Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பிக்காவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க மகிந்தா திட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சம்பிக்காவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க மகிந்தா திட்டம்

Posted by சங்கீதா on 24/05/2011 in செய்தி | 0 Comment

சிறீலங்காவின் மின்வலு எரிசக்தி அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்கவை அரசியலில் ஓரம்கட்ட சிறீலங்கா ஜனாதிபதி மகிந்தா ராஜபக்சா முனைப்பு காட்டி வருவதாக எடுத்துள்ளதாக அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். அமைச்சருக்கும் மின்சார சபையின் பொறியியலாளர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பனிப்போரைப் பயன்படுத்தி மகிந்தா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலையை மொட்டையடித்து, வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சமய வழிபாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.

இதனால், சம்பிக்க ரணவக்க இலங்கையின் பௌத்த தலைவராக முயற்சிப்பதாகவும் இதனைத் தடுப்பதற்கே மகிந்த முயற்சிப்பதாகவும் தகவல் தந்த குறித்த அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், இந்தியாவின் அழுத்தங்களுடன் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான அதிகாரத்தைப் பரவலாக்கினால் அதற்கெதிராக சம்பிக்க ரணவக்க குரல் கொடுப்பார் என்ற நிலை இருப்பதால் அதற்கு முன்னர் மகிந்த அரசியல் ரீதியான மாற்றங்கள் ஏற்படுத்தத் தீர்மானித்துள்ளதாக அந்த அமைச்சர் மேலும் கூறினார்.

சர்வதேச ரீதியாகவும், இந்தியாவிடமும் இருந்து ஏற்பட்டுள்ள அழுத்தங்களினால் வடக்கு கிழக்கிற்கான அதிகாரப்பரவலாக்கலை அதாவது 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாக இலங்கை அரசாங்கத் தரப்பின் சார்பில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியாவிடம் உறுதியளித்திருந்தார். எனினும், இந்த அறிவிப்பிற்கு ஜாதிக்க ஹெல உறுமயவிடமிருந்து உள்ளக ரீதியாக பாரிய எதிர்ப்புக்கள் கிளம்ப ஆரம்பித்துள்ளன.

இந்த நிலைமையை சமாளிப்பதற்காகவே அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க மகிந்த சில அரசியல் தந்திரங்களை செய்துவருவதாகவும் குறித்த அமைச்சர் தெரிவித்தார்.

source:eelam press.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.