Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்றுக்கருத்துடையோரை உள்ளோரை அடக்க அவசரகால சட்டத்தை அரசு பாவிக்கிறது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றுக்கருத்துடையோரை உள்ளோரை அடக்க அவசரகால சட்டத்தை அரசு பாவிக்கிறது!

Published on May 24, 2011-7:45 pm · No Comments

விடுதலைப் புலிகளை வெற்றிகொள்ளவதற்காக அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டத்தை நீக்கி இலங்கையில் சகல இன மக்களும் இயல்பு வாழ்க்கை மேற்கொள்ளவதற்கு அரசாங்கம் வழி செய்யவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் அதுவரை அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச்சட்டத்தை நீக்கியது. இருந்தும், அதன்பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கம் தொடர்ந்து அவசரகாலச்சட்டத்தை அமுல்படுத்தி வருகிறது. விடுதலைப் புலிகளுடனான யுத்த வெற்றிக்குப் பின்னரும் அவசரகால சட்டத்தை நீடிப்பது ஏன் என அவர் அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

யுத்தம் முடிந்த பின்னர் அவசரகால சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் ஆகியவற்றையாவது நீக்கி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வழி ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் தொடர்ந்து இச்சட்டங்களை அமுல்படுத்தி வருவதால் சர்வதேச ரீதியாக எதிர்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசு மாற்றுக் கருத்துக்களைக் கொண்டிருப்போரை அடக்குவதற்கு இன்றும் அவசரகாலச்சட்டத்தைப் பாவிக்கின்றது என கரு ஜயசூரிய குற்றம் சாட்டியுள்ளார்.

000

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை – சீன சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்கள் பேச்சு -

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக சீன மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

சீனாவின் பெய்ஜி;ங் நகரில் சீன வெளிவிவகார அமைச்சர் யாங் ஜெய்ச்சீக்கும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கும் இடையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இலங்கை அரசாங்கமும், நாட்டு மக்களும் உள்விவகார பிரச்சினைக்கு காத்திரமான முறையில் தீர்வு காண்பார்கள் என்ற பூரண நம்பிக்கை இருப்பதாக சீன வெளிவிவகார அமைச்சர் யாங் ஜெய்ச்சீ தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு சீனா பூரண ஒத்துழைப்பை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாத இல்லாதொழிப்பு தொடர்பில் இலங்கை காட்டிய ஆர்வம் பாராட்டுக்குரியது என அவர் தெரிவித்துள்ளார்.

source:thinakkathir.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.