Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் மாநகரசபையின் அமர்வுகளில் உதயன் நாளிதழ் செய்தி சேகரிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது -

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாநகரசபையின் அமர்வுகளில் உதயன் நாளிதழ் செய்தி சேகரிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது -

02 ஜூன் 2011

யாழ்ப்பாணம் மாநகரசபையின் அமர்வுகளில் உதயன் நாளிதழ் செய்தி சேகரிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகரசபை அங்கத்தவர் ஒருவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். யாழ் மாநகரசபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பு சட்டத்தரணியும் மாநகரசபை அங்கத்தவருமான முடியப்பு றெமீடியஸ் என்பவரே மாநகரசபை முதல்வருக்கு மனு ஒன்றை இன்று சமர்ப்பித்திருக்கின்றார்.

திட்டமிட்டவகையில் மாநகரசபை நிர்வாகத்திற்கும் தனக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் உதயன் நாளிதழ் செய்திகளைப் பிரசுரித்து வருவதாகவும் தமது கருத்துகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி வழங்க உதயன் மறுப்பதாகவும் முடியப்பு றெமீடியஸ் குற்றஞ்சாட்டி யிருக்கின்றார்.

அண்மைக்காலமாக நடைபெற்று வருகின்ற மாநகரசபையின் சர்ச்சைக்குரிய கூட்டங்களுக்கு முடியப்பு றெமீடியஸ் பங்குபற்றாது காய்வெட்டியே வருகின்றார். பெரும்பாலும் கூட்டத்தொடர்கள் முடிகின்ற நேரத்திலேயே கையொப்பமிடுவதற்காக மட்டுமே முடியப்பு றெமீடியஸ் அங்கு ஆஜராகி வருகின்றார். இந்நிலையில் கடந்த மாநகரசபைக் கூட்டத்திலும் முள்ளிவாய்க்காலில் மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டத்திலும் முடியப்பு றெமீடியஸ் ஆஜராகியிருக்கவில்லை.

இது தொடர்பாக உள்ளுர் நாளிதழாளன உதயன் செய்தியை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் தாம் அங்கு அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பாக மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணைகளுக்காக அவர்கள் சார்பில் ஆஜராகியிருந்ததாகவும் இதனாலேயே அன்றைய தினம் அமர்வுகளுக்கு ஆஜராக முடியவில்லை எனவும் தான் உதயன் நாளிதழுக்கு அறிவித்ததாகவும் முடியப்பு றெமீடியஸ் தெரிவிக்கின்றார்.அவர்கள் தனது உண்மைச் செய்தியை மறைத்து விட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள முடியப்பு றெமீடியஸ் இவ்வாறான சந்தர்ப்பங்களில் உதயன் நாளிதழ் திட்டமிட்ட வகையில் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாகவும் இதனால் மாநகரசபையின் அமர்வுகளில் உதயன் நாளிதழ் செய்தி சேகரிக்க அனுமதிக்கக் கூடாது என ஒன்றை சமர்ப்பி;த்துள்ளார்.

gtbc

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.