Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவுகளை இழந்தோர் நீதி கேட்பதுவும் மறுக்கப்பட்ட உரிமை-யை கோருவதும் இனவாதமா?

Featured Replies

யுத்தத்தால் இழப்புக்களைச் சந்தித்த தமிழ் மக்கள் தமக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கேட்பதும் தமது நிலங்கள் அபகரிக்கப்படுவது தொடர்பில் சுட்டிக்காட்டி உரிமையைக் கேட்பதும் இனவாதம் அல்ல என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்நாட்டை மாறி மாறி ஆட்சி புரிந்து புரிந்து வருகின்ற சிங்கள அரசுகளே இனவாத

சிந்தனையோடு செயற்பட்டு வருவதாகவும் இதனை இன்றைய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தமிழர் உரிமை தொடர்பில் சிங்கள அரசுகளின் ஏமாற்றுச் சதிகளும், ஒப்பந்தங்-கள் கிழித்தெறியப்பட்டு தீர்வுக்கான சுமூக வழிகள் சீரழிக்கப்பட்டமையுமே ஆயுதப் போராட்டத்துக்கான விதிகளை வகுத்ததே தவிர பிரபாகரனோ அல்லது விடுதலைப் புலிகளோ சுயாட்சி என்ற திட்டத்தை முன்வைக்கவில்லை என்பதை வரலாறு மறந்தவர்களுக்கு மீண்டும் ஞாபகபடுத்த விரும்புவதாகவும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

யுத்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வுகளின் போது ஜனாதிபதியினால் ஆற்றப்பட்ட உரையின் சில விடயங்-கள் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், பழைய விடயங்-கள் கிளறப்படுவதாகவும் இனங்களுக்கிடையில் குரோதங்களை வளர்க்க வழி வகுக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி கூறியிருக்கின்றார். மேலும் இனவாதம் பரப்பப்படுவதாகவும் அவரால் கூறப்பட்டுள்ளது. உண்மையில் தமிழ் மக்களிடத்தில் இன- வாதம் என்ற போக்கு இல்லையென்பதை முதலிலேயே கூறி வைக்க விரும்புகிறோம்.

இந்நாடு சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே தமிழ் மக்களுக்கு பிரச்சினை இருந்து வருகின்றது. இதனைத் தீர்ப்பதற்காக எமது முன்னைய தலைவர்கள் அரும் பாடுபட்டதை வரலாறு தெரிந்தவர்கள் மறந்திருக்க முடியாது.

தமிழர் பிரச்சினைக்கான தீர்வுகளை எட்டுவது தொடர்பில் டட்லி -- செல்வா ஒப்பந்தம் வரையப்பட்டன. எனினும் அந்த ஒப்பந்தங்கள் இனவாதப் போக்குடையவர் களாலேயே கிழித்தெறியப்பட்டன.

இதன் பின்னரும் எமது உரிமைகளுக்கான நியாயம் கிடைக்கப் பெறாததையடுத்தே தனிஈ-ழம் தொடர்-பான வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தமிழர் உரிமை, தனிஈழம், சு-யாட்சி போன்ற எண்ணக்கருக்கள் தந்தை செல்வாவினாலேயே தோற்றம் பெற்றன.

இதன் பின்னரும் எமது உரிமைகள் மாறி மாறி வந்த அரசாங்கங்களால் மறுக்கப் பட்டு ஒடுக்கப்பட்டு வந்தன. இதுவே ஆயுதக் குழுக்கள் உருவாவதற்கான வழிகளை வகுத்தன. இந்த ஆயுதக் குழுக்கள் ஏற்கெனவே உரிதித்ததான உரிமைகளுக்காகவே போராடினவே தவிர வேறு எந்தவொரு கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை. அதேபோல் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் கடந்த இரண்டு வருட காலத்துக்கு முற்பட்ட காலம் வரையில் போராடியதும் இதற்காகவேயாகும்.

பிரபாகரனாலோ அல்லது விடுதலைப் புலிகளாலோ எந்த ஒரு தனிப்பட்ட கோரிக்கைகளும் முன் வைக்கப்பட்டிருக்கவில்லை என்பதை மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.

இந்நிலையில் இனவாதிகள் பிரிவினை வாதிகள் கேட்பதை கொடுப்பதற்கு நாம் தயாரில்லை என்று ஜனாதிபதி கூறுவதானது எந்த வகையைச் சேர்ந்துள்ளது என்பது தெரியாது.

இந் நாட்டின் இனவாதிகள் பிரிவினை வாதிகள் யார் என்பதை அரசாங்கமும் ஜனாதிபதியும் முதலில் கண்டறிய முற்பட வேண்-டும். தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் நாம் இனவாதிகளும் இல்லை, பிரிவினை வாதிகளும் இல்லை.

எமக்கே உரிய கலை, கலாசாரத்துடன் ஏனைய சமூகத்தினரைப் போல் எமது நிலங்களில் வாழ விரும்புகி-றோம். இது மறுக்கப்படுவதால்தான் வாய் விட்டு கேட்க வேண்டியுள்ளது. தமக்கு மறுக்கப்படுகின்ற உரிமைகள் கிடைக்கப் பெற வேண்டும் என்று வாதிடுவது இனவாதமாகிவிடுமா என்று கேட்க விரும்புகிறோம்.

எமது உரிமைகளை எவருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது. அதனைப் பெறுவதற்கு நாம் போராடிக் கொண்டுதான் இருக்க வேண்டியுள்ளது. இறுதி யுத்தம் தொடர்பிலும் அங்கு இடம்-பெற்ற பல ஆயிரம் தமிழர்கள் கொலை மற்றும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனமை தொடர்பிலும் இன்று சர்வதேசமே கேள்வியெழுப்பியிருக்கின்றது.

இறுதி யுத்தத்தில் தாய் - தந்-தையரை இழந்த பிள்ளைகள், கணவனை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவன், பிள்ளை-களை இழந்த பெற்றோர் மற்றும் சகோதரர்களை இழந்தவர்கள், உறவுகளை இழந்தவர்கள் என பல்லாயிரக் கணக்கானோர் தமக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி நிற்பதுதான் இனவாதமா? அந்த கோரிக்கைதான் மக்களிடையே குரோதத்தை ஏற்படுத்தி விடப் போகின்றதா என்றும் கேட்க விரும்புகிறோம்.

இழப்புக்களை சந்தித்த தமிழ் மக்களின் கோரிக்கையின் பிரகாரம் அவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டியதே அர-சாங்கத்தின் கடப்பாடாகும். அது மறுக்கப்படுகின்ற நிலைமையே இங்கு இனவாதமாக காணப்படுகின்றது.

யுத்தத்தின் பின்னரான நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தெளிவாக ஏற்று அதற்கேற்ற வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளாதுவிடின் தேசிய ஒற்று-மை, நல்லிணக்கம் என்பது ஒருபோதும் சாத்தியப்படாத விடயமாகும்.

இன்று வடக்கு கிழக்கைப் பொறுத்த வரையில் அங்கு தமிழர்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு இராணுவப் பிரசன்னங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

பௌத்த பிக்குகளாலும், அமைச்சர்களாலும் இன்னும் இராணுவத்தினராலுமே இந்த நில அபகரிப்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வகையான நில அபகரிப்பினை நிறுத்திக்கொள்ளுமாறும் தமிழர்களுக்கு சொந்தமான நிலங்களை அவர்களுக்கு திருப்பிக் கொடுத்து விடுமாறும் கோருவதனைத்தான் இந்த அரசு இனவாதம் என்று கூறுகின்றதா?

உண்மையாகவே கூறுவோமானால் தமிழ் மக்கள் இனவாதம் பேசவில்லை.அவர்கள் இனவாதிகளும் இல்லை. மாறாக சிங்கள அரசு-களே இனவாத சிந்தனையைப் பரப்பி வருகின்றன. இனவாத செயற்பாடுகளிலும் இறங்கியிருக்கின்றன. இது எதிர்கால இலங்கைக்கு மிகக் கடினமான தருணங்களையே உருவாக்கும் என்றார்.

http://akkinikkunchu.com/new/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.