Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Home » தமிழீழம், முதன்மைச்செய்திகள் » முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு எச்சரிக்கை

முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு எச்சரிக்கை

Saturday, May 21, 2011, 17:59தமிழீழம், முதன்மைச்செய்திகள்55 viewsAdd a comment

இறுதி யுத்தத்தின்போது 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் உயிரிழந்தவர்களுக்காக வவுனியா நகரசபை மண்டபத்தில் 18 ஆம் திகதி நடத்தப்பட்ட அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மாணவர்கள் தொடர்பாக மறுநாள் 19 ஆம் திகதி வளாகத்திற்குச் சென்ற, புலனாய்வு பிரிவினர் என தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டவர்கள் விசாரரணை நடத்தியதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமக்கு பல்கலைக்கழக சமூகம் தனக்கு முறையிட்டிருப்பதாகத் தெரிவித்த அவர், இத்தகைய விசாரணைகளின் பின்னர் மாணவர்கள் பயன்டுத்துகின்ற மண்டபத்தைப் பூட்டி அதன் திறப்பையும் வந்தவர்கள் எடுத்துச் சென்றுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து மாலை 6 மணிமுதல் காலை 7 மணிவரையிலும் மற்றும் விடுமுறை தினங்களிலும் மாணவர்கள் வளாகத்திற்குள் பிரவேசிக்கக் கூடாது என உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வவுனியா வளாக முதல்வர் மாணவர்களுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் கூறினார்.

மாணவர்கள் மத்தியில் தலைமைப் பண்பினை வளர்ப்பதற்கு இராணுவ முகாமில் பயிற்சி அளிக்கப்படும் என்று கூறுபவர்கள் ஜனநாயக முறைப்படி ஒரு அஞ்சலிக் கூட்டத்தில் கலந்துகொள்வதைக்கூட சகிக்க முடியாதவர்களாக இருக்கின்றனரே என்று மாணவ சமூகம் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளது.

இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கருத்துத் தெரிவிக்கையில், மே 19ஆம் திகதியிலிருந்து ஜூன் 19வரையிலான ஒரு மாத காலத்தை அரசாங்கம் படைவீரர் மாதமாகக் கொண்டாடுகின்றது. ஆனால் தமிழ் மக்கள் இறுதி யுத்தத்தில் சிக்கி உயிரிழந்த தமது உறவினர்களை நினைவுகூர்ந்து மே18ஆம் திகதி ஒருநாளை மட்டும் துக்க நாளாக அனுஷ்டிக்கின்றனர். அவ்வாறு இறந்தவர்களுக்கான துக்கத்தைக்கூட வெளிப்படுத்துகின்ற உரிமைகள் பொதுமக்களுக்கு மறுக்கப்படுமாயின் இந்த நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என்பது மிகுந்த சிரமமான காரியமாகிவிடும். அத்துடன் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக அரசாங்கம் கூறுவதிலும் எந்தவிதமான அர்த்தமும் இல்லாது போய்விடும் என கூறியுள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் திருமறற்கலாமன்ற மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற அஞ்சலி பிரார்த்தனை நிகழ்வு முடிந்து அதில் பங்குபற்றியிருந்தோர் மண்டபத்தைவிட்டு வெளியேறிய சமயம் அங்கு வந்து குவிந்த இராணுவத்தினர் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் மண்டபத்தின் உள்ளே திரும்பிச் செல்லுமாறு பலாத்காரமாப் பணித்தார்கள். தமது பெரியதுரை வந்ததன் பின்னர்தான் வெளியில் செல்ல முடியும் என அவர்கள் எச்சரிக்கை செய்திருந்தனர்.

மண்டபத்தைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்த அனைவரும் மீண்டும் மண்டபத்தின் உள்ளே சென்றபோதிலும் இராணுவத்தினரால் குறிப்பிடப்பட்ட பெரியதுரை வரவில்லை.

இதற்கிடையில் அங்கு வந்த உயர் இராணுவ அதிகாரிகள் சிலரிடம் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் என்ன விடயம் என கேட்டபோதிலும் அதற்கு அவர்கள் உரிய மறுமொழி எதனையும் தெரிவிக்காமல் விலகிச் சென்றதாகவும், அதன் பின்னர் மண்டபத்தினுள்ளே சென்ற பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து தமது வீடுகளுக்குச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சமயப் பிரார்த்தனைகள் இடம்பெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.கஜேந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், கு.சிறில் மற்றம் பேராசிரியர் கே.சிற்றம்பலம் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

source tamiltai.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்போ நாட்டிலை இருக்கிறது மாதிரி இங்கையும்(வெளிநாடுகள்) முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளை குழப்பியுள்ளார்கள்.நாடுகடந்த அரசு, மற்றும் வேறு அமைப்புக்கள் ஒழுங்கு செய்த நினைவு நிகழ்வுகளுக்கு போகவேண்டாம் என்று மக்களை வெருட்டியுள்ளார்கள்.என்னிடம் சில ஆதாரங்கள் உள்ளது.அவர்கள் சொன்ன விடயம் இந்த நிகழ்வுகளை நடாத்துபவர்கள் இலங்கை அரசாங்கத்தின் ஆட்கள் என்றும் இவர்களை நம்பிப்போனால் உங்களைக் காட்டிக்கொடுத்து விடுவார்கள் என்றும் கூறியுக்களர்.தமிழாலய நிர்வாகி,பிரதிநிதிகள் ஆகியோர் இப்படியான வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.அப்போ இவர்கள் யார்? இலங்கை அரசாங்கம் செய்வதுபோல் செய்தால் நாங்கள் எப்படி எடுப்பது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.