Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்புக்கு சிறிகாந்தா கோரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசை நம்பாவிட்டால் சர்வதேச மத்தியஸ்தத்துடன் பேசுங்கள் – கூட்டமைப்புக்கு சிறிகாந்தா கோரிக்கை!

Published on May 25, 2011-6:01 pm · No Comments

அரசாங்கத்திற்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் இடையே நடைபெற்று வருகின்ற பேச்சுக்கள் முறியும் என்று தமிழ்தேசியக்கூட்டமைப்பு கருதினால் அதிலிருந்து உடனடியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியேறவேண்டும் அதைவிடுத்து அரசாங்கமே முறிக்கும் என்று சொல்லிக்கொண்டிருந்தால் அது எந்த வகையான அரசியல் என்று தமக்கு தெரியவில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான என்.சிறிகாந்தா தெரிவித்தார்.

தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பு என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்திருக்கும் சிறிகாந்தா இன்று மாலை அதன் யாழ். அலுவலகத்தில் நடாத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் அண்மையில் திருகோணமலையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அரசாங்கமே அரசு கூட்டமைப்புப்பேச்சுவார்த்தைகளை முறிக்கும் என்று தெரிவித்தாக சில பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்திருந்தன.

இந்த நேரத்தில் சில விடயங்களை பகிரங்கமாக தெரிவிக்கவேண்டிய கடமைப்பாடு தமிழ் மக்கள் சார்பில் தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்புக்கும் இருக்கின்ற காரணத்தினால்தான் அதன் தலைவர் என்ற வகையில் நானும் செயலாளர் என்ற வகையில் சிவாஜிலங்கமும் கட்சியின் தலைமைக் குழுவிற்கமைய இந்த பத்திரிகையாளர் மாநாட்டை நடாத்த ஒழுங்கு செய்திருந்தோம்.

பேச்சு வார்த்தைகள் சரியான இடத்திலே அரசாங்கத்திற்கும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் இடையிலே இல்லை என்பதே பிரேமச்சந்திரனின் கூற்று மாத்திரமல்ல சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் கூற்றுக்களும் தெளிவுபடுத்துகின்றன. இது கவலைக்குரிய விடயம் ஐக்கிய இலங்கைக்குள்ளே இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கத்துடன் பேசியாகவேண்டிய கட்டாயமான நிலைமையில் தமிழர் தரப்பு தள்ளப்பட்டிருக்கின்றது.

தமிழர் தரப்பினுடைய மிகப்பிரதான அரசியல் கட்சி என்ற முறையிலே தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு அதனுடைய பங்கு இந்த விடயத்தில் இருப்பதை எவரும் மறுக்க முடியாது ஆனால் பேச்சுவார்த்தைகளை அரசாங்கம் தானாக முறிக்கும் என்று சொல்லுகின்றபோது. இந்தப்பேச்சுவார்தையின் நோக்கமே அர்த்த மற்றுப் போய் விடுகின்றது. தமிழ்மக்களுக்கு மாத்திரமல்ல முழு நாட்டுக்கும் கூட இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கு அரசியல் தீர்வு அவசியமாகவும் அவசரமாகவும் தேவைப்படுகின்றது.

பேச்சுவார்த்தைகள் உரிய முறையிலே சரியான தடத்திலே நடைபெற வேண்டும் என்ற அவசியத்தை இந்தச் சந்தர்ப்பத்திலே சுட்டிக்காட்டவிரும்புகின்றோம். கடந்த காலங்களிலே குறிப்பாக 70 களின் பிற்பகுதிகளிலும் 80களிலும் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனாவோடு அன்றைய பிரதான தமிழ்க் கட்சியான தமிழர் விடுதலைக்கூட்டணி தொடர்ந்து நடாத்திய பேச்சுவார்த்தைகளின் கதி இந்தப்பேச்சுவார்த்தைக்கும் நடந்து விடக்கூடாது அப்படி நடப்பதற்கு நாங்கள் அனுமதிக்கக் கூடாது. தமிழ் மக்கள் அனுமதிக்கக் கூடாது. எனவே தான் சில விடயங்களை தமிழ்த் தேசிய விடுதலைக்கூட்டமைப்பு தமிழ் மக்கள் முன்னாலும் தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்ட சகலரின் முன்னாலும் முன்வைக்கின்றது.

முதலாவது, இந்த பேச்சுவார்த்தைகளுக்கு சர்வதேச சமுகத்தின் பங்களிப்பு அவசியமானது எங்களுடைய பிரச்சனையில் மறைமுகமாகவும், நேரடியாகவும் சம்மந்தப்பட்டிருந்த சகல நாடுகளையும் சர்வதேச சமூகமென்று குறிப்பிடுகின்றோம்.

சர்வதேச சமூகத்தின் பங்களிப்புடன் ஐக்கிய நாடுகள் சபையையும் உள்ளடக்கி பேசவிரும்புகின்றோம். சர்வதேசத்தின் பங்களிப்பு முதலில் தேவை அதற்கான யதார்த்தம் உணரப்படவேண்டும் அந்த வகையில் இந்தியாவும் அதில் உள்வாங்கப்பட வேண்டும் இன்று இருக்கின்ற இந்திய காங்கிஸ் கட்சி தலைமையிலான சோனியா காந்தி அரசாங்கத்தின் மீது தமிழ் தரப்பு நம்பிக்கை வைத்து செயற்படுவதாக நினைத்துக்கொணடிருக்கின்றோம். சோனியாகாந்தி அரசாங்கம் யுத்தத்தின் போது என்ன செய்தது. என்பது எல்லோருக்கும் தெரியும் நாங்கள் அதனை மறக்கவும் முடியாது. மன்னிக்கவும் முடியாது இந்திய அரசாங்கத்தைத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நம்புமாக இருந்தால் அது இன்னுமொரு பாரிய தவறாக இருக்கும் இவ்வாறு என். சிறிகாந்தா தெரிவித்தார்.

source:thinakkathir.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.