Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமராட்சிகிழக்கில் சிங்கள மீனவர்களின் வரவு அதிகரிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடமராட்சிகிழக்கில் சிங்கள மீனவர்களின் வரவு அதிகரிப்பு!

Published on May 26, 2011-7:54 am · No Comments

வடமராட்சி கிழக்கு பகுதியில் சிங்கள மீனவர்களின் வரவு அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தடைசெய்யப்பட்ட வலைகளை பாவிப்பதால் வடமராட்சி கிழக்கில் உள்ளுர் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கங்களின் சமாசத்தலைவர் தவரட்னம் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி கிழக்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மீனவர்கள் சாதாரண வலைகளையே பயன்படுத்துவதாகவும், அவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் குறிப்பிட்ட சில மணிநேரங்கள் மட்டுமே மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால் தென்னிலங்கையிருந்து வந்துள்ள சிங்கள மீனவர்கள் 24மணிநேரமும் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவதாக வடமாகாண கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தலைவர் தெரிவித்துள்ளார். உள்ளுர் மீனவர்கள் சாதாரண வலைகளை பயன்படுத்தி தொழில் செய்யும் போது தென்னிலங்கை மீனவர்களின் றோளர் வலைகள் அவற்றை சேதப்படுத்தி செல்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் வடமராட்சி கிழக்கு மற்றும் முல்லைத்தீவு கடற்பிரதேசத்தில் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் ‘சிலிண்டர்’ உதவியுடன் கடலட்டை பிடிக்கின்றனர். அதனுடன் கடல் வளமான சங்குகளையும் பிடித்துச் செல்கின்றனர்.

வடமராட்சி கிழக்கில் செம்பியன்பற்று, தாளையடி, மருதங்கேணி, உடுத்துறை, ஆழியவளை ஆகிய கிராமங்களில் தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

இவர்களுக்கு உரிய தொழில் வாய்ப்புகள், தொழில் உபகரணங்கள் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தென்னிலங்கை மீனவர்கள் எமது பிரதேசத்தில் நுழைந்து தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளான மின்னொளி பாய்ச்சி மீன்பிடித்தல், சிலிண்டர் பயன்படுத்தி காஸ் மூலம் மீன்பிடித்தல் ஆகிய முறைகளைப் பயன்படுத்துகின்றனர்.இதனால் எமது கடற்பகுதியிலுள்ள கடல்வாழ் உயிரியங்களின் பெருக்கம் கட்டுப்படுத்தப்படுவதோடு கடல்வளங்கள் அழித்தொழிக்கப்படுகின்றன.

கரை வலையைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும். தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறி தடைசெய்யப்பட்ட மீன்பிடிமுறைகளை மேற்கொள்வதால் கடலில் அமைதியான சூழ்நிலை கலைக்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.

வடமராட்சி கிழக்கில் 129 தென்னிலங்கை சிங்கள மீனவர்கள் கடலட்டை பிடிப்பதில் ஈடுபட்டுள்ளனர் என தவரட்னம் தெரிவித்தார்.

சிங்கள மீனவர்கள் அத்துமீறி தொழிலில் ஈடுபடுவதால் தமது தொழில் பாதிக்கப்படுவதாக முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பல்வேறு நெருக்கடிக்குள்ளான நிலையில் தற்பொது மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பின்னர் சுதந்திரமான முறையில் கடலில் மீன் பிடிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொக்களாய் தொடக்கம் சுண்டிக்குளம் வரையான கடற்பகுதியில் சிங்கள மீனவர்கன் கடற்தொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் மீனவர்கள் குறிப்பிட்ட பிரதேசத்தில் அதுவும் படையினரின் அனுமதியினைப்பெற்றே கடற்தொழிலில் தாங்கள் ஈடுபடமுடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தவிடயம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் முறைபாடுகள் செய்யப்பட்டுள்ள போதிலும் தமக்கு நீதி கிடைக்கவில்லை என முல்லைத்தீவு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

source:thinakkathir.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.