Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்கக்கோரும் மனு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[ திங்கட்கிழமை, 13 யூன் 2011, 08:57 GMT ] [ தி.வண்ணமதி ]

"ஆயுத மோதல்கள் தொடர்பான சட்டங்களின் அடிப்படையில் போர் சார் நடவடிக்கைகள் அனைத்தையும் குற்றவியல் நடவடிக்கைகள் என்றோ அன்றி பயங்கரவாதச் செயற்பாடுகள் என்றோ குற்றம் சுமத்திவிடமுடியாது" என்ற ஐ.நாவின் மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதத்திற்கான சிறப்புத் தூதுவர் கலாநிதி Kalliopi K. Koufa வினது கூற்று இந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் The sunday Leader உடகத்தில் வெளியிடப்பட்டிருக்கும் பேட்டியுடன் இணைந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

அதன் முழுவிபரமாவது,

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையானது சட்டவிரோதமானதும் அனைத்துலக சட்ட விதிகளுக்கும் முரணானது என ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் மனுவொன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அனைத்துலக மனிதாபிமான சட்டங்களின் பிரகாரம் மோதல்களில் எதிலும் தொடர்புபடாமல் இருக்கவேண்டிய கடமை ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இதன் அங்கத்துவ நாடுகளுக்கும் இருக்கிறது என விடுதலைப் புலிகளின் அனுதாபிகளால் தொடுக்கப்பட்டிருக்கும் இந்த மனு வாதிடுகிறது.

சிறிலங்காவில் போர் முடிவுக்குவந்துவிட்ட நிலையில் புலிகளுடன் தொடர்புபட்டிருந்த அனைவருக்கும் மன்னிப்பு வழங்கப்படவேண்டும் என இந்த மனுவில் கோரப்பட்டிருக்கிறது.

சுயநிர்ணய உரிமையினை இலக்காகக் கொண்டு ஒரு அரசுக்கும் அரசு சாராத் தரப்பிற்கும் இடையில் இடம்பெறும் ஆயுத மோதலொன்றில் மூன்றாவது நாடுகள் தலையிடுவதை அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்கள் தடுக்கிறது என இந்த மனுவில் வாதிடப்படுகிறது.

இந்த நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பினைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டமையானது இதுபோன்ற பிணக்கொன்றில் ஐரோப்பிய ஒன்றியமும் அதன் அங்கத்துவ நாடுகளும் தலையிடும் ஒரு நடவடிக்கையாகவே கருதமுடியும் என்கிறது இந்த மனு.

Council Common Position 2001/931/CFSP சட்டத்தின் சரத்து 1 (3)ன் பிரகாரம், விடுதலைப் புலிகள் அமைப்பினை ஒரு பயங்கரவாத அமைப்பாகக் கருதிவிடமுடியாது என ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது நீதிமன்றின் அங்கத்தவர்களிடத்திலும் அதன் தலைவரிடத்திலும் சமர்ப்பிக்கப்படவிருக்கும் இந்த மனுவில் வாதிடப்படுகிறது.

விடுதலைப் புலிகள் அமைப்பினைப் பயங்கரவாத அமைப்பாகக் கருதிவிடமுடியாத நிலையில் அந்த அமைப்பினைத் தடைசெய்யமுடியாது என விடுதலைப் புலிகள் சார்பில் வாதிடும் வழக்கறிஞர் விக்ரர் கோப் [Victor Koppe] கூறுகிறார்.

தேசிய குற்றவியல் சட்டங்களின் அடிப்படையில் விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளைக் குற்றமாகக் கருதிவிடமுடியாது எனவும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது 2009ம் ஆண்டு இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டுவிட்ட நிலையிலும் அது தற்போது சிறிலங்காவில் செயற்படுநிலையில் இல்லாத காரணத்தினாலும் Council Common Position 2001/931/CFSP சட்டத்தின் சரத்து 1 (6) பிரகாரம் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படவேண்டும் என இந்த மனு தொடர்ந்தும் வாதிடுகிறது.

"ஆயுத மோதல்கள் தொடர்பான சட்டங்களின் அடிப்படையில் போர் சார் நடவடிக்கைகள் அனைத்தையும் குற்றவியல் நடவடிக்கைகள் என்றோ அன்றி பயங்கரவாதச் செயற்பாடுகள் என்றோ குற்றம் சுமத்திவிடமுடியாது" என்ற ஐ.நாவின் மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதத்திற்கான சிறப்புத் தூதுவர் கலாநிதி Kalliopi K. Koufa வினது கூற்று இந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

குற்றவியல் சட்டங்களை ஆயுத மோதல்களுக்குப் பிரயோகிக்க முடியாது என வழக்கறிஞர் விக்ரர் கொப்போ வாதிடுகிறார். ஆனால், சட்டரீதியிலான படைத்துறைசார் இலக்கொன்றை அடைவதற்குத் தேவையான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு இராணுவத்தினர் அனுமதிக்கப்படுவர் என ஆயுத மோதல்கள் தொடர்பாக சட்டமூலம் கூறுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது பொதுமக்கள் இலக்குகள் மீதான தங்களது தாக்குதல்களைத் தொடர்ந்தமையினால் ஆயுத மோதல்கள் தொடர்பான சட்டங்களை இவர்கள் கையில் எடுக்கமுடியாது என வாதிடப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் போராட்டங்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையுத்தரவானது எந்தளவிற்குப் பாதித்திருக்கிறது என ஐரோப்பிய ஒன்றியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்த மனுவில் விலாவாரியாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தத் தடையுத்தரவினைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் அதிகாரிகளால் அடக்கப்படுவதாக இந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்கக்கோரி ஐரோப்பிய ஒன்றியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் மனு தொடர்பாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரிடம் கோரியபோது, குறித்த மனுவினைத் தாங்கள் ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.

"இந்த மனுவினை நாங்கள் ஆழமாக ஆராய்ந்தபின்னர் பொருத்தமான பதிலினை வழங்குவோம்" என்றார் அவர்.

விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டுவிட்ட பின்னரும் அவர்கள் மீதான தடை தொடரவேண்டுமா எனக் கோரப்பட்டது. இதற்குப் பதிலளிக்க மறுத்த வெளி விவகார அமைச்சின் பேச்சாளர், மனுவினை முழுமையாக ஆராயாமல் எந்தக் கருத்தையும் வெளியிட முடியாது என்றார்.

விக்ரர் கோப்புடனான [Victor Koppe] நேர்காணல்:

கேள்வி: ஐரோப்பிய ஒன்றியமானது விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டது சட்டவிரோதமானது என்கிறீர்கள். இருப்பினும் அனைத்துலகம் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாகக் கருதுகிறதே. ஐரோப்பிய நாடுகளில் புலிகள் திரட்டிய நிதி சிறிலங்காவில் இடம்பெற்ற போருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதுபோலத் தடையினை நீக்குவது, அனைத்துலக ரீதியில் பயங்கரவாத அமைப்பாகக் கருதப்பட்ட ஒரு அமைப்பு தனது இலக்கினை அடைவதற்கு வழிசெய்வதாக அமையாதா?

பதில்: இருபதாண்டுகளுக்கும் மேலாக தமிழர்களின் அறவழிப் போராட்டங்கள் கொடுங்கரங்கொண்டு அடக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஆயுதப் போராட்டத்தின் ஊடாக தேசிய சுய நிர்ணய உரிமையினை அடைவதற்காகவும் தமிழர்களுக்கான நீதியினைப் பெற்றுக்கொடுப்பதற்காகவும் 1976ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உருவெடுத்தது. 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டுவிட்ட நிலையில் அதனது அரசியல் துறையினர், வன்முறை சாராத, அறவழியிலான, அரசியல் வழிவகைகள் ஊடாக அதே இலக்கினை அடைய முனைகிறார்கள்.

சிறிலங்கா அரசாங்கத்துடன் அனைத்துலக இடைத்தரகுடன் அமைந்த அமைதி முயற்சிகள் ஊடாக அரசியல் வழித் தீர்வினைக் காணும் முனைப்புக்களில் ஈடுபட்டிருந்த வேளையில் 2006ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டமையானது அனைத்துலக சட்டங்களுக்கு அமைவாக முரணானது.

கேள்வி: விடுதலைப் புலிகள் மீதான தடை ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் அடக்குமுறைக்கு ஆளாவதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். எவ்வாறிருப்பினும், அண்மையில் இங்கிலாந்திலும் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் போராட்டங்களை நடாத்தியிருக்கிறார்களே. பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிடப்பட்டிருக்கும் புலிகள் அமைப்பினை கொடியினைப் பிடித்தவாறு பொது இடங்களில் தமிழர்கள் போராட்டம் நடாத்துவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழர்கள் எவ்வாறு எப்போது ஐரோப்பிய நாடுகளில் அடக்குமுறைக்கு ஆளானார்கள்?

பதில்: சிறிலங்காவில் தமிழர்கள் முன்னெடுத்த சட்டரீதியிலான உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவளித்தார்கள் [நிதிசார் ஆதரவு] என்ற ஒரே காரணத்திற்காக நெதர்லாந்திலும், ஜேர்மனியிலும், பிரான்சிலும், சுவிஸ்லாந்திலும் இத்தாலியிலும் தமிழர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்ற உண்மை இதுபோன்ற போராட்டங்களால் மாறிவிடப்போவதில்லை.

கேள்வி: ஆயுத மோதலொன்றில் மூன்றாவது தரப்பு நாடொன்று தலையிடுவது சட்டவிரோதமானது என்கிறீர்கள். நோர்வே சிறிலங்காவில் மேற்கொண்ட தலையீட்டினை அனுமதித்த விடுதலைப் புலிகள் அதற்குத் தமது ஆதரவினையும் வழங்கினார்கள். இந்த நிலையில் தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் தலையீட்டினை நீங்கள் ஏன் கண்டிக்கிறீர்கள்.

பதில்: ஆயுத மோதல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு தரப்புகள் பேச்சுக்களில் பங்கெடுக்கும் தரப்புகளாக மாறுவதற்காக இடைத்தரகுப் பணியினை மேற்கொள்ளுமாறு சிறிலங்கா அரசும் விடுதலைப் புலிகளும் அழைப்பு விடுத்ததன் விளைவாகவே நோர்வே அமைதி முயற்சிகளின்போது இடைத்தரகுப் பணியினை ஆற்றியது. இது மூன்றாம் தரப்பொன்றின் ஆக்கபூர்வமான தலையீடு. ஆனால் அப்போது நிலவிய அமைதிப் பேச்சுக்களுக்கான சூழமைவினை முற்றாக மாற்றும் வகையில் விடுதலைப் புலிகளைக் குற்றவாளி ஆக்குவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் தலையீட்டினை மேற்கொண்டது. அமைதி முயற்சிகள் மீண்டும் ஆயுத மோதலாக மாறுவதற்கு வழிவகுத்த காரணங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்பாடும் ஒன்று.

கேள்வி: அரசியல் வழிவகைகள் ஊடாகத் தங்களது இலக்கினை அடைவதென மே 29 2009 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்ததாக நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். சிறிலங்காவில் இடம்பெறும் தேர்தல்களில் போட்டியிடக்கூடிய அரசியல் கட்சிகள் எதனையும் விடுதலைப் புலிகள் முன்வைத்திருக்கிறார்களா?

பதில்: இது விடுதலைப் புலிகளிடம் கேட்கவேண்டியதொரு கேள்வி.

கேள்வி: இரண்டாம் உலகப்போர் காலப்பகுதியில் ஐரோப்பிய நாடுகளில் இருந்த ஆயுத கிளர்ச்சிக் குழுக்களுடன் விடுதலைப் புலிகளை ஒப்பிட்டிருக்கிறீர்கள். தனி நாடு என்ற இலக்கு நோக்கிப் போரிட்டுவந்த விடுதலைப் புலிகள் இடைக்கிடையே பொதுமக்கள் இலக்குகள் மீதும் தாக்குதல் நடாத்தியிருக்கிறார்கள். கிளர்ச்சிக் குழுவொன்றின் செயற்பாடுகள் இதுதானா?

பதில்: பொதுமக்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடாத்தினார்கள் எனக் குற்றம் சுமத்தப்படும் ஒவ்வொரு சம்பவங்களையும் தனித்தனியாக ஆராயவேண்டும். சிறிலங்காவில் முறையான விசாரணைகள் என எதுவும் இடம்பெறுவதில்லை. தவறிழைத்தவர்கள் தண்டிக்காமல் விடப்படும் ஒரு கலாச்சாரமே அங்கு காணப்படுகிறது. அரச ஆதரவுபெற்ற துணை இராணுவக் குழுக்கள் நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் செயற்பட்டு வருகின்றன. பொதுவாகக் கூறுவதாயின் ஆயுத மோதல்களின் போது பொதுமக்களை இலக்குவைப்பது அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களை மீறும் ஒரு செயல். இதுபோன்ற செயற்பாடுகள் பொருத்தமானதொரு சட்டக் கட்டமைப்பினால் விசாரணைக்குட்படுத்தப்படவேண்டும்.

கேள்வி: ஆயுத மோதலொன்று முடிவுக்குவந்த பின்னர் அதில் பங்கெடுத்த அனைவருக்கும் மன்னிப்பு வழங்கப்படவேண்டுமென ஜெனீவா சாசனத்தின் சரத்தி 6 (5) கூறுகிறது. இந்த நிலையில் தற்போது ஆட்சியிலிருக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டுமென விடுதலைப் புலிகளும் அவர்களது ஆதரவாளர்களும் வாதிடுகிறார்கள். விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படவேண்டும் என்ற வாதங்களுடன் போர்க் குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற அழைப்பு முரண்படவில்லையா?

பதில்: இல்லை. சனவரி 2009 முதல் மிகவும் குறுகியதொரு நிலப்பரப்பில் 300,000 பொதுமக்கள் செறிந்திருந்தனர். இவர்கள் மீது ஐந்து மாதங்களாகத் தொடரான எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. 40,000 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். ருவாண்டா படுகொலை மற்றும் கிழக்குத் தீமோர் மோதல், சேராலியோன் பிணக்கு ஆகியவற்றின் பின்னர் அமைக்கப்பட்டதுபோன்று அனைத்துலக விசாரணைக் கட்டமைப்பு ஒன்று அமைக்கப்படவேண்டும் என்றே புலம்பெயர் தமிழர்கள் கோருகிறார்கள்.

விடுதலைப் புலிகளுக்கு மன்னிப்பு வழங்குவது என்ற விடயத்தினை நோக்குமிடத்து, அந்த அமைப்பின் மூத்த தலைவர்கள் அனைவரும் போரின் போது கொல்லப்பட்டுவிட்டனர் அல்லது படையினரிடம் சரணடைந்தபோது கொல்லப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காதவிடத்து, குற்றவாளிகள் தண்டிக்கப்படாது அவர்களுக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்படுமெனில் சிறிலங்காவில் இதுபோன்ற படுகொலைகள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்த முடியாது.

புதினப் பலகை.

Edited by தமிழ் அரசு

[color="#9932CC"]இங்கு கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்திற்கும் மதிப்புக்குரிய விக்டர் கோப்பின் பதில்கள் ஆணித்தரமான உண்மையும், உயர்ந்தவயுமாக இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் உண்மையைப்புரிந்துகொண்டு உண்மையான செயல்வடிவம் கொடுப்பது இக்காலத்தில் முக்கியமான விடயமாக தமிழர்களுக்கு உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.