Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஏற்றுக்கொண்டார் சிறிலங்காவின் அமைச்சர் சந்திரசிறி கஜதீர!

Featured Replies

போரின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஏற்றுக்கொண்டார் சிறிலங்காவின் அமைச்சர் சந்திரசிறி கஜதீர!

வன்னியில் இடம்பெற்ற போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை என சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட அமைச்சர்கள் பலரும் கூறிவருகின்ற நிலையில், இப்போரின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டதை சிறிலங்காவின் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர ஏற்றுக் கொண்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின் போது உயிரிழந்தவர்களின் உயிர்களை தம்மால் திருப்பிக் கொடுக்க முடியாதிருப்பினும், அவர்களின் உடமைகளுக்கான நஷ்டஈடு மற்றும் கடன் உதவிகளை தாம் வழங்கி வருவதாகவும் சிறிலங்காவின் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா படைத்தரப்பால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்வு இன்று (29.05.11) காலை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்நிகழ்வில் உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

'கடந்தகாலப் போரின் போது பாதிக்கப்பட்ட மக்களுடைய வாழ்வியலை கட்டியெழுப்புவது மிகப்பெரிய சவாலாகும். அதை நாம் வெற்றிகரமாக நிறைவேற்றுவோம். அவர்கள் இழந்த சொத்துக்களை மிக விரைவில் வழங்குவதற்கு எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலும், போருக்குப் பின்னரான அபிவிருத்தி என்பது மிகவும் கடினமான ஒன்றாகும். விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கான உதவித் திட்டங்களை எங்களது அரசாங்கம் வழங்கி வருகின்றது.

புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள முன்னாள் போராளிகளை பராமரிப்பதற்கு என மாதாந்தம் 100 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிடுகிறது. முன்னாள் போராளிகளுக்காகவும், அவர்களின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை கட்டி எழுப்புவதற்காகவும் எமது அமைச்சு பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. யாழ்ப்பாணத்தில் என்றுமில்லாதவாறு பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவது உலகம் அறிந்த உண்மை' என அவர் தனதுழைரயில் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் ஆயிரம் பேருக்கு இலகு கடன் திட்டமாக காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 6ஆம் திகதி கிளிநொச்சியில் ஆயிரம் பேருக்கு 2.5 மில்லியன் ரூபா இலகு கடன் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், சிறிலங்காவின் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் திஸநாயக, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் போராளிகளும் கலந்து கொண்டனர்.

விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு புனர்வாழ்வின்போது பல்வேறுபட்ட தொழில் பயிற்சிகள் வழங்கப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் கூறிவருகின்ற போதிலும், அவர்;களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில் எத்தகைய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

அதேவேளை, சிறிலங்கா படைத்தரப்பால் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் போராளிகளின் விபரங்களை வெளியிடுமாறு சர்வதேச மனிதவுரிமை அமைப்புகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் சிறிலங்கா அரசாங்கம் அவ்விபரங்களை இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={D615961D-741A-48AF-B849-74BC295DE9F2}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.