Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

UN நிபுணர்குழுவின் போர்க்குற்ற ஆலோசனை அறிக்கை குறித்த ஜனாதிபதியின் கூற்றை நகைப்பிற்கு உள்ளாக்கியுள்ளது:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

UN நிபுணர்குழுவின் போர்க்குற்ற ஆலோசனை அறிக்கை குறித்த ஜனாதிபதியின் கூற்றை நகைப்பிற்கு உள்ளாக்கியுள்ளது: மஹிந்த ராஜபக்ஷவுக்கு இரா சம்பந்தன் கடிதம்.

[sunday, 2011-05-22 04:29:26]

ஐநா நிபுணர்குழுவின் போர்க்குற்ற ஆலோசனை அறிக்கை போரின் பின்னர் சிங்கள தமிழ் மக்களிடையே உருவாகி வந்த நல்லெண்ணத்தை சிதைத்து விட்டது என்றும், மே 18இன் பின் சிங்கள மக்களிடையே தணிந்து வந்த இனவாத உணர்வை இந்த அறிக்கை அதிகரிக்க வைத்துள்ளது என்றும் சொல்லப்படும் கூற்றை நகைப்பிற்கிடமாக்கியுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விடயங்கள்.

திருகோணமலை மாவட்டம் மூதூர் கங்குவெளியிலுள்ள பிரதேசத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கnதிராக இனவாதம் எப்படித் தொழிற்படுகிறது என்பதை இக்கடிதம் துலாம்பரமாக எடுத்தியம்புகிறது.

அக்கடிதம் பின்வரும் மூன்று விடயங்களை மையப்படுத்தி உள்ளது.

1. திருகோணமலை மாவட்டம், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் கங்குவெளி கிராமத்திலுள்ள அகஸ்தியர் ஸ்தாபனத்தில் அமைந்துள்ள பழமைமிகு சிவபெருமான் (சிவன்) சின்னங்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அழிவும் அவதூறும்.

2. திருகோணமலை மாவட்டம், மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் பட்டுக்காடு கங்குவெளியில் உள்ள தமிழ், முஸ்லிம் விவசாயிகளுக்குச் சொந்தமானவையும் அவர்கள் உழுது பயிரிட்டவையுமான நெற்காணிகளும் அத்துமீறிப் பிரவேசித்தலும் பலவந்தமாக பயிர் செய்தலும்.

3. திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் கங்குவெளி குளப்படுக்கையில் அத்துமீறிப் பிரவேசித்தலும் பலவந்தமாகப் பயிர் செய்தலும்.

2009 டிசெம்பர் 2 ஆம்திகதி நீங்கள் என்னுடன் நடத்திய சந்திப்பின்போது, மேலே குறிப்பிட்ட முதலாவது விடயத்தை நான் உங்களுடைய கவனத்துக்குக் கொண்டு வந்தேன். இவ்விடயத்தை திருகோணமலை அரசாங்க அதிபரின் ஃ மாவட்டச் செயலாளரின் கவனத்துக்குக் கொண்டு வருமாறு நீங்கள் உங்களுடைய செயலாளருக்கு உடனடியாக உத்தரவிட்டீர்கள். உங்களுடைய செயலாளரும் அவ்வாறே செய்தார்.

பின்னர், இது தொடர்பாக விசாரணையொன்று மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபர் ஃ மாவட்டச் செயலாளர் மூதூர் பிரதேச செயலாளருக்குப் பணிப்புரை விடுத்திருந்தாரென்றும் அது தொடர்பான அறிக்கையொன்று தங்களுக்கு அனுப்பி வைக்கப்படுமென்றும் எனக்குத் தகவல் கிடைத்தது.

அதற்கு மேல் இந்த விடயம் தொடர்பாக எனக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. எனக்குத் தெரிந்தவரையில் இவ்வழிவுகளுக்கும் அவதூறுக்கும் யார் பொறுப்பு என்பது பற்றி உறுதியாக நிறுவப்படவுமில்லை.

அங்கு இருக்கக் கூடியவற்றை மீட்பதற்கோ அல்லது புனித தலத்தை மேலும் அழிவுகளிலிருந்து பாதுகாப்பதற்கோ எவ்வித நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவுமில்லை. எனவேதான் நான் உங்களுக்கு இதனை எழுத வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இந்தப் பொது மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இப்பழைமைமிக்க இந்து மத வழிபாட்டுத் தலம் பற்றிய சுருக்கமானதொரு வரலாற் றினை எடுத்துக் கூறி இதனை ஆரம்பிக்கிறேன்.

அகஸ்தியர் ஸ்தாபித்த லிங்கம்

பழமை வாய்ந்த இச்சிவாலயம் சிவன் கோவில் 'அகஸ்தியர்'' எனும் பெயர் கொண்ட இந்துமத முனிவர் ஒருவரால் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் கங்குவெளி கிராமத்துக்கு சற்றுத் தொலைவில் மகாவலிகங்கையின் கரையில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

எனவே இவ்வாலயம் 'அகஸ்தியர் ஸ்தாபனம்'' என அழைக்கப்பட்டது. இப்புனிதப் பணியை நிறைவேற்று மாறு சிவபெருமான் இவ் இந்து முனிவர் அகஸ்தியருக்குக் கட்டளையிட்டருளினார் என்பதும், அப்பணியை நிறைவேற்றிய அம் முனிவர் அங்கேயே பலகாலம் தங்கி வழிபட்டு பின்னர் இவ்விடத்திலேயே இயற்கை எய்தினார் என்பதும் வரலாற்று ரீதியான நம்பிக்கையாகும்.

இந்துக்கள் பல நூற்றாண்டுகளாக இவ்வாலயத்தில் தொடர்ந்து வழிபாடு செய்து வருகின்றனர். தந்தைமாரை நினைவு கூர்ந்து செய்யப்படும் 'ஆடி அமாவாசை" போன்ற ஒரு சில மதக் கிரியைகள் இங்கு நிறைவேற்றப்படுவதுண்டு. மிகஅண்மைக் காலத்தில் கங்குவெளி கிராமத்தில் புதிய சிவாலயமொன்று கட்டப்பட்டது. மக்கள் இங்கு மிகவும் கிரமமாக வழிபாடுகளில் ஈடுபட்டனர். நூற்றாண்டுகள் கடந்து செல்ல, புராதன சிவாலயம் சிதைவடைந்த ஒரு நிலைக்குள்ளாகியது. எனினும்'சிவலிங்கம்" முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது. அகஸ்தியர் இத்தலத்தில் எழுந்தருளியிருந்தார். ஏனைய சின்னங்களும் அங்கு இருந்தன. இங்குப் பொது மக்களும் இவ்வாலயத்தை வழிபட்டு தமது மதக்கிரியைகளை நிறைவேவற்றி வந்தனர். பொதுமக்களுக்கு இத்திருத்தலம் பெரிதும் வணக்கத்துக்குரிய திருத்தலமாகவே விளங்கியது. யுத்த நிறுத்த காலத்தின்போது இந்து பொது மக்கள் இவ்வாலயத்தைப் புனரமைப்பதற்கு மிகவும் ஆவலோடு இருந்தனர்.

குன்றக்குடி அடிகளார் சிவலிங்கத்தை வணங்குவது.

உண்மையில் அங்கு புதிய மண்டபமொன்றின் நிர்மாணத்திற்கான அடிக்கல்லை நான் நாட்டி வைத்தேன்.

2009 நவம்பர் 29 ஆம் திகதி சில பக்தர்கள் அப்புராதன ஆலயத்திற்குச் சென்றபோது அங்கிருந்த சிவலிங்கம் ஏனைய சின்னங்களும் சேதமாக்கப்பட்டு அங்கிருந்து அகற்றப்பட்டிருந்தன. இது எனது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அதன் விளைவாகவே 2009 டிசெம்பர் 2 ஆம் திகதி இவ்விடயத்தை நான் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தேன்.

(அகஸ்தியர் ஸ்தாபனத்திலிருந்து கொண்டு வரப்பட்டு கங்குவேலி சிவன் கோவிலில் வைக்கப்பட்டிருக்கும் கல்வெட்டு. )

இவ்விடயத்தில் பழைமை மிக்க இந்துக் கோவிலொன்று இருந்ததற்கான தடயங்களை அழித்தொழிக்கும் வஞ்சக நோக்கத்தோடு வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒரு மத அவதூற்றுச் செயல் இது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். தற்போது பொது மக்கள் இவ்விடத்திற்குச் செல்வதை இலங்கைக் கடற்படை தடுக்கின்றதென நான் அறிகிறேன்.

இப்பகுதியில் வேறு சில சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இப்பழமைமிக்க ஆலயத்திலிருந்த சின்னங்கள் அழிக்கப்பட்டமையுடன் சேர்ந்து இச் சம்பவங்கள் அச்சம் ஏற்படுத்துவனவாய் அமைகின்றன.

1) இதுவரை காலம் கங்குவெளி, புள்ளையடிச்சோலை, மல்லிகைத்தீவு, பட்டித்திடல், மென்காமம், பாரதிபுரம், கி ளி வெட்டி, மணல் சேனை, பெயர் வெளி ஆகிய கிராமங்களின் தமிழ் விவசாயிகளுக்கும் மூதூர் முஸ்லிம் விவசாயிகளுக்கும் சொந்தமாகவிருந்தவையும் அவர்கள் உழுது பயிட்டவையுமான பட்டுக்காடு கங்குவெளியிலுள்ள 800 ஏக்கருக்கு மேற்பட்ட காணியும் அகஸ்தியர் ஸ்தாபனம் சிவாலயத்திற்குச் சொந்தமான 20 ஏக்கர் காணியும் அருகிலுள்ள தெஹிவத்தை என்னும் கிராமத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்து இளைஞர்கள் சிலரால் பலவந்தமாகக் கைப்பற்றப்பட்டு பயிர் செய்கை பண்ணப்படுகிறது. இக்காணிக்குள் பிரவேசிக்கக் கூடாதென தமிழர்களும் முஸ்லிம்களும் இவ்வத்துமீறல்காரர்களால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

2) கங்குவெளி குளம் 300 ஏக்கர் வயல் நிலத்துக்கு நீர்ப்பாசனம் வழங்குகிறது.

தெஹிவத்தையைச் சேர்ந்த பெரும்பான்மையினத்து இளைஞர்கள் சிலர் குளத்திலிருந்த நீரையெல்லாம் வெளியேற்றிவிட்டு குளப்படுக்கையில் பலவந்தமாகப்பயிர் செய்கின்னர். கங்குவெளி கிராமத்திலுள்ள கால்நடைகள் கூட இக்குளத்திலுள்ள நீரையே நம்பி வாழ்கின்றன. குளம் துஷ்பிரயோகம் பண்ணப்படுவதால் அவையும் மோசமாகப் பாதிக்கப்படுகின்றன. தமது விவசாயத்திற்கு இக்குளத்தையே நம்பியிருக்கும் விவசாயி கள் தமது நிலத்தில் பயிர் செய்ய முடியாதுள்ளனர். பெரும்பான்மை இனத்து சில ஆட்களினால் செய்யப்படும் இவ்வன்முறைச் செயல்கள் இப்பகுதியில் நிரந்தரமாக வாழ்ந்த மக்களை பீதி கொள்ளச் செய்துள்ளதோடு அவர்கள் தமது பண்டைய கிராமங்களில் பாதுகாப்பாக வாழ முடியுமோ என ஐயம் கொள்ளவும் வைத்துள்ளது.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறிமுறை ஸ்தம்பிதமடைந்த ஒரு நிலையில் இருப்பதாகத் தோன்றுகிறது. இது இப்பகுதியில் சுதந்திரமானதும் பக்கச் சார்பற்றதுமான சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொறி முறைக்கான தேவையை வலியுறுத்துகின்றது.

கங்குவெளி குளம் சிதைவுற்ற நிலையில் உள்ளது. இக்குளம் புனரமைக்கப்பட்டு அதன் முழு கொள்ளளவு நீரைத் தாங்கி நிற்குமாயின் குளப்படுக்கையில் பயிர் செய்வது சாத்தியமாகாது.

இப்பகுதியில் வரலாற்றுக் காலந்தொட்டு வாழ்ந்துவரும் மக்களின் வாழ்க்கையை மிகவும் சிரமமானதாக்குவதற்கும் இப்பகுதியில் அவர்கள் வரலாற்றுப்பூர்வமாக வாழ்ந்து வருவதற்கான சான்றுகளை அழித்தொழிப்பதற்கும் கூட வேண்டுமென்றே முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை மேலே நான் விபரித்த சம்பவங்கள் காட்டுகின்றன.

இந் நடவடிக்கைகள் அனைத்தும் அதிகாரம் அத்துடன் அல்லது செல்வாக்குக் கொண்ட ஆட்களினால் மேற்கொள்ளப்படும் ஓர் ஒருங்கிணைந்த திட்டத்தின் அடிப்படையிலானவை என்னும் முடிவுக்கு வருவதைத் தடுப்பது சிரமமானதாகும்.

1) அகஸ்தியர் ஸ்தாபன சிவாலயத்தை அழித்தமை மற்றும் அவதூறுபடுத்தியமைக்குப் பொறுப்பானவர்கள் இனங்காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமென்றும்.

2) இப்புராதன வழிபாட்டுத் தலம் புனரமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும்,

3) தமிழ், முஸ்லிம் விவசாயிகளின் பரந்த வயல் நிலங்களில் அத்துமீறி பிரவேசித்துள்ள அனைவரும் அக்காணிகளிலிருந்து அகற்றப்படுவதோடு இவ்வத்துமீறல்காரர்கள் மீண்டும் இக்காணிகளுக்குள் நுழைவ தைத் தடுக்கப் போதுமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும்,

4) கங்குவெளி குளம் அதன் சட்டபூர்வமான பாவனைக்கு ஈடுபடுத்தப்படக் கூடியதாக, அங்கு அத்துமீறி பிரவேசித்து அக்குளப்படுக்கையில் பயிர் செய்பவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென்றும்,

5) கங்குவெளி குளம் அதன் முழுக் கொள்ளளவு நீரையும் தக்கவைத்து அதன் மூலம் அது துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுக்கக் கூடியவாறு அக்குளம் புனரமைக்கப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்வதற்காக உங்களுக்கு இதனை எழுதுகிறேன். நீங்கள் தெரிந்து கொள்வதற்காக இவ்வாலயத்திலிருந்த சிவலிங்கத்தின் மூன்று புகைப்படங்களை இத்துடன் இணைத்தனுப்புகிறேன். அவற்றுள் ஒன்று ஒரு புகழ்பெற்ற தென்னிந்திய இந்து மதக் குருவாகிய 'குன்றக்குடி அடிகளார்'' இவ்வாலயத்தில் எழுந்தருளிய சிவலிங்கத்தை வழிபடும் காட்சியைப் பிரதிபலிக்கின்றது.

இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை பற்றிய பதிலொன்று கிடைக்குமாயின் நன்றியுடையவனாவேன்.

source: seithy.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.