற்போது மேலதிகமாக வெளியுறவுத்துறை அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று விவ்யன் பாலகிருஷ்ணன் சூழல் நீர்வளத்துறை அமைச்சராகவும் எஸ். ஈஸ்வரன் உள்துறை கைத்தொழில் பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை பிரதி பிரதமராகவும் சிரேஷ்ட அமைச்சராகவும் கடந்த அமைச்சரவையில் பதவி வகித்த எஸ். ஜெயக்குமார் அரசியலிலிருந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

http://akkinikkunchu.com/new/

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு தமிழர் இருந்து, எங்களுக்கு என்ன பிரயோசனம்?

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் இமய மலையில கருவாடு சுட்டவன் தமிழன் என்று சொல்லக் கொண்டிருக்க வேண்டியது தான்!

எங்களுக்கு இழைக்கப் பட்ட போர்க்குற்றங்களை, ஐக்கிய நாடுகள் சபைக்குத் தூக்கிக் கொண்டு போக, ஒரு நாடு என்ற வாகனம் வேண்டுமாம்!

ஒரு வாகனம் கூடக் கிடைக்காமல் நாடியில கையை வச்சுக் கொண்டு இருக்க வேண்டியது தான்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.