Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுரேஸ் பிறேமச்சந்திரன் எம்.பி.உரைத்த யதார்த்தம் –

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுரேஸ் பிறேமச்சந்திரன் எம்.பி.உரைத்த யதார்த்தம் – வலம்புரி!

பிரசுரித்தவர்: admin May 25, 2011Add a comment

அரசாங்கம் தனது நலன் கருதியே தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் நம்பிக்கையுடன் பேசுகிறது. ஆனால் அரசோ தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வை முன்வைப்பதாக இல்லை. ஆறுதடவைகள் அரசுடன் பேசிவிட்டோம். அந்தப் பேச்சுவார்த்தையின் போது இணக்கம் காணப்பட்ட விடயங்கள் எதனையும் அரசு நிறைவேற்றவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

இது விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனைப் பாராட்ட வேண்டும். ஏனெனில் அவர் யதார்தத்தை பேசியுள்ளார். கடந்த காலங்களிலும் அவரின் உரையில் யதார்த்தம் இருந்துள்ளது.

உண்மையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொறுப்பு அரசினுடையது. அரசாங்கம் தீர்வை முன்வைக்கவில்லை என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினையோ அல்லது ஏனைய அரசியல் கட்சிகளையோ குறை கூறமுடியாது. அவ்வாறு குறை கூறுவது நியாயமும் ஆகாது.

ஆனால் தமிழ்த் தரப்பு இராஜதந்திரமாகச் செயற்படவேண்டும் என்பதே எங்களின் கருத்து. இங்கு தான் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் ஓரிடத்தில் குறிப்பிட்ட விடயம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது ‘சர்வதேச சமூகத்தின் ஆரவைப் பெறுபவர்களாக தமிழர்கள் இருக்க வேண்டும். இவ்விடயத்தில் எமக்கு இராஜதந்திரம் அவசியம்’ என்ற அவரின் கருத்தில் நிறைந்த யதார்த்தமும் உட்பொருளும் உண்டு. இதனையே நாமும் இவ்விடயத்தில் வலியுறுத்தி வந்துள்ளோம்.

நாடாளுமன்றத்தில் பல சந்தர்ப்பங்களில் நம் பிரதிநிதிகள் தேவையற்ற விடயங்களைப் பிரஸ்தாபித்து நேரத்தை வீணாக்குகிறார்கள். அவசியமானதற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. உதாரணமாக வேலணை வைத்தியசாலையில் கடமையாற்றிய ஒரு சிங்கள டாக்டரின் தொல்லையால் அங்கு பணியாற்றிய இளம் குடும்பநல உத்தியோகத்தர் மரணமடைந்தார். இது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என எவருக்குமே தெரியாது.

இது பற்றி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் எவரேனும் நாடாளுமன்றத்தில் கேட்டதுண்டா? இப்படியான கேள்விகள் கெடுதிகளைக் குறைக்க வழி செய்யுமல்லவா? நாங்கள் சம்பவம் நடந்து ஒரு சில நாட்களுக்கு கதைப்போம். பின் மறந்துவிடுவோம். இந்த உண்மையைத் தெரிந்து கொண்டவர்கள் தங்கள் கொடூரத்தை தொடர்கின்றனர்.

அண்மையில் கூட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், ‘எங்களை நாங்களே ஆளும் உரிமை கிடைக்கும் வரை போராடுவோம்’ எனக் கூறியதான தகவல்கள் வெளிவந்திருந்தன.

ஐயா! அது என்ன போராட்டம்? அப்படியேதும் போராட்டம் செய்கின்றோமா? அல்லது செய்ய முடியுமா? இத்தகைய பேச்சுக்கள் தான் தமிழ் மக்களை கற்பனை உலகில் சஞ்சரிக்க வைக்கின்றன. உண்மையில் தமிழ் மக்கள் தங்களின் அடிப்படைப் பிரச்சினைகளைக் கூட வெளியில் சொல்ல முடியாதவர்களாக இருப்பதே உண்மை. இதையே அவர் கூறியிருக்கவேண்டும்.

இதைவிடுத்து: போராடுவோம் என முப்பது வருடத்திற்கு முந்தியதை திரும்பத் திரும்பக் கூறுவது மகா தவறு.

உயிரிழந்த தமிழ் உறவுகளுக்காக மோட்ச தீபம் ஏற்றவே முடியாத காலத்தில் இருந்து கொண்டு போராடுவோம் எனக் கூறுவது பொருத்துரைடயதல்ல என்பது எங்கள் கருத்து.

நன்றி – வலம்புரி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.