Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நினைவுக்குள் நடுகல் ஆனவர்களும் பூபதி அம்மாக்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுக்குள் நடுகல் ஆனவர்களும் பூபதி அம்மாக்களும்

ஆனந்தபுரத்தில் அனல் நடுவே நின்று வீரம்

விளைத்தவர்களது நினைவு போன வாரத்தில் கடந்துபோனது. ஆனந்தபுரம் தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் திசையை தீர்மானிக்கும் ஒரு சமராகஇருந்தது. அந்தசமர் வெற்றிபெற்றால் சிங்கள படைகளும்,அதற்கு முண்டுகொடுத்தபடியேநின்றிருந்த வல்லாதிக்கபடையும் மோசமாக பின்வாங்கிஓடிவிடும்.வெல்லப்படமுடியாத ஒரு மரபுவழிப்படையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் படைப்பிரிவுகள் தீர்மானிக்கப்பட்டு அதற்கு ஊடாக தமிழீழ நிலங்களின் பிரிந்துபோகும் உரிமை யாராலும் மறுக்கமுடியாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கு தனது முழுநிதியையும், ஆளணியையும் மாவிலாற்றிலிருந்து தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதற்கு இறக்கிவிட்டிருந்த சிங்களம் ஆனந்தபுரத்து அடியுடன் கொலுகொலுத்து சிதைந்திருக்கும். விடுதலைப்போராளிகளுக்கும், ஆக்கிரமிப்பாளனுக்கும் மிகத்தெளிவாக இந்தச்சமரின் முடிவுகளின்பலாபலன்கள் மிகத்தெளிவாகத் தெரிந்திருந்தன. கிளிநொச்சிக்குப் பிறகும், வட்டக்கச்சிவரைக்கும் தற்காப்புச்சமராக நகர்ந்துவந்தயுத்தம், ஆனந்தபுரத்தில் இருந்து வடிவம் மாறிவலிந்த தாக்குதலாக மாறவேண்டி இருந்தது. தமிழர் வரலாற்றில் இதுகிட்டத்தட்ட ஒரு ‘வாட்டர்லு£’ போன்றே இருந்தது.

இந்திய இராணுவம் தமிழீழத்தை ஆக்கிரமித்து நின்றபோது நடைபெற்ற மணலாற்றுச் சமரும் இத்தகைய ஒன்றுதான். அன்றைய நாட்களில் மணலாறு முழுமையாக இந்தியப் படைகளிடம் வீழ்ந்ததிருந்தால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் திசையை அது முழுதாக மாற்றி அமைத்திருக்கும். விடுதலைப் போராட்டத்தை பொறிக்குள் கொண்டுவந்து விட்டதாகவும் அதன் தலைமை இதோ வீழ்கிறது என்ற பொருள்பட ‘ஒப்பிரேசன் செக்மேற்’ என்றகுறியீட்டைமிகவும் நம்பிக்கையுடன் தெரிவுசெய்து இந்திய ஆக்கிரமிப்பு படைகள் நடாத்திய சமரும் அதற்கு எதிரான தற்காப்பும், வலிந்ததும் கலந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் நிறைந்ததாக இருந்தது மணலாற்றுசமர்.ஏறத்தாழ இருபத்து ஒரு ஆண்டுகளுக்கு பின்னர் அப்படியானசமராக ஆனந்தபுரம் இருந்தது.

ஒருபுறம் உலகநாடுகள் வழங்கிய நவீன ஆயுதங்களுடனும், வல்லாதிக்க நாடு கொடுத்த படை உதவிகளுடனும் சிங்களம் பெரும்பலத்துடன் வளைத்துநின்றது. இன்னொரு பக்கத்தில் விடுதலை என்ற அற்புதவாழ்வுமுறையை எமது மக்களுக்கு பெற்றுத்தருவதற்காக தங்களை எந்த தருணத்திலும் அர்ப்பணிக்கத்தயாரான வீரமும், ஈகமும் நிறைந்த தமிழீழ வீரர்கள் நின்றிருந்தார்கள். வானத்தில் இருந்து எமது வீரர்களின் ஒவ்வொரு அசைவையும் இரவுபகலாக கண்காணித்து சிங்களத்துக்கு தகவல் தந்துகொண்டிருந்த செய்மதிக் கண்களுக்கும், ஆளில்லாமல் பறந்துபறந்து கானகத்தின் ஒவ்வொரு மாற்றத்தையும் படம்பிடித்து வல்லாதிக்கத்துக்கும், சிங்களபேரினவாத படைக்கும் தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருந்த வானத்து ஆட்காட்டிகளது கண்களுக்குள்ளாக எமது வீரர்கள் மரங்களுடன் மரங்களாகவும், மண்ணுடன் மணலாகவும், சேற்றுடன் சகதியாகவும் நகர்ந்து நகர்ந்து சமர்செய்தார்கள். சமருக்காக நகர்வதே ஒரு முழு சமர் போலவும் ஒரு சமரில் நிகழும் இழப்புகள் ஆனந்தபுரத்துக்கான நகர்வினில் ஏற்பட்டதாகவும் அறியமுடிகிறது.

பல்லாயிரம் ஆக்கிரமிப்புப்படைகளுக்கு எதிராக சிலநுற்றுக்கணக்கான விடுதலை வீரர்கள் நடாத்திய அந்த சமரின் முழுவிபரங்களும் வெளிவரும்போது தாயக விடுதலை என்ற உன்னதமான நோக்கத்துக்காக ஒரு தேசிய இனத்தின் புதல்வர்கள் நடாத்திய இறுதிநேர சமர் மிகப்பெரும் வியப்புடன் நிச்சயமாக நோக்கப்படும். சிங்களத்தின் தகவல்களின் அடிப்படையிலே பார்க்கும்போதே அவர்கள்மிப்பெரிய இழப்பை இந்தச்சமரில் சந்தித்ததாக தெரிகிறது.

நெருங்கமுடியாத பெரும் நெருப்பாக எங்கள் வீரர்கள் களமாடியிருப்பர்கள். எத்தனை சமர்களில் விழுப்புண்களும், பட்டறிவும் பெற்ற அனுபவம்மிக்க எங்கள் தாயகத்து வீரர்களும் தளபதிகளும் தங்களின் அனைத்து போரியல் அனுபவங்களையும், மிகஉச்சமான வேகத்தையும், வீரத்தையும் அந்தச்சமரில் காட்டியிருப்பார்கள்.மிகைஒலியுடன்பறந்துபறந்து இலக்குகளைதாக்கும் குண்டுவீச்சு விமானங்களும், பலபத்து மைல்களுக்கு அப்பாலும் பறந்துவந்து தாக்கக்கூடிய எறிகணைகளும் மழைபோல வீழும்போதும் எங்கள் வீரர்கள்களமாடியிருப்பார்கள். எல்லாவகையான வழங்கல்களும் எதிரிக்கு நிமிடத்துக்கு நிமிடம் கிடைத்தபடியே இருக்க அனைத்து வழங்கல்களும் தடைப்பட்டு போனபின்னும் இருக்கும் ஆயுதங்களையும்,குண்டுகளையும்வைத்துபோராடியஎமது மண்ணின்மைந்தர்களின் வீரம் மிகப்பெரியது.

இதிகாசக்கதையான மகாபாரதத்தின் மிக உச்சமான உணர்ச்சிக்கட்டமே அபிமன்யுவியூகத்துள் போராடும் இடமாகும். பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் வில்வித்தை சொல்லித்தந்த ஆச்சாரியார் துரோணர் முதல் பலவீரர்கள் சூழ்ந்துநிற்க அபிமன்யுதனியனாக நடாத்திய யுத்தமுறைகண்டு வானத்து தேவர்கள்கூட ஆச்சர்யம் அடைந்து ஒருவருக்கு ஒருவர் யார் இந்த இளைஞன் என்று வினவியதாக வில்லிபாரதத்தில் ஒரு இடம்வருகிறது. அதைப்போலவே ஆனந்தபுரத்தில் சுற்றிவர பெரும்படை சூழ்ந்துநிற்க, சமராடிய எமது வீரர்களின் பெருவீரத்தை வானத்து செய்மதி ஊடாகவும், ஆளில்லா வேவுவிமானங்கள் மூலமும் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் உறைந்துதான் போயிருப்பார்கள்.

இவர்களை வெல்லாமல் இனிஅடுத்த அடிஎடுத்து வைக்கமுடியாது என்று ஆதிக்கசக்தியும், பேரினவாதத்து படையும் முடிவுஎடுத்தார்கள். உலக போர்முறைச்சட்டங்களில் தடைசெய்யப்பட்ட இரசாயணக் குண்டுகளை இறுதியில் பாவித்து ஒப்பும் உவமையும் இல்லாத எமது தளபதிகளையும், வீரர்களையும் கோழைத்தனமாக மௌனமாக்கிவிட்டார்கள்.

வீரத்தால் போராடி வெல்ல முடியாது என்று பயந்த கோழைகள் எங்கள் தேசத்தின் விடுதலைத் தளபதிகளை நயவஞ்சகமாக வீழ்த்திவிட்டார்கள். ஆனந்தபுரத்தில் வீழ்ந்த ஒவ்வொருவரின் முகங்களும் அவர்களின் நெஞ்சம் முழுதும் நிறைந்திருந்த விடுதலைக்கனலும் காலம் எவ்வளவு கடந்தாலும் தமிழ் மக்களின் நினைவுகளைவிட்டுப்போகாது. கல்லறைகளும், துயிலகங்களும் கோழைத் தனமாக சிங்களத்தால் உடைத்து எறியப்பட்டுவிட்ட இந்தப்பொழுதில் ஆனந்துபுரத்து வீரர்களினம் நினைவாக எவராலும் எடுத்து எறியவோ, துடைத்துவீசவோ முடியாத எமது அகங்களுக்குள் நிலையான ‘நடுகல்களை’ நாம்நிறுவுவோம்.

பலநுற்றுவருடங்களுக்கு முன்னர் எங்களின் முந்தையோன் ஒருவன் அடங்காப்பற்றில் ஆக்கிரமிப்புபடைக்கெதிராக சமராடி வீழ்ந்த இடத்தில் இருந்த நடுகல் சொல்லிநின்ற வீரத்தின் கதைபோலவே எமது மனங்களுக்குள்ளும் புலத்திலும் நாம் எழுப்பும் நடுகல்கள் எமது வீரர்களின் இறுதிநேரத்து வீரத்தைப்பற்றியும், தமிழீழ விடுதலைக்கான அவர்களின் உறுதிநிறைந்த பயணத்தையும் என்றும் சொல்லிநிற்கும்.

ஆனந்தபுரத்தில் எமது வீரர்கள் அனலாடிய மாதத்தின் இன்னுமொரு தினத்தில் (ஏப்ரல் 19) தமிழீழ நாட்டுப்பற்றாளர்கள் தினமும் வருகின்றது. பூபதி என்ற ஒரு சாதாரண தாய், ஒரு குடும்பதலைவி, ஒரு மனைவி தனது அன்றாட வாழ்வுகளுக்குள்ளிருந்து புறப்பட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக தன்னையே வருத்திமுன்னிறுத்தி நடாத்திய போராட்டத்தின் நாள்தான் ஆண்டுதோறும் தமிழீழ நாட்டுப்பற்றாளர்களை நினைவுகோள்ளும் தினமாக அறிவிக்கப்பட்டுதொடர்கிறது.

பூபதி அம்மா தனது சொந்தப்பிள்ளைகளுக்காக மட்டும்போராடவில்லை. எங்கள் அனைவருக்காகவும், எங்களின் பிள்ளைகள் அனைவருக்காகவும் அவர்குரல்கொடுத்தவர். மார்க்சிம் கோர்க்கியின் தாய் நாவல் உலக இலக்கியத்தின் ஒரு மிகமுக்கியமான குறியீடாகவும், படைப்பாகவும் இன்றும் போற்றப்படுகிறது. ஜார் மன்னரை விரட்டிவிட்டுபாட்டாளிகளின் ஆட்சியதிகாரத்தை நிறுவும் புரட்சிக்கான முண்ணணிப்படையான போல்சிவிக் கட்சியின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்த ஒரு தாயின் வரலாறாகவே தாய் நாவல்விரிகிறது. புரட்சிக்காக போராடும் பாவெல் என்ற போராளியின் தாயாகவும், புரட்சிக்கான இரகசிய வேலைகளில் உதவிடும் தாயாகவும் மார்க்சிம் கோர்க்கி தனது தாய் நாவலின் தாயை படைத்திருந்தார். ஆனால் பூபதி அம்மா ஒரு தாயாகவும், அதே நேரத்தில் தனது தாயகத்தின் விடுதலைக்கான வேலைத்திட்டங்களில் பின்னாக நின்றதுடன் மட்டும் இல்லாமல் தேவை ஏற்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் ஆக்கிரமிப்புக்கு எதிரான பகிரங்க எதிர்க்குரலாக, ஆக்கிரமிப்பை அகற்றும் போக்களத்தில் குதித்தவர். தாய்மை என்றும், தாயை தெய்வமாக போற்றுகின்றோம் என்றும் கூவித்திரியும் பாரதப்படைகளினதும், அதன் கொள்ளை வகுப்பாளர்களதும் முகத்திரையை கிழித்தெறிந்துகாட்டியவள் அன்னை பூபதி அம்மா. பூபதி அம்மாவை போன்றே அனைத்து நாட்டுப்பற்றாளர்களும் தமது குடும்பவாழ்வுக்குள்ளிருந்து, விடுதலைக்கான செயற்பாடுகளில் தம்மை வருத்திஈடுபட்டவர்கள். போராளிகள் ஒரு கட்டுப்பாடுமிக்க அமைப்பில், தம்மை அழிக்கவும், எந்த நேரத்திலும் இலட்சியத்துக்காக வீரச்சாவடையவும் தயாரானவர்கள்.

ஆனால் நாட்டுப்பற்றாளர்கள் ஒரு குடும்பத்து அமைப்புக்குள் வாழ்ந்துகொண்டிருந்தவர்கள். தமது பிள்ளைகளுக்காகவோ, தமது சகோதரிகளுக்காகவோ, தமது துணைவிக்காகவோ வாழ்ந்துகொண்டும், உழைத்துக்கொண்டும் இருந்தவர்கள். எமது விடுதலைக்கான அனைத்து வகையான வேலைத்திட்டங்களிலும் இத்தகைய நாட்டுப்பற்றாளர்களின் தியாகம் நிறைந்தே காணப்படுகின்றது. விடுதலைக்கான ஒரு அரசியல்பரப்புரையில் இருந்து விடுதலை போராட்டத்தின் தடைக்கற்களை அகற்றும் நடவடிக்கையின் மூலத்தை பாதுகாத்து வைத்திருந்ததுவரை தமிழீழ நாட்டுப்பற்றாளர்களின் வரலாறுகள் மிகமிக ஆழமானது. ஒரு விடுதலைப் போராட்டத்தின் முக்கிய இயங்குசக்தியே இவர்கள்தான். இன்றும், தாயகத்திலும், வேறு எங்கேனும் எமது நாட்டுப்பற்றாளர்கள் காத்துக்கொண்டிருப்பார்கள். தமது போராளிப்பிள்ளைகள் வருவார்கள் அவர்களின் வழித்தடத்துக்கு வெளிச்சம் இட்டபடிமுன்செல்வோம் என நாம் அனைவரும் நாட்டுப்பற்றாளர்களாக மாறும் ஒரு பொழுதில் எமது விடுதலை மிகவும் அண்மித்துவிடும். தமிழீழ நாட்டுப்பற்றாளர்களையும், அவர்களின் சுவடுகளையும் என்றும் நெஞ்சில் நிறுத்தி எழுவோம்.

நன்றி - ஈழமுரசு - தமிழ்க்கதிரிலிருந்து

Edited by nochchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.