Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலேசியா தமிழர்களுக்கு…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியாவில் மட்டுமே தமிழ்ப் பள்ளிகள் என தனியாக இயங்கி வருகின்றன. மற்ற நாடுகளில் இரண்டாம் மொழியாகவோ அல்லது மூன்றாம் மொழியாகவோ தான் தமிழ் கற்கலாம். இது சுதந்திரத்தின் பொது ஆங்கிலேயர்கள் நமக்கு ஏற்படுத்தி சென்ற அல்லது வழங்கி சென்ற உரிமையாகும். மலேசியாவில் ஒரு காலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகள் இருந்தன. ஆனால் இப்பொழுது 523 பள்ளிகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இதில் அதி பெருன்பான்மை பள்ளிகள் Bantuan Modal எனும் அரசாங்கத்தின் முழு மானியம் பெறாதப் பள்ளிகள். ஆகவே இவற்றில் SKM ( Sekolah kurang Murid ) எனும் குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளின் எதிர் காலத்திற்காய் போராட வேண்டியுள்ளது. நாட்டில் ஒரு லட்சம் மாணவர்கள் தமிழ்ப்பள்ளியில் பயில்கிறார்கள், ஆனால் அதே வேலை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மாணவர்கள் மலாய் பள்ளியிலும் பயில்கிறார்கள். தமிழ் தெரியாதவர்களாய்.

இது வேதனைக்குரிய ஒன்று. அதனிலும் வேதனை என்னவென்றால் , தமிழ் பள்ளியில் இருந்து செல்கிற மாணவர்களில் 800 மாணவர்கள் மட்டுமே உயர்நிலைப் பள்ளியில் தமிழ் சோதனை எழுதுகிறார்கள். மற்றவாகள் எங்கே?ஏன் என்று வினவினால் தமிழ் கற்று என்ன ஆக போகிறது ? நான் தமிழைக் கற்று எந்த வேலை கிடைக்கும் என்ற கேள்வி எழுகிறது . நியாயமானதே ………. கற்பது,ஒரு தொழிலில் அமர்ந்து , கைநிறைய சம்பாதிக்க. இல்லை,தமிழ் சுவையானது, தேனினும் இனியது , கற்க கற்க இன்பரசம் இதை நான்கு ஆண்டுகள் கற்று பிறகு வேலைக்கு திண்டாடு என்பது சரியில்லை.

தமிழ் செழித்து வளர வேண்டும் என்றால் தமிழ் வணிக மொழியாக வேண்டும். அதற்கும் தமிழ் நாடு என்று ஒன்று இருந்தால் மட்டுமே வழி ஏற்படும். ஆம் தமிழர்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும். நிறைய மலேசியர்கள் தமிழ் ஈழ பிரச்சனை எதோ நமக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். ஒன்று மறந்து விட்டார்கள் .நாமும் புழம் பெயர் தமிழர்தாம் . இந்நாட்டிலும் சிங்கபுரிலும் நம்மை தமிழர் என்றுக் கூட கூறுவதில்லை பொதுவாக இந்தியர் என்றுதான் அழைக்கிறார்கள். நாமும் அதை ஏற்றுக்கொண்டோம். இன்று நமது ஈழ உறவுகளுக்கு ஏற்பட்ட நிலை நமக்கு ஏற்படாது என்று நம்மில் யாரேனும் உறுதியாக கூற முடியும்மா? நிச்சயமாக முடியாது. மலாய்காரர்களுக்கு எல்லாவற்றிலும் சிறப்பு சழுகைகள் வழங்கபடுவதால் தான் நாம் நிம்மதியாய் உறங்குகிறோம். 1963 மக்கள் தொகையில் மலைக்காரர்களின் அதிகப்

பெருன்பான்மைக்கு பாதகம் ஏற்படும் நிலையில் தான் மே 13 கலவரம் வெடித்தது. இப்போது நமது நிலை சட்டபடி நியாயமாக கிடைக்கபெற வேண்டிய உரிமைகளை கூட போராடி பெற வேண்டிய அவல நிலையில் நாம் இருக்கிறோம். போராட்டத்திற்கு பிறகு பிச்சை போடுவதைப் போல் சில சலுகைகள். வெறும் கண்துடைப்பிர்க்காய். இந்நிலை கல்விக்கு மட்டும் அல்ல கோவில்கள், வேலை வாய்ப்புக்கள் என அனைதிலும்மே.

சரி, தமிழ் நாட்டிற்கு அருகில் 50 ,௦௦௦ தமிழ் உறவுகள் செத்து மடிந்தனவே யாரால் தடுக்கவோ உதவவோ முடிந்தது? நம்மால் கண்டு மனம் வேகத்தான் முடிந்தது. நாளை நமக்கும் கேட்பாரில்லை. மறக்க வேண்டாம். தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இருந்தால் கேட்பது என்ன ………. அரணாக இருந்திருக்கும். தமிழ் ஈழ நாடு பிறந்தால் உலக தமிழர்களுக்கு மட்டும் அல்ல தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் உறுதுணை நிற்க்கும். யாழ் நுலகமும் அங்கு நடந்தேறிய உலக தமிழ் ஆராட்சி மாநாடும் அதற்க்கு சான்று. ஆகையால், தமிழ் ஈழ திருநாட்டின் உதயத்தை தோள்கொண்டு உயர்த்துவோம். அவர்களின் இலக்கை அடைய பக்க பலமாய் இருப்போம். நம் இனத்தின் எதிர்காலம் செழிக்க பாதை வகுப்போம் .

நாம் பணம் படைத்தவர் அல்லர் அனால் மனமுண்டு . அனைத்து தமிழர்களும் ஒரு மனதாய் நமது ஆதரவை தெரிவித்தால் போதுமானது. அதுவே நம் அரசாங்கத்தினை இலங்கை பிரச்சனையில் எந்த முடிவை எடுக்கவும, ஒரு முறைக்கு இரு முறை சிந்திக்க வைக்கும். இலங்கை அரசின் நயவஞ்சகதிற்கு துணை போகாது . நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தினை நம் நாடு ஏற்பதற்கு இது ஒரு முன் நகர்வாக இருக்கும்.

-மலைநாட்டு தமிழச்சி

Short URL: http://meenakam.com/?p=25990

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியா, சிங்கப்பூரில் தமிழ் படிப்பவர்கள் பெரும்பாலும் தமிழ் நாட்டு வம்சாவளித் தமிழர்கள். ஈழ வம்சாவளித்தமிழர்கள் பலர் தமிழை விட்டு சீனா மொழிகளைப் படிக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.