Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தளபதி கேணல் ரமேசின் படுகொலை பற்றி சனல்-4 ஊடகமும், சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தளபதி கேணல் ரமேசின் படுகொலை பற்றி சனல்-4 ஊடகமும், சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சும்.

Monday, June 20, 2011, 19:20

உலகம், தமிழீழம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண சிறப்புத் தளபதி கேணல் ரமேஸ் அவர்கள் கொல்லப்பட்ட நிழற்படத்தை எமது தமிழ்த்தாய் இணையம் சித்திரை மாதம் 26 ஆம் திகதி பிரசுரித்திருந்தோம். அதை அவரது மனைவி வத்சலாதேவி துரைராஜசிங்கம் அவர்கள் அடையாளம் காட்டியிருந்ததுடன், நிழற்படத்தில் தனது கணவர் கொல்லப்பட்டமை போர்க்குற்றம் என்பதால் எங்கு வந்தும் சாட்சி கூற தயார் எனவும் தெரிவித்திருந்தார்.

நாம் வெளியிட்ட கோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண் பெண் போராளிகளின் 130 படங்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண சிறப்புத் தளபதி கேணல் ரமேசின் உடலத்தை அவரது மனைவி வத்சலாதேவி துரைராஜசிங்கம் உறுதிப்படுத்தியா செவ்வியைக் கேட்க இங்கே அழுத்தவும்:

இது தொடர்பான தவல்களை ஈழம் டெய்லியிடம் பெற்றுக்கொண்டு, அவற்றை உறுதிப்படுத்திய சனல்-4 தொலைக்காட்சி, கேணல் ரமேஸ் கைது செய்யப்பட்டபோது, அல்லது சரணடைந்தபோது எடுக்கப்பட்ட காணொளி மற்றும் நிழற்படங்களையும், பின்னர் கொல்லப்பட்டவுடன் எடுக்கப்பட்ட நிழற்படங்களையும் வெளியிட்டு ரமேசின் உடலத்தை வெளிநாட்டிலுள்ள அவரது மனைவி அடையாளம் காட்டியிருப்பதாக கடந்த 14ஆம் நாள் வெளியிட்ட ‘இலங்கையின் கொலைக்களம்’ ஆவணத் தொகுப்பில் வெளியிட்டிருந்தது.

தாம் இழைத்த போர்க்குற்றம் பற்றி வலுவான சாட்சியாக இது அமையும் என அச்சமடைந்துள்ள சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு, அதனை மூடி மறைப்பதற்காக கிழக்கில் கருணா மேற்கொள்ள காவல்துறையினர் மீதான படுகொலையை ரமேஸ் மீது சுமத்த முற்பட்டுள்ளது. சரணடைந்த 600 காவல்துறையினரைக் கொன்றார் என இவர் மீது குற்றம் சாட்டும் சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு, அந்த நேரத்தில் அந்த நடவடிக்கைக்கும், கிழக்கின் கட்டளைத் தளபதியாகவும் இருந்த, தமது அரசாங்கத்தில் அமைச்சராக உள்ள கருணா என்ற முரளிதரன் பற்றி ஏதுவும் வாய் திறக்கவில்லை.

அது மட்டுமன்றி கேணல் ரமேஸ் பங்குகொண்ட தாக்குதல்கள் எனக்கூறி ஒரு பட்டியலையே சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. ஆனால் சனல்-4 எழுப்பிய கேள்விக்கு அது பதிலளிக்காது குழப்ப அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கேணஸ் ரமேஸ் தமது படைகளுக்கு எதிரான தாக்குதலிகளில் பங்கெடுத்தார் என சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு கூறினாலும், கைதியாக இருந்த ஒருவரை அடித்து, வதைத்து கொல்வதற்கு பன்னாட்டு சட்டத்தில் இடமில்லை என்ற சனல்-4 தொலைக்காட்சியின் வாதத்திற்கு பதில் இறுக்க முடியாமல் சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு திணறி இருக்கின்றது.

நாம் வெளியிட்ட போர்குற்ற ஆதரங்களை சனல்-4 க்கு கொண்டு சேர்த்த ஈழம் டெய்லி இணையதிக்கு மிக்க நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

அம்பலமாகியுள்ள இன்னொரு போர்க்குற்ற ஆதாரம் – தளபதி ரமேஸ் அவர்களை விசாரிக்கும் படையினர் (video in)

http://www.tamilthai.com/?p=19715

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.