Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக அதிபர் ராஜபக்சேவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவது இல்லையாம் ரணில் சென்னையில் தெரிவிப்பு !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Monday, 2011-05-30 07:10:04]

இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ரனில் விக்கிரம சிங்கே நேற்று இரவு 11.30 மணிக்கு கொழும்பில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஐ.நா. சபையின் கிரிமினல் கோர்ட்டில் இலங்கை உறுப்பு நாடாக இல்லை. இது தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கை அரசு கையெழுத்தும் போடவில்லை. எனவே இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக அதிபர் ராஜபக்சேவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவது இல்லை. இதில் விசாரணை தான் நடந்து வருகிறது.

இலங்கையில் தமிழர்கள் மறுகுடியமர்த்தும் பணிக்காக இந்திய அரசு வழங்கிய ஆலோசனையின் பேரில் இந்தியா-இலங்கை வெளியுறவுதுறை மந்திரிகள், செயலாளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தன்னை சந்திக்க வருமாறு எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். இது மகிழ்ச்சி அளிக்கிறது. ஓரிரு தினங்களில் அவரை சந்திப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.

source:seithy.

Edited by tamil arasu

ஐ.நா. சபையின் கிரிமினல் கோர்ட்டில் இலங்கை உறுப்பு நாடாக இல்லை. இது தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கை அரசு கையெழுத்தும் போடவில்லை. எனவே இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக அதிபர் ராஜபக்சேவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப் போவது இல்லை. இதில் விசாரணை தான் நடந்து வருகிறது.

இலங்கை ஐ.நா. வில் ஒரு அங்ககத்துவ நாடு, அப்படி இருக்கையில், " ஐ.நா. சபையின் கிரிமினல் கோர்ட்டில் இலங்கை உறுப்பு நாடாக இல்லை" என்பது புதிதாகவும், புதிராகவும் தெரிகின்றது.

கையெழுத்திடாதவன் கொலை செய்யலாம் ரணில் புலம்பல்

சிறீலங்கா போன்ற ஓர் இனப்படுகொலை அரசு எப்படி போர்க்குற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து வைக்கும். அது கையெழுத்து வைக்காமல் இருந்ததே அதன் ஒழுக்கக் கேட்டின் அடையாளமாகும். இதே ரணில் சொல்வதை படியுங்கள் :

போர்க்குற்ற விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இலங்கை எதிர்க் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா தன்னை வந்து சந்திக்குமாறு அழைப்பு விடுத்திருப்பதாகவும் விரைவிலேயே சந்திக்கமுடியும் என்று தான் நம்புவதாகவும் கூறியிருக்கிறார்.

இந்தியா வந்துள்ள ரணில் நேற்றிரவு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது இலங்கையிலுள்ள தமிழர்களின் மறுவாழ்வு குறித்து இந்திய அரசு அக்கறையுடனிருப்பது தனக்குத் தெரியும் என்றும், தானும் அது பற்றிய பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றுவருவதாகவும் கூறினார்.

விடுதலைப்புலிகளுடனான மோதல்களின் இறுதிக் கட்டத்தில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை தேவை என்ற கோரிக்கை குறித்துக் கேட்டபோது, இலங்கையர் எவரும் போர்க் குற்றத்திற்காக தண்டிக்கப்படாது என்பதில் இலங்கை மக்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் இருக்கின்றனர் என்றும் தவிரவும் போர்க்குற்றங்கள் விசாரிப்பது குறித்த உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திடவில்லை என்பதால் இலங்கை நிகழ்வுகள் குறித்து விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் குறிப்பிட்டார்.

http://www.alaikal.com/news/?p=72331

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.