Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். மாநகர சபை எல்லைக்குள் விளம்பரப் பதாகைகளுக்கு அனுமதி வழங்கியதில் பெரும் மோசடி –

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாநகர சபை எல்லைக்குள் விளம்பரப் பதாகைகளுக்கு அனுமதி வழங்கியதில் பெரும் மோசடி –

25 மே 2011

அதிகாரிகளை இடம்மாற்ற முதல்வர் பிரயத்தனம்?

யாழ். மாநகர சபை எல்லைக்குள் விளம்பரப் பதாகைகளுக்கு அனுமதி வழங்கியதில் பெரும் மோசடி இடம்பெற்றுள்ளது. இதனால் 2010 ஆம் ஆண்டில் மாநகர சபைக்கு 50 லட்சத்து 09 ஆயிரத்து 833 ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த ஊழல் தொடர்பாக உயர் மட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த மோசடி தொடர்பாக யாழ்.மாநகர முதல்வருக்கும் ஆணையாளருக்கும் விளக்கம் கேட்டு 13.10.2010 ஆம் திகதி கணக்காய்வாளர் திணைக் களத்தால் அனுப்பப்பட்ட கடிதத்துக்கு இன்று வரை மாநகரசபையிடம் இருந்து எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை என கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் யாழ்.கிளையின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளர்.

கணக்காய்வாளர் திணைக்களத்தின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கமுடியாமல் தடுமாறும் மாநகர முதல்வர், தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி மோசடியைக் கண்டு பிடித்து வெளிப்படுத்திய அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

மாநகர சபை எல்லைக்குள் நல்லூர் கோயில் பின் பக்கவீதியில் 14 விளம்பரப் பதாகைகள் காட்சிப் படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றுள் 5 இற்கு மட்டுமே மாநகரசபைக்கு கட்டணமாக 27லட்சத்து 83 ஆயிரத்து233 ரூபா அறவிடப்பட்டுள்ளது.

ஒன்பது பதாகைகள் எந்த விதமான கட்டணமோ அனு மதியோ இன்றிக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மாநகர சபைக்கு வரவேண்டிய 50 லட்சத்து 09 ஆயிரத்து 833 ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது. மாநகர சபையின் அங்கீகாரம் இன்றி விளம்பரப் பதாகைகளுக் கான கட்டணம் இரண்டு மடங்காக அறவிடப்பட்டுள்ளதுடன் நில வாடகை சதுர அடி ஒன்றுக்கு 200 ரூபாவும் அறவிடப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டில் ஒரு சதுர அடிக்கு 25 ரூபா மட்டுமே அறவிடப்பட்டுள்ளது. கட்டண அதிகரிப்புத் தொடர்பாக பகிரங்க அறிவிப்போ அன்றி அரச வர்த்தமானி அறிவித்தலோ விடப்படவில்லை.

வழமையாக விளம்பரப் பதாகைகளுக்கான விண்ணப்பப் படிவத்துடன் விளம்பர மாதிரி விளக்கங்கள் எதுவும் இணைக்கப்பட வேண்டும் ஆனால் அப்படி எதுவும் இணைக்கப்படவில்லை.அங்கீகாரம் இன்றிக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகளில் தனிப்பட்ட தொலைபேசி இலக்கம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநகர சபையின் வருமான மேற்பார்வை அதிகாரிகளாக ஏழு உயர் அதிகாரிகள் இருக்கும் போது ஒரே ஒரு குறிப்பிட்ட அதிகாரி மட்டுமே அனுமதி வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இதில் பெரிய சந்தேகம் ஏற்பட்டுள்ளது. விளம்பரக் கட்டண அறவீட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி கணக்கறிக்கையில் கையொப்பமிடவில்லை.

இவற்றுக்கு உடனடியாக விளக்கம் அளிக்கும்படியும் மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பதில் அளிக்கும்படியும் எழுதிய கடிதத்துக்கு எட்டு மாதங்களாகியும் முதல்வரிடமிருந்து எந்தவிதமான பதிலும் கிடைக்கப்பெறவில்லை. இதனால் உயர்மட்ட விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

source:GTN.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.