Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பா தாண்டி மணக்கும் ஐ.தே.கவின் அம்மண அரசியல்..

Featured Replies

ஐரோப்பா தாண்டி மணக்கும் ஐ.தே.கவின் அம்மண அரசியல்..

ஐ.நாவை மதிப்பதா இல்லை அதை மதிக்காத ரணிலை மதிப்பதா..?

சிங்கள அரசியலில் ஏறத்தாழ செல்லாக்காசாகிவிட்ட ஐ.தே.க இப்போது இனவாதமே ஒரே வழி என்ற இடத்திற்கு மறுபடியும் வந்திருக்கிறது.

சமீபத்தில் ஐ.தே.க கூறியிருக்கும் மூன்று முக்கிய கருத்துக்கள் போருக்குப் பின்னும் அக்கட்சி புதிதாக எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதைத் தெட்டத்தெளிவாகக் காட்டுகின்றன.

01. தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வில் போலீஸ் சேவையை வழங்குவதை ஐ.தே.க எதிர்க்கும் என்று சென்ற வாரம் கரு.ஜெயசூரியா கூறியிருந்தார்.

02. போர்க்குற்ற விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், தாம் அனைவரும் ஒன்றுபட்டு அதை எதிர்ப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்கா நேற்று கூறியுள்ளார்.

03. சிறீலங்கா என்ற நாடு தன்னைப் போர்க்குற்ற நீதிமன்றில் பதிவு செய்யவில்லை ஆகவே அந்த நாட்டை யாரும் விசாரிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

இந்த மூன்று விடயங்களும் போதும் ஐ.தே.க எந்த இடத்தில் இருக்கிறது என்பதை விளங்க..

உண்மையில் ஐ.தே.க இனவாத கட்சிதான், ஆனால் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற லட்சக்கணக்கான மக்களின் படுகொலைக்குப் பின்னரும் அக்கட்சி இனவாதம்; செய்யப் புறப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது நமக்கு கோபம் வரவில்லை வெட்கம் வெட்கமாக வருகிறது..

ஏனடா அந்த நாட்டில் பிறந்தோம் என்று அவமானமாக இருக்கிறது..

ரணிலிடம் ஒரு கேள்வி..?

போர்க்குற்ற நீதிமன்றில் பதிவு செய்யாத காரணத்தால் ஒரு கொலைகாரன் நிரபராதி ஆகிவிட முடியுமா..?

இல்லை

கொலை செய்த எல்லோரும் ஒன்றுபட்டு நின்றால் கொலைஞர்கள் நிரபராதிகளாகிவிட முடியுமா..?

சின்னக் குழந்தைகூட உங்கள் கருத்தைக் கேட்டால் காறித்துப்பும்..!

ஏன் இப்படியான இழி நிலைக்கு போயுள்ளது ஐ.தே.க ..? சிங்கள மக்கள் மீது உண்மையான விருப்பம் கொண்ட கட்சியா அது..?

இப்படியொரு கோணத்தில் சிந்தித்தால், ஐ.தே.க என்ற செக்கு மாட்டுக்குப் பக்கத்தால் ஓடி நாமும் இன்னொரு செக்கு மாடாகிவிடுவோம்.

சரி விடுங்கள்..

ஐ.தே.கவிற்கு இப்போது இனவாதம் பேச வேண்டிய தேவை என்ன ?

சிங்கள இனவாதம் பேசினாலே மறுபடியும் ஆட்சிக்கு வர முடியும், கட்சித் தலைமையை பெற முடியும் என்று சஜித் பிரேமதாச புதிய வியூகம் வகுக்கக் தொடங்கிவிட்டார். தமிழர்களுடைய இனப்பிரச்சனை குறித்து எதுவும் பேசாது சிங்கள பெரும்பான்மை வாக்கு வங்கியை மகிழ்வூட்டும் கருத்துக்களை கூறிவருகிறார்.

சஜித் பிரேமதாசவும், ரணிலைப் போலவே ஆற்றல் குன்றிய தலைவர்தான். அதனால்தான் இருவருமே இனவாதம் பேசுவதில் போட்டா போட்டி போடத் தொடங்கியுள்ளார்கள்.

ஆனால் இவர்களால் இனவாத மன்னன் மகிந்தவை வெல்ல முடியுமா.? இனவாத அம்மணத்தை திறந்து காட்டுமளவிற்கு அடி மட்டத்திற்குப் போகாமல் மகிந்தவை வெல்ல முடியாது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றுயிராகவும், இரத்தக் குளத்திலும் கிடக்க, ஒரு தேசிய இனத்தையே சிறையில் அடைத்துவிட்டு, யாழ்ப்பாணம் போய் புத்தவிகாரை அமைத்த மகிந்த ராஜபக்ஷவை விட மோசமான சிங்கள பௌத்த இனவாதிகளாக தம்மைக் காட்ட இவர்களால் முடியுமா..?

இனி இவர்களுக்கு போட்டியாக மகிந்த ராஜபக்ஷ வேடம் போட ஆரம்பித்தால் அந்த நச்சுச் சுழர்ச்சி எங்கே போகும்…?

இதுவா இப்போது அந்த நாட்டிற்குத் தேவை..?

இதுவா போருக்குப் பின் நீங்கள் கற்றுக் கொண்ட பாடம் ..?

நீங்கள் செய்வது எவ்வளவு பெரிய தவறு என்பதைக் காட்ட இதோ மேலும் ஓர் எளிய உதாரணம் !

அன்று, நாசிச கொள்கையை வகுத்து, ஆரிய இனவாதம் பேசி இரண்டாம் உலக யுத்தத்திற்கு காரணமானவன் சர்வாதிகாரி ஹிட்லர்.

இரண்டாவது உலக யுத்தம் முடிந்த உடனேயே அவன் பேசிய நாசிசத்தை மறுபடியும் ஜேர்மனியர்கள் பேசியிருந்தால் உலகம் என்னவாகியிருக்கும்…? அதைப்போல கேவலம் எங்காவது இருந்திருக்க முடியுமா..?

அது மட்டுமா..?

நாசிசத்தை வென்றுவிட்டு தேர்தலுக்கு வந்த வின்ட்சன் சேர்ச்சிலுக்கு என்ன நடந்தது..? அவரையும் தேர்தலில் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பினார்கள் இங்கிலாந்து மக்கள். போரில் தோல்வியடைந்த கொள்கைகளை மட்டுமல்ல வெற்றிபெற்ற கொள்கைகளைக்கூட மறுபடியும் பேசக்கூடாது என்பதை தெட்டத் தெளிவாக உணர்த்தினார்கள்.

இந்தச் சின்ன விடயத்தைக்கூட அறியாமல் மறுபடியும் இனவாதம் பேசுகிறீர்களே.. இது நீதியா..? உங்களுக்கு இது வெட்கமான செயலாகத் தெரியவில்லை..?

சிங்கள இனவாதம் போரை உருவாக்கிய ஒரு கொள்கை.. அது தோல்வியடைந்த கொள்கை..!

வன்னியில் நடைபெற்ற போர் புலிகளின் தோல்விமட்டுமல்ல சிங்கள இனவாதத்தின் படுதோல்வியும்கூடத்தான்.

அதை மறுபடியும் பேசுவது மாபெரும் குற்றச் செயல்..

போர்க்குற்றத்தைவிட மாபெரும் குற்றம்.. மன்னிக்க முடியாத குற்றம் !

இந்த நேரத்தில்.. இப்படியான கருத்துள்ள ரணிலை ஜெயலலிதா சந்திப்பது நல்லதா..?

ரணிலை சந்திக்க முடியாது என்று அறிவித்து ஐ.நாவின் அறிக்கைக்கு மதிப்பு கொடுப்பது நல்லதா?

செல்வி ஜெயலலிதா ஆழமாக சிந்திக்க வேண்டும்..

அதேவேளை..

ரணிலும், ஐ.தே.கவும் நடாத்தப் புறப்பட்டுள்ள அம்மண அரசியலை முகர வேண்டிய தேவை தமிழருக்கு இனி இல்லை.. இதைத் தமிழ் மக்கள் ரணிலுக்கு செருப்பால் அடித்தது போல முகத்துக்கு முகம் வெளிப்படையாக சொல்ல வேண்டும்.

மிஸ்டர் ரணில் தமிழர்கள் ஏமார்ந்த காலம் முள்ளிவாய்க்காலுடன் முடிந்துவிட்டது..

நல்லூரில் ரணிலுக்கு பூமாலை போட்ட தமிழர்கள் இப்போது அது குரங்கின் கை பூமாலை என்பதை தெரிந்திருப்பார்கள்..

தமிழா உனக்கு மானம் வெட்கம், சூடு, சொரணை எதுவும் இல்லையா..?

இப்படி எத்தனை பேருக்கு இன்னமும் மாலை போடப்போகிறாய்..?

http://www.alaikal.com/news/?p=72346

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.