Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

70 ஆயிரம் மக்கள் உள்ள முல்லைத்தீவில் 70,000 படையினர் எதற்காக?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Thursday, May 26, 2011, 10:22சிறீலங்கா59 views2 comments

70,000 மக்களைக் கொண்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் 70,000 படையினர் நிறுத்தப்பட்டுள்ளார்கள். போர் முடிவுற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரும் தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க அரசு எந்தளவு தூரம் திறனற்றுப் போயுள்ளது என்பதை இது உணர்த்துவதாக உள்ளது என சுதந்திர ஊடகவியலாளரும், சுதந்திய ஊடக அமைப்பின் முக்கியஸ்த்தருமான சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இத்தகைய அரசியல் நிலைப்பாடுகளின் மத்தி யில் தமிழ் மக்களுக்கு உண்மையான அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படக்கூடும் என்பதை எண்ணிப் பார்ப்பது கடினம். போர் மனோபாவத்தால் கட்டி எழுப்பப்பட்டுள்ள இலங்கையின் அரசியல் மனோ பாவமானது எப்போதுமே தமிழ் மக்களை அடி மைப்படுத்தி வைத்துக்கொள்ளவே விரும்புகிறது எனவும் கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள வார இதழான ‘ராவய’வில் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

இக்கட்டுரையில் அவர் மேலும் முக்கியமாகக் குறிப்பிடடிருப்பதாவது:

“ராஜபக்ஷ அரசின் யுத்தக் கோட்பாட்டினுள் அதிகாரப் பகிர்வு என்ற எண்ணக்கருவுக்கு எப்போதுமே இடமே இருந்ததில்லை. ஆனாலும் போர் முடிந்து விட்டது என்பதை இந்தியாவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கச் சென்றிருந்த ஜனாதிபதி ராஜபக்ஷ, அங்கு 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் செல்லும் அரசியல் தீர்வொன்று வழங்கப்படுமெனச் சபதமிட்டார். புதுடில்லியில் அவர் அதனைச் சொல்லும் போது அதிகாரம் பகிரப்படுவதை முழு மூச்சில் எதிர்த்த தீவிர தேச பக்தர்கள் பலரும் ராஜபக்ஷ அரசில் இருந்தனர். அவை கடும்போக்கு சிங்கள தேசியவாதத்தைச் சுமந்து நின்றன.

மக்கள் ஐக்கிய முன்னணி, ஜாதிகஹெல உறுமய மற்றும் தேசிய சுதந்திர முன்னணி என்பனவே அவையாகும். இந்த அரசியல் சக்திகள் தற்போதும் மகிந்த ராஜபக்ஷவுடனேயே இருக்கின்றன. மதம் சார் மற்றும் கருத்தியல் தலைமைத்துவத்தை வழங்கும் குழுவொன்றினால் இந்த அரசியல் கட்சிகளுக்குப் புதிய யோசனை யொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. தூண்டிவிடப்படும் சக்திகள் இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. நிபுணர் குழு முன்வைத்த பரிந்துரைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கீகரித்துள்ளதால் அதனுட னான அமைதிப் பேச்சை உடன் நிறுத்த வேண்டும் என்று அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே அந்த யோசனையாகும்.

அதை அடியொற்றியே முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க பேச்சுக்கான அரச குழுவில் இருந்து விலகினார். உண்மையைக் கூறுவதானால் இவர்களில் எவருமே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியல் தீர்வொன்றுக்குச் சார்பாக நின்றதில்லை. நிபுணர் குழு அறிக்கையை சாதகமானதொரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்களது அரசியல் அபிலாஷைகளை நசுக்கி விடுவதற்கு இவர்கள் எத்தனிக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது. இது இவ்வாறிருக்க பான் கீமுனின் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்கும், அரசியல் தீர்வு ஒன்றை வலியுறுத்தும் எவரொருவரும் இணைத்துக் கொள்ளப்படக்கூடாது எனவும் மேற்படி தரப்புக்கள் ஆலோசனை வழங்கியுள்ளன.

மறுபுறத்தில் பான் கீமுனின் அறிக்கைக்குத் தமது எதிர்ப்பைத் தெரிவித்த போதும், அரசின் பங்காளிகளான கம்யூனிஸ்ட், மற்றும் சமசமாஜக் கட்சிகள், தமிழ் மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் விதத்தில் தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியும் கூட இன்றைய சந்தர்ப் பத்தில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்று வழங்கப்படுவது அவசியம் என்று கூறுகின்றது.

அதேவேளை மக்கள் விடுதலை முன்னணியும் ஐ.நா. அறிக்கையை எதிர்த்துள்ளது. எனினும் இராஜதந்திர வார்த்தைகளில் அது இந்த விடயத்தைக் கையாள்கிறது. ஐ.நா. செயலாளரின் அறிக்கையை அனைவரும் ஓரணியில் நின்று எதிர்க்கத்தக்க வகையிலான ஜன நாயக உரிமைகளை நாட்டில் உறுதிப் படுத்துமாறு அது அரசிடம் வலியுறுத்தி உள்ளது.மறுபுறத்தில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அரச பேச்சுக் குழுவில் இருந்து விலகியதை ஒரு பொருட்டாகக் கருதாது அரசியல் தீர்வொன்றை எட்டும் பேச்சுக்குத் தாம் தொடர்ந்தும் பங்களிப்பு வழங்கப் போவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இத்தகைய ஒரு சூழலில் தமிழ்க் கட்சிகளுடனான பேச்சில் இருந்து விலகும்படி சிங்களக் கடும் போக்குவாதச் சத்திகள் முன்வைக்கும் கோரிக் கைகளை நிறைவேற்ற இப்போது அரசு தயாராக இல்லை. பதிலாக மாற்று அணுகுமுறை ஒன்றைக் கையாள்கிறது.புலிகள் ரணில் விக்கிரமசிங்க சமாதானப் பேச் சின் போது உறுப்பினராக இருந்தவரும் அமெரிக்க ஆதரவாளருமான மிலிந்த மொறகொடவை வெளிநாட்டு விவகாரங்கள் சம்பந்தமான ஜனாதி பதி ஆலோசகராக அது நியமித்துள்ளது. அவசர காலச் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் சிற்சில விதிகளைத் தளர்த்துவதற்கும் அரசு தீர்மானித்துள்ளதாகவும் தகவலறிய முடிந்துள்ளது. ஆனாலும் போரின் மூல காரணியான தமிழ் மக்க ளது சமூக அரசியல் மற்றும் கலாசாரம் சம்பந்தமான கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் முயற்சி கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை.

70 ஆயிரம் மக்கள் வாழும் முல்லைத்தீவு மாவட் டத்தில் பாதுகாப்புக்காக 70 ஆயிரம் இராணுவத் தினர் அமர்த்தப்பட்டுள்ளனர் என்று செய்தி யொன்று கூறுகிறது. போர் முடிவுற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரும் தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க அரசு எந்தளவு தூரம் திறனற்றுப் போயுள்ளது என்பதை அச்செய்தி தெளிவுபடுத்துகிறது. இத்தகைய அரசியல் நிலைப்பாடுகளின் மத்தி யில் தமிழ் மக்களுக்கு உண்மையான அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படக்கூடும் என்பதை எண்ணிப் பார்ப்பது கடினம். போர் மனோபாவத்தால் கட்டி எழுப்பப்பட்டுள்ள இலங்கையின் அரசியல் மனோபாவமானது எப்போதுமே தமிழ் மக்களை அடி மைப்படுத்தி வைத்துக்கொள்ளவே விரும்புகிறது. மாறாக உரிமைகள் வழங்கப்படக் கூடியதொரு சமூகமாக தமிழர்களைத் தெற்கு ஒருபோதும் கருதுவதில்லை.

நீண்ட கால ரீதியில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் போர் மனோபாவத்தின் ஒரு கோணமே இதுவாகும். இலங்கை அரசிடம் காணப்படும் அடுத்த கோணம் மனித மற்றும் ஜனநாயக உரிமைகளுடனான சமூகம் ஒன்றுக்குப் பதிலாகத் தான்தோன்றித்தனமான நிர்வாகமொன்றே அவசியப்படுகிறது என்று எண்ணத் தலைப்படுகிறது. உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள் இத்தகைய காரணங்களை முன்னிட்டே யுத்தம் மற்றும் மனித உரிமைகள் சம்பந்தமான பேச்சு களும் அழுத்தங்களும் எமக்கு அவசியமாகின்றன. மற்றப்படி, மகிந்த ராஜபக்ஷவை மின்சார நாற்காலிக்கு அனுப்புவதற்காக அல்ல.

அதாவது, யுத்த மனோபாவத்திலிருந்து வெளியேறி அதைக் கைவிட்டு போரின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவும் அதன் மூலகாரணி களுக்குத் தீர்வுகளை வழங்கி, அதற்கு இரையாகிப் போயுள்ளவர்களுக்குச் சரி யான பரிகாரங்களைப் பெற்றுக் கொடுப்பதற் காகவே மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை அரசு அக்கறை செலுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்துகின்றன. போர்க்குற்ற குற்றச்சாட்டுக்களைக் கொண் டுள்ள ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை அதற்கான சந்தர்ப்பம் ஒன்றை வழங்கியுள்ளது. அதிலிருந்து நழுவிச் செல்வதற்கு முயற்சிப்பதானது பிரச்சினையை நிரந்தரமாக்கிவிடும்.”

source:tamilthai.

வன்னி இறுதிப் போரில் பெருமளவான ராணுவத்தினர் ஏறக்குறைய 55000 சிப்பாய்கள் களமுனையில் இருந்து ஓடிப்போயினர்

அதற்காக பெரும் பொருட்செலவில் குறுகிய காலத்திற்குள் ஏறக்குறைய 170 ,000 படையினரை ராணுவத்தில் சேர்த்துக் கொண்டது. புலிகளும் மக்களும் முல்லி வாய்க்காலுக்குள் முடக்கப் படும் வரை இந்த ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு நடைபெற்றது. கைப்பற்றிய வன்னி பெருநிலப் பரப்பை தக்க வைக்க 90 நாட்களே பயிற்ச்சி அளிக்கப்பட படையினர் களமுனைக்கும் முன்னரங்குகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்..

இப்பொழுது 3 லட்சம் படையினர் ராணுவத்தில் உள்ளனர்..... தூர நோக்கற்ற புலிகளை அழிக்க வேண்டும் எனும் நோக்கில் மட்டுமே செயல்பட்ட அரசாங்கம் பெருமளவான படையினரை வீட்டுக்கும் அனுப்ப முடியாது திணறி வருகிறது.... யுத்தம் முடிவடைந்த பின்னரும் பாதுகாப்பு செலவீனம் அதிகரித்து வருவதற்கு இது முக்கிய காரணம்..... உள்நாட்டு பாதுகாப்பு, அபிவிருத்தி எனும் பெயரில் ராணுவத்தினரை பயன்படுத்தி வருகிறது....

இன்னும் ஐந்து வருடங்களுக்கு ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு இல்லை எனும் மூலோபாயத்தில் செயல்படும் இலங்கை அரசு, ஏற்கனவே சேர்த்த ராணுவத்தினரை வைத்து வடக்கு கிழக்கு முழுவதிலும் ராணுவ முகாம்களை அமைத்து அதன் பின்பு அவசரகால சட்டம், பயங்கரவாத தடைச் சட்டம்( நீக்கப்படுமா சந்தேகமே) நீக்கப்படுவது குறித்து சிந்திப்பது. இலங்கையில் இன்னும் அவசர காலச் சட்டம் தொடர்ந்து அமுலில் இருப்பதற்கு உப்பிப் பெருத்த ராணுவமும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப் படுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.