Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாணவர் விஸா மூலம் 5 வருடங்களுக்கு மேல் பிரித்தானியாவில் தங்க மூடியாது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர் விஸா மூலம் 5 வருடங்களுக்கு மேல் பிரித்தானியாவில் தங்க மூடியாது!

Published on June 22, 2011

பிரித்தானிய அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விஸா முறைமையின் கீழ் மாணவர்களாக வருபவர்கள் 5 வருடங்களுக்கு மேல் பிரித்தானியாவில் தங்கியிருக்க முடியாது என கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இவர்கள் கற்கைநெறியினை முடிக்காவிட்டாலும் 5 வருடங்களின் பின்னர் கட்டாயம் திருப்பி அனுப்பப்படுவர். திருப்பி அனுப்பப்படுபவர்கள் நாடு திரும்பிய பின்னர் மீண்டும் விஸாவுக்கு விண்ணப்பிக்க முடியும்’ எனவும் உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்தது. எனினும் மாணவர் விஸாவின் கீழ் வருகை தந்து கலாநிதி கற்நெறியை மேற்கொள்பவர்களுக்கு மாத்திரம் 5 வருடங்கள் பின்னரும் மாணவர் விஸா நீடிக்கப்படும் என கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் குறிப்பிட்டது.

பிரித்தானி அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விஸா முறைமை தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்குமளிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.

இதில் இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர் ஸ்தானிகர் மார் கூடிங் மற்றும் பிரித்தானிய எல்லை முகவராலயத்தின் பிராந்திய பணிப்பாளர் கிரிஸ் டிக்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.அங்கு கருத்து தெரிவித்த கிரிஸ் டிக்ஸ், அரச பல்கலைக்கழகங்களில் கற்கைநெறியினை மேற்கொள்ளும் வெளிநாட்டு மாணவர்கள் மாத்திரமே தொழில் நடவடிக்கையில் ஈடுபட முடியும். இதற்கிணங்க பிரித்தானியாவிலுள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் தொழிலில் ஈடுபட முடியாது எனும் கண்டிப்பான விதி புதிய விஸா முறையில் குறிப்பிப்பட்டுள்ளது.

மாணவர் விஸாவின் கீழ் வருபவர்கள் தங்களது கற்கைநெறியை நிறைவு செய்த பின்னர் பிரித்தானிய கம்பனியில் தொழில் வாய்ப்பினை பெறுவார்களாயின் அவர்களுக்கு வதிவிட விஸா வழங்கப்படும். தகுதியானவர்களை நாட்டுக்குள் எடுத்து பிரித்தானிய பொருளாதாரத்தை கட்டியொழுப்பவே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விஸா முறைமை இறுக்கமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தகுதியானவர்கள் நாட்டுக்குள் நுழைவர்.

சட்டவிரோதமான முறையில் பிரித்தானியாவிற்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன் ஒரு கட்டமாகவே அண்மையில் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட 28 இலங்கையர்கள் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். கடந்த வருடமும் பிரித்தானியாவிற்கு சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட வெளிநாட்டவர்கள் பலர் நாடு திருப்பப்பட்டனர். இவர்களில் பலர் அகதி அந்தஸ்து கோரியவர்களேயாவர்.

இதில் இலங்கையர்கள் மாத்திரமல்ல பல நாட்டை சோந்தவர்கள் இருந்தனர். தற்போது பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் அனைவரும் விரைவில் திருப்பி அனுப்பப்படுவர். இதேவேளை, இலங்கையிலிருந்து சிறந்த வர்த்தகர்களையும் பிரித்தானியாவிற்கு எடுக்கும் முகமாக துரித வியாபார சேவை எனும் விஸா முறைமை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் ஊடாக அதிக வர்த்தகர்கள் பிரித்தானியாவுக்கு இலகுவாக செல்லமுடியும்.

2010ஆம் ஆண்டு பிரித்தானியாவிற்கு மாணவர் விஸாவிற்கு விண்ணப்பித்தவர்களில் 70 சதவீதமானவர்கள் விஸா பெற்றனர். சுமார் 20,000 மேற்பட்ட இலங்கையர்கள் பிரித்தானியவுக்கு விஜயம் செய்தனர்.

ஒவ்வொரு மாதமும் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்திற்கு சுமார் 200 போலி விஸா விண்ணப்பங்கள் கிடைக்கின்றன. இந்த புதிய திட்டத்தின் கீழ் போலி விஸா விண்ணப்பங்களையும் இல்லாமல் செய்ய முடியும் என அவர் தெரிவித்தார்.

http://www.saritham.com/?p=23399

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.