Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரில் பொதுமக்களை பாதுகாக்க ஐ.நா தவறியமையை நிபுணர்குழு சுட்டிக்காட்டவில்லை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போரில் பொதுமக்களை பாதுகாக்க ஐ.நா தவறியமையை நிபுணர்குழு சுட்டிக்காட்டவில்லை!

சனி, 21 மே 2011 18:40

ஐ.நா. அறிக்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பொதுமக்களை பாதுகாக்க ஐ.நா தவறிவிட்டது என்று ஐ.நா அறிக்கையில் குறிப்பிடத் தவறிவிட்டது என்று ரெட்ரெஸ் என்ற மனித உரிமை அமைப்பின் செயற்பாட்டாளரும், ஆபிரிக்க கற்கைகளுக்கான கல்லூரியின் சட்டவியல் விரிவுரையாளருமான Lutz Oette தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை பாதுகாப்பதில் அனைத்துலக சமூகத்தின் பங்களிப்புக்கள் தொடர்பான நிபுணர் குழுவின் ஆய்வுகளும் மிகவும் குறைவாகவே உள்ளது என ஓபன் டெமோக்கிரசி என்ற இணையத்தளத்தில் எழுதியுள்ள பத்தியில் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா நிபுணர்குழு வெளியிட்டுள்ள அறிக்கையானது ஒரு நாட்டை தொடர் வன்முறையில் இருந்து விடுவிப்பதற்கான சிறந்த வழிமுறையின் ஆரம்பமாகும்.

நிபுணர்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதே தற்போது ஐ.நாவிற்கு முன்னுள்ள மிகப்பெரிய சவாலாகும். 2008, 2009 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற போரில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான நிபுணர்குழுவின் அறிக்கை கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் இனப்பாகுபாடு, அடக்குமுறைகள், நீதிக்குப்புறம்பான செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் நீதித்துறையில் உள்ள குறைபாடுகளே பல வருடங்களாக நிகழ்ந்த வன்முறைகளுக்கு காரணமாகும்.

விடுதலைப்புலிகளுக்கு எதிராக மட்டும் அரசு போரை நடத்தியது என்பதையும் ஐ.நா அறிக்கை நிராகரித்துள்ளது. எனினும் அறிக்கையில் ஒரு விடயம் தவறவிடப்பட்டுள்ளது.

அதாவது பொதுமக்களை பாதுகாக்க ஐ.நா தவறிவிட்டது என்பதே அதுவாகும். அனைத்துலக சமூகத்தின் பங்களிப்புக்கள் தொடர்பான நிபுணர் குழுவின் ஆய்வுகளும் மிகவும் குறைவாகவே உள்ளது.

பல வருடங்களாக அனைத்துலக சமூகத்தின் பாரமுகத்தைக் கொண்ட நாடாக இலங்கையில் இடம்பெற்ற பிரச்சனைகள் இருந்துள்ளன.

இதன்காரணமாகத்தான் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், வன்முறைகளும் அங்கு இடம்பெற்றுள்ளன. இலங்கையில் இடம்பெற்ற அடிப்படைப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஐ.நா பாதுகாப்புச் சபையோ அல்லது வேறு எந்த அமைப்புக்களோ முற்படவில்லை.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா ஒரு காத்திரமான பங்கை வகிக்கும் நிலையை நிபுணர் குழுவின் அறிக்கை ஏற்படுத்தியுள்ளது.

முன்னைய தவறுகளுக்கு பரிகாரம் தேடும் சந்தர்ப்பத்தையும் அது ஐ.நாவுக்கு வழங்கியுள்ளது. வன்முறைகள் மற்றும் அது தொடர்பான விசாரணைகள் தொடர்பில் செயலாளர் நாயகம் செயற்படமுடியாது விட்டால் அது ஐ.நாவின் செயற்பாடு தொடர்பில் சந்தேகத்தை தோற்றுவிக்கும்.

இலங்கை அரசின் விசாரணைகள் காத்திரமானவை அல்ல எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் 2009 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட தீர்மானம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அதனை மீண்டும் முன்வைக்க அது விரும்பாது, பாதுகாப்புச் சபையின் நடவடிக்கையும் சாத்தியமற்றது.

இலங்கைக்கு ஆதரவான நாடுகள் அதனை எதிர்க்கலாம். எனவே போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி மறுக்கப்படுவதாகவே இதனை கொள்ளமுடியும்.

ஐ.நாவின் காத்திருப்புக்கள் அரசின் நிராகரிப்பை நேரடியற்ற விதமாக ஏற்றுக்கொள்வதாகும்.

போருக்கு பின்னர் புறக்கணிக்கப்பட்ட நீதியை நிலைநாட்டுவதற்கு அறிக்கை சந்தர்ப்பம் வழங்கியுள்ளது. சிறீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பிலும் நிபுணர் குழு விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

இறுதிக்கட்ட போரில் கொல்லப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாது, இலங்கையில் பல தசாப்தங்களாக இடம்பெற்ற வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source:tamilenn

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.