Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் ஓகஸ்ட் மாதம் எண்ணை அகழ்வு ஆரம்பிக்கும் - இந்திய நிறுவனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Jun 29, 2011 / பகுதி: முக்கியச் செய்தி /

மன்னாரில் ஓகஸ்ட் மாதம் எண்ணை அகழ்வு ஆரம்பிக்கும் - இந்திய நிறுவனம்

மன்னாரில் தமது எண்ணை அகழ்வுப் பணி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கும் என, இந்திய எண்ணை நிறுவனமான கெயின் இந்தியா (Cairn India) அறிவித்துள்ளது.சிறீலங்காவுடன் இணைந்து கெயின் லங்கா என்ற புதிய கிளை நிறுவனத்தை ஆரம்பித்துள்ள கெயின் இந்தியா, அந்த நிறுவனத்தின் ஊடாக இந்த அகழ்வு நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கின்றது.3000 சதுர கிலோமீற்றர் பரப்பளவுகளாக தமிழர் கடற்பரப்பை எட்டாகப் பிரித்துள்ள சிறீலங்கா அரசாங்கம் அவற்றை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்கியிருக்கின்றது.

இவ்வாறு எட்டாகப் பிரிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றை இந்தியாவிற்கும், மற்றொன்றை சீனாவிற்கும் கடந்த 2007ஆம் ஆண்டு குத்தகைக்கு கொடுத்துள்ள சிறீலங்கா அரசாங்கம் ஏனையவற்றையும் குத்தகையிட தீர்மானித்துள்ளது.

இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ள பகுதியில் நான்கு கிணறுகளை துழையிட இருப்பதாகவும், ஓகஸ்ட் மாதம் முதல் அடுத்த 4 மாதங்களிற்கு இந்தப் பணி இடம்பெறும் எனவும் கெயின் இந்தியா அறிவித்துள்ளது.இந்த நான்கு மாதங்களில் எண்ணை அல்லது எரிவாயு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அடுத்த இரண்டு வருடங்களில் எவ்வளவு தொகை இருக்கின்றது என்பதைக் கண்டறிய முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டறியும் பட்சத்தில், வர்த்தக ரீதியான செயற்பாடுகளை ஆரம்பிக்க அடுத்த 6 வருடங்கள் தேவைப்படும் என, கெயின் இந்தியா நிறுவனத்தின் வல்லனர் ஸ்ருவட் பேர்லி (Stuart Burley) தெரிவித்தார்.

1960 மற்றும் 1984ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவும், ரஸ்யாவும் இவ்வாறான அகழ்வுக்கான ஆராய்வுப் பணிகளை மேற்கொண்டிருந்த போதிலும், எண்ணை கண்டு பிடிக்கப்படவில்லை என்பதுடன், பின்னர் ஆரம்பித்திருந்த போர் இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தது.

தற்பொழுது தமிழர் நிலத்திலுள்ள எண்ணையைக் குறிவைத்துள்ள சிறீலங்கா அரசாங்கம், எண்ணை அல்லது எரிவாயு கண்டு பிடிக்கப்பட்டால் அதன் மூலம் 50 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியீட்ட முடியும் என கணக்கிட்டுள்ளதுதமிழர் தாயகமான மன்னரில் 30000 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் ஒரு பில்லியன் குவளை (Barrels) எண்ணை இருப்பதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளதுடன், எண்ணை வளமற்ற சிறீலங்கா கடந்த 2009ஆம் ஆண்டு மட்டும் 3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எண்ணையை இறக்குமதி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.pathivu.com/news/17173/57//d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.