Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளக அரசியலில் சீரழியும் தமிழினம்

Featured Replies

உள்ளக அரசியலில் சீரழியும் தமிழினம் _

தமிழ் மக்களிடையே தற்போது உள்ள உள்ளக சுயநல அரசியல் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் துவம்சம் செய்து கொண்டிருக்கின்றது.

வடக்கு, கிழக்காகட்டும் மலையகமாகட்டும் ஒட்டு மொத்தத் தமிழினத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கப் புறப்பட்ட அரசியல் தலைமைகளின் உள்ளக சுயநல அரசியலால் இந்த நிலைமை இன்று உருவாக்கியுள்ளது.

"தடி எடுத்தவன் எல்லாம் தண்டக்காரன்'' என்ற வகையில் அரசியல் நடத்தப் புறப்பட்டவர்களே இன்றைய இந்த நிலைக்குக் காரண கர்த்தாக்களாக உள்ளனர். மக்களோ மனதுக்குள் அழுது கொண்டு மௌனித்துப் போய் உள்ளனர். முள்ளிவாய்க்காலுடன் தமிழ் மக்களின் தலைமைத்துவத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டுள்ள இவர்களின் அரசியல் குறித்து, கேள்வி எழுப்ப முடியாத நிலையிலும் தமிழ் மக்கள் உள்ளனர்.

தமிழ் மக்களின் மௌனமும், இயலாத்தன்மையும் சூழ்நிலைக் கைதியாக்கப்பட்டுள்ள நிலைமையையும் மக்களைப் பேசா மடந்தையாக்கியுள்ளது.

மனிதாபிமான படை நடவடிக்கையின் மூலம் மக்களை மீட்டதாகக் கூறுகின்ற அரசாங்கமும் மக்களுக்கு துணையாக இல்லை.

மனிதாபிமான படை நடவடிக்கைக்குத் துணை போனவர்களும், மக்களுக்கு விடிவையோ, விமோசனத்தையோ பெற்றுத்தரும் நிலையில் இல்லை.

எதற்கு ஆதரவளிப்பது என்ற விவஸ்த்தையே இல்லாது அரசாங்கம் கூறுகின்ற அனைவற்றிற்கும் ஆமாம் போடுவதிலும், அரசாங்கம் செய்வது அனைத்தும் நன்மைக்கே என அறிக்கையிடுவதிலும் இவர்கள் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளுக்காக நீதி கோரி நிற்கும் தருஸ்மன் அறிக்கையைக் கூட இவர்கள் தமது அரசியல் இலாபங்களுக்காக விட்டு வைக்கவில்லை.

இவ்வாறானவர்களின் கைகளிலேயே வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் தலைவிதி தீர்மானிக்கப்படுவதாகக் கூறப்படுவது வேடிக்கையாகவும் விந்தையாகவும் இருக்கின்றது.

அண்மையில் வடக்குக்குச் சென்றிருந்த புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழர் ஒருவரின் ஆதங்கத்தில் இதுவும் ஒன்று. உள்ளக சுயநல அரசியலால் சீரழிந்து கொண்டிருக்கும் வடக்கு, கிழக்கின் நிலைமை ஜீரணிக்க முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டதுடன், புலம்பெயர்ந்து வாழும் மக்கள் வடக்கில் முதலிடுவதற்குக் கூட தயங்குவதிலும் நியாயம் இருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

உள்ளக அரசியல், அதிகார உயர் பீடத்தினரின் போக்குக் காரணமாக புலம் பெயர் தமிழர்கள் வடக்கில் முதலீடு செய்ய முடியாதிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த விடயத்தை ஏற்கெனவே இந்தப் பத்தியில் நாம் குறிப்பிட்டதை இங்கு நினைவு கூருகின்றோம்.

புலம் பெயர் வாழ் தமிழர்களில் பலரைச் சந்தித்த போது, இலங்கையில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவிக்கும் அவர்கள் முதலிடுவதாயின், அதன் பெரும் பகுதியை அரசியல் மேல் மட்ட முதலைகளுக்குத் தீனியாக்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்தனர்.

உண்மையில், புலம்பெயர் தமிழர்களை சுதந்திரமாக முதலீடு செய்வதற்கு அரசாங்கம் அனுமதியை வழங்குமாக இருந்தால் வடக்கு, கிழக்கு நோக்கிப் புலம் பெயர் தமிழர்களின் முதலீடுகள் எவ்விதத் தடைகளுமின்றி வந்து சேரும். அதுமாத்திரமல்ல, உயிரிழந்து கிடக்கின்ற தத்தமது ஊர்களையும் புலம் பெயர் வாழ் தமிழர்கள் தத்தெடுத்து முன்னேற்ற முன்வருவர்.

வடக்கு, கிழக்கின் நிலைமை இதுவென்றால் மலையகமும் சுயநல அரசியலுக்குள் புதைந்து போய் முடக்கப்பட்டு முடங்கிக் கிடக்கின்றது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வையே முறையாகப் பெற்றுக் கொடுக்க முடியாத நிலையில் உள்ள மலையக அரசியல் தலைமைகள், மக்களின் அரசியல் உரிமைகளை எவ்வாறு வென்றெடுக்கும் என்பது கேள்விக்குறியே.

அது மாத்திரமல்ல, தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் கேசரி வார இதழில் ஆசிரியர் தலையங்கம் வெளியாகியிருந்தது.

இந்த ஆசிரியர் தலையங்கத்தைப் பார்த்து ஒரு பிரபல தொழிற்சங்கக் காரியாலயத்தில் இருந்து ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஆசிரியர் தலையங்கம் எழுதியது நீங்கள் தானே! நிறைய விடயங்களைக் குறிப்பிட்டுள்ளீர்கள். இன்று நடைபெறும் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு, சம்பள உயர் வைப் பெற்றுக் கொடுக்க வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார். தொழிற்சங்கவாதிகளின் வேலையை பத்திரிகை ஆசிரியரைச் செய்யுமாறு கூறுவது தர்மமா என்று தெரியவில்லை. இதனைத் தொழிலாளர்களின் கவனத்திற்கே விட்டு விடுகின்றோம். இது இவ்வாறிருக்க அரசாங்கம் கொண்டு வர உத்தேசித்திருந்த ஓய்வு ஊதியத்திட்டத்திற்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து எதிர்ப்பலைகள் எழும்பின. இறுதியில் சுதந்திர வர்த்தக வலயத்தில் எழுந்த எழுச்சி, அதன் விளைவால் எழுந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரொஷேன் சானக்கவின் உயிர்த்தியாகம் ஓய்வூதியத் திட்டத்தை வாபஸ் வாங்க வைக்கும் அளவுக்கு அரசாங்கம் சென்றுள்ளது. உண்மையில் இந்த ஓய்வூதியத்திட்டத்தால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி உள்ளவர்களில் மலையக தோட்டத் தொழிலாளர்களும் அடங்குவர்.

ஆனால், மலையகத் தொழிற்சங்க அரசியல் தலைமைகள் இது பற்றி பெரிதாக வாய் திறக்கவில்லை. ஏனெனில், பெரும்பாலானவர்கள் அரசாங்கத் தரப்புடன் அணிவகுத்திருப்பதைத் தவிர வேறு காரணம் இருப்பதாகத் தெரியவில்லை. வடக்கின் நிலைமைதான் இங்கும். மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமான் உயிருடன் இருக்கும் வரை, மலையக அரசியலில் ஒரு நம்பிக்கை தெரிந்தது. ஆனால், இன்று அந்த நம்பிக்கை கண்ணுக்கு ஒட்டிய தூரம் வரைத் தெரியவில்லை.

சுயநல அரசியல் கோலோச்சும் மலையகத்தில் மக்களைப் பற்றி கவனிப்பதற்கு எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. மொத்தத்தில் வடக்கு, கிழக்காக இருக்கட்டும் அல்லது மலையகமாக இருக்கட்டும், ஒட்டு மொத்தத் தமிழினமும் மாலுமி இல்லாத கப்பலில் பயணித்துக் கொண்டிருக்கின்ற.

வி.தேவராஜ்

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32050

  • தொடங்கியவர்

உள்ளக அரசியலில் சீரழியும் தமிழினம் _

வடக்கு, கிழக்கின் நிலைமை இதுவென்றால் மலையகமும் சுயநல அரசியலுக்குள் புதைந்து போய் முடக்கப்பட்டு முடங்கிக் கிடக்கின்றது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வையே முறையாகப் பெற்றுக் கொடுக்க முடியாத நிலையில் உள்ள மலையக அரசியல் தலைமைகள், மக்களின் அரசியல் உரிமைகளை எவ்வாறு வென்றெடுக்கும் என்பது கேள்விக்குறியே.

அது மாத்திரமல்ல, தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் கேசரி வார இதழில் ஆசிரியர் தலையங்கம் வெளியாகியிருந்தது.

இந்த ஆசிரியர் தலையங்கத்தைப் பார்த்து ஒரு பிரபல தொழிற்சங்கக் காரியாலயத்தில் இருந்து ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஆசிரியர் தலையங்கம் எழுதியது நீங்கள் தானே! நிறைய விடயங்களைக் குறிப்பிட்டுள்ளீர்கள். இன்று நடைபெறும் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு, சம்பள உயர் வைப் பெற்றுக் கொடுக்க வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார். தொழிற்சங்கவாதிகளின் வேலையை பத்திரிகை ஆசிரியரைச் செய்யுமாறு கூறுவது தர்மமா என்று தெரியவில்லை. இதனைத் தொழிலாளர்களின் கவனத்திற்கே விட்டு விடுகின்றோம். இது இவ்வாறிருக்க அரசாங்கம் கொண்டு வர உத்தேசித்திருந்த ஓய்வு ஊதியத்திட்டத்திற்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து எதிர்ப்பலைகள் எழும்பின. இறுதியில் சுதந்திர வர்த்தக வலயத்தில் எழுந்த எழுச்சி, அதன் விளைவால் எழுந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரொஷேன் சானக்கவின் உயிர்த்தியாகம் ஓய்வூதியத் திட்டத்தை வாபஸ் வாங்க வைக்கும் அளவுக்கு அரசாங்கம் சென்றுள்ளது. உண்மையில் இந்த ஓய்வூதியத்திட்டத்தால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி உள்ளவர்களில் மலையக தோட்டத் தொழிலாளர்களும் அடங்குவர்.

ஆனால், மலையகத் தொழிற்சங்க அரசியல் தலைமைகள் இது பற்றி பெரிதாக வாய் திறக்கவில்லை. ஏனெனில், பெரும்பாலானவர்கள் அரசாங்கத் தரப்புடன் அணிவகுத்திருப்பதைத் தவிர வேறு காரணம் இருப்பதாகத் தெரியவில்லை. வடக்கின் நிலைமைதான் இங்கும். மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமான் உயிருடன் இருக்கும் வரை, மலையக அரசியலில் ஒரு நம்பிக்கை தெரிந்தது. ஆனால், இன்று அந்த நம்பிக்கை கண்ணுக்கு ஒட்டிய தூரம் வரைத் தெரியவில்லை.

சுயநல அரசியல் கோலோச்சும் மலையகத்தில் மக்களைப் பற்றி கவனிப்பதற்கு எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. மொத்தத்தில் வடக்கு, கிழக்காக இருக்கட்டும் அல்லது மலையகமாக இருக்கட்டும், ஒட்டு மொத்தத் தமிழினமும் மாலுமி இல்லாத கப்பலில் பயணித்துக் கொண்டிருக்கின்ற.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 750 ரூபா சம்பளம் வழங்க வலியுறுத்தல்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 750 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என மலையக தொழிற்சங்கங்கள் பல இன்று ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தியுள்ளன. தொழிலாளர்களின் சம்பளம் 500 ரூபாவாக அதிகரிக்கப்படும் என முதலாளிமார் சம்மேளனத்துடனான கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்கங்களில் ஒன்றான இ.தொ.கா. அறிவித்துள்ளது.

எனினும் இதில் கையெழுத்திடாத தொழிற்சங்கங்களான ஜே.வி.பி. தலைமையிலான அகில இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், ஜனநாயக மக்கள் முன்னணி தலைமையிலான ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், பி. திகாம்பரம் எம்.பி. தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம், எஸ்.சதாசிவம் தலைமையிலான இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி ஆகியன 750 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தியுள்ளன.

750 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படாவிடின் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அகில இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களைப் போல் தோட்டத் தொழிலாளர்கள் ஏமாந்துவிடக் கூடாது எனக்கூறிய அவர், சில தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை ஏமாற்றும் நடவடிக்கையை தொடர்ந்தும் மேற்கொள்ளக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/22561--750-.html

  • தொடங்கியவர்

தோட்டத்தொழிலாளர்களுக்கான நாட்சம்பளம் அதிகரிப்பு

கூட்டொப்பந்தத் தொழில்சங்கங்களுக்கும், முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையே இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பான புதிய கூடடொப்பந்தம் இன்று 6ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதற்கமைய, தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 380 ரூபா உட்பட நிபந்தனை கொடுப்பனவுகளுடன் 515 ரூபா சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்களான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பு என்பனவற்றின் பிரதிநிதிகளுக்கிடையில் இடம்பெற்றுவந்த பேச்சவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள மீளாய்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து புதிய கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு எம்மீது நம்பிக்கை வைத்திருந்து ஆதரவு தெரிவித்து வந்த தொழிலாளர்களுக்கு இந்தத்தருணத்தில் நன்றி கூறுகின்றேன். கடந்த முறை தோட்டத்தொழிலாளர்களுக்கு 405 ரூபா சம்பள உயர்வு பெற்றுக்கொடுத்தோம். அதன்படி 285 ருபா அடிப்படைச் சம்பளமாகவும் வேலை பூர்த்திக்கு 30 ரூபாவும் வருகை ஊக்குவிப்பு கொடுப்பனவாக 90 ரூபாவுமாக 405 ரூபா சம்பளத்தினைப் பெற்றுக்கொடுத்தோம்.

இம்முறை அடிப்படைச்சம்பளமாக 380 ரூபாவும் சம்பளத்துடன் பெறக்கூடிய 30 ரூபாவும் வருகை ஊக்குவிப்பாக 105 ரூபாவுமாக மொத்தமாக 515 ரூபா சம்பள உயர்வினைத் தோட்டத் தொழிலாளர்களுக்குப் பெற்றுக்கொடுத்துள்ளோம்.

அத்துடன் மேலதிகமாக பறிக்கப்படுகின்ற ஒவ்வொரு கிலோ கொழுந்துக்கும் 17 ரூபா வீதமும் மேலதிகமாக எடுக்கப்படுகின்ற இறப்பர் பால் கிலோ ஒன்றுக்கு 25 ரூபா வீதமும் பெறக்கூடிய வகையில் புதிய ஒப்பந்தத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த முறை மேலதிகமாக பறிக்கப்படுகின்ற கொழுந்து கிலோ ஒன்றுக்கு 12 ரூபாவும் மேலதிகமாக எடுக்கப்படுகின்ற இறப்பர் பால் கிலோ ஒன்றுக்கு 15 ரூபாவும் தொழிலாளர்கள் பெற்றமை குறிப்பிடத்தக்கது. புதிய சம்பளத்துக்கேற்ப நிலுவை சம்பளம் வழங்கப்படும். புதிய ஒப்பந்தம் தொடர்பில் சிலர் கேலிக்கூத்து செய்யலாம். எனினும் அவர்கள் இதைவிட கூடுதலாக பெற்றக்கொடுக்க முடிந்தால் பெற்றக்கொடுக்கலாம். அதேவேளை என்னை நம்புகின்ற தொழிலாளர்கள் இந்தச்சம்பளத்தினைப் பெற்றுக்கொள்வதோடு தேயிலைத் தொழிற்சாலைகளில் தேங்கிக்கிடக்கின்ற தேயிலைத் தூளினை கொழும்புக்கு இனிமேல் அனுப்ப தொடங்கலாம் என்றார்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் கடந்த 2009ஆம் ஆண்டு மேற்கொண்ட கூட்டொப்பந்தம் இவ்வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதியுடன் காலாவதியாகியமையைத் தொடர்ந்து புதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கடந்த இரண்டு மாதகாலமாக இடம்பெற்றுவந்தன. இதன்போது பேச்சுவார்த்தைத் தொடர்பிலான எந்தத் தகவல்களும் வெளியாகியிருக்கவில்லை. இந்த நிலையில் தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 500 ரூபாவும் அதனுடன் ஏனைய கொடுப்பனவுகளும் அடங்கலாக 700 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமெனக்கோரி கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

http://tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/22606-2011-06-06-12-12-03.html

  • தொடங்கியவர்

தோட்டத்தொழிலாளர்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளனர்: திகாம்பரம் எம்.பி

கூட்டொப்பந்தம் மூலமாக தோட்டத்தொழிலாளர்கள் மீண்டுமொருமுறை ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.

தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள கூட்டொப்பந்தம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தோட்டத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கேற்ப அவர்களின் அடிப்படைச் சம்பளமாக 500 ரூபா வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மலையகத்தில் நாம் பல்வேறு போராட்டங்களை நடத்தினோம்.

எனினினும் தோட்டத் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு இன்று ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் உட்பட கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்கள் தோட்டத் தொழிலாளர்களைக் காட்டிக்கொடுத்து துரோகம் இழைத்துள்ளன.

தோட்டத் தொழிலாளர்களின் சாபம் இந்தத் தொழிற்சங்கங்களின் முக்கியஸ்தர்களைச் சென்றடையத்தான் போகின்றது. இந்த நாட்டின் தற்போது வாழ்க்கைச் செலவுக்கேற்ப ஏனைய தொழிலாளர்கள் கணிசமான சம்பளத்தினைப் பெற்றுவருகின்றனர். அன்றாட கூலித்தொழிலாளர்கள் கூட நாட் சம்பளமாக 1000 ரூபாவைப் பெறுகின்றனர்.

ஆனால் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் 380 ரூபாவால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதென்பது வேதனைக்குரிய விடயமாகும். இந்தப்புதிய கூட்டொப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைக் கொடுப்பனவுகள் தோட்டக் கம்பனிகளுக்கு மீண்டும் பெருத்த இலாபத்தினைப் பெற்றுக்கொடுக்கப் போகின்றது.

விலைக்கேற்ற கொடுப்பனவான 30 ரூபாவையும் வருகை ஊக்குவிப்புக்கொடுப்பனவான 105 ரூபாவும் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு இம்முறை கிடைக்கக் கூடிய வாய்ப்பில்லை. தொடர்ந்து தோட்டத்தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படபோகின்றமையும் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காமல் தொழிலாளர்கள் அவதிப்படப் போவதையும் எம்மால் மாத்திரமே உணர்ந்து கொள்ள முடியும்.

ஏனென்றால் நாம் தொழிலாளர்களின் பிள்ளைகள். கூட்டொப்பந்தம் மேற்கொண்டவர்களுக்குத் தொழிலாளர்களின் வேதனை புரியாது என்பதை இந்தப்புதிய கூட்டொப்பந்தம் மீண்டுமொரு முறை உணர்த்தி உள்ளது. எனினும் தோட்டத் தொழிலாளர்களைக் காட்டிக்கொடுத்தவர்களுக்கு எதிரான எமது போராட்டம் தொடரும் என்றார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-16-25/22617-2011-06-06-15-51-37.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.