Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐநா பிரதிநதி ஹைன்ஸ் உடனான நேர்காணல் - தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா பிரதிநதி ஹைன்ஸ் உடனான நேர்காணல் - தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

30 ஜூன் 2011

'போர்க்குற்றம் தொடர்பான உள்நாட்டு விசாரணைக்குச் சமாந்தரமாகச் சர்வதேச விசாரணை ஒன்றும் முன்னெடுக்கப்படல் வேண்டும்.'

ஐநா பிரதிநதி ஹைன்ஸ் உடனான நேர்காணல் - தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் தன்னிச்சையான நியாயத்துக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பிலான ஐநாவின் விசேட பிரதிநிதி கிறிஸ்ரோபர் ஹைன்ஸ்

சனல் 4இன் ஆவணப்படம் பயன்படுத்தியுள்ள காட்சிப் பதிவுகள் பார்வையாளர்களைப் பல்வேறு அனுமானங்களுக்கும் இழுத்துச் சென்றுள்ளது. உதாரணமாகப் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை எடுத்துக் கொண்டால், அங்கு காட்டப்படும் உடல்களை மட்டும் வைத்துக் கொண்டு அவர்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்ற முடிவுக்கு வர முடியாது.

அதேபோன்ற இன்னுமொன்று, அதில் பயன்படுத்தப்படும் காட்சிப்பதிவுகள் எதிலும் பொதுமக்கள் வாழும் பகுதிகள் மீது சிறிலங்கா அரசாங்கம் வீசிய ஷெல்கள் வந்து விழுவதான காட்சிப்பதிவுகள் எதுவும் இல்லை. இதபோன்ற பல விடயங்கள் உள்ளன. இந்த நிலையில் ஒரு ஊடகவியலாளரின் நோக்குநிலை நின்றும் ஒரு மனித உரிமையாளரின் நோக்கு நிலையிலிருந்தும் எவ்வாறு சனல் 4 ஆவணப்படத்தை பகுப்பாய்வு செய்வீர்கள்?

நான் நினைக்கிறேன். ஐநா செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழு மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் ஆராய்ந்து வெளியிட்ட ஆதாரங்கள் உட்பட கிடைக்கப்பெற்ற அனைத்து ஆதாரங்களின் துணையோடு தான் இந்தக் காணொளிக்காட்சியைப் பார்க்க வேண்டும்.

கிடைக்கப்பெற்றுள்ள ஆதாரங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டிப் பார்க்கிற போது ஏற்படுகிற ஒத்தசைவான விளைவு என்னவென்றால், போரின் போது, குறிப்பாக அதன் இறுதிக்கட்டத்தில் இரண்டு தரப்பினரும் என்ன செய்தார்கள் என்பது குறித்து தீவிரமான கவனத்தைச் செலுத்த வேண்டியதற்கான காரணங்கள் இருக்கின்றன என்பது தான். அத்தோடு, அங்கு வெளிச்சாட்சிகள் எவரும் இருக்கவில்லை. அரசாங்கத்தின் கையே ஓங்கி இருந்தது.

நான் பார்த்த அனைத்து சாட்சியங்களும் அங்கு உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி ஆராய ஒரு விரிவான சுதந்திரமான விசாரணையைக் கோருவதற்கான போதுமான காரணங்கள் உள்ளன என்ற முடிவுக்கே என்னை இழுத்து வந்தன. ஊடகவியலாளர்களும் என்னைப் போன்ற ஐநா முகவர்களும் அக்குற்றங்கள் தொடர்பான ஒரு இறுதி முடிவுக்கு வரக்கூடிய நிலையில் இல்லை. இது அதற்கென ஆணை வழங்கப்பட்டதும், இவ்வகையான ஆதாரங்களை புலனாய்வு செய்யும் தகைமையைக் கொண்டதுமான ஒரு அங்கத்தினாலேயே நடாத்தப்பட முடியும். அவ்வாறு செய்வது தான் சுதந்திரமானதும் பக்கச் சார்பற்றதுமான ஒரு வழிமுறையாகும். சுட்டபூர்வமற்ற படுகொலைகள் இடம்பெற்றுள்ள என்று சொல்லப்படுகிற படியால் சர்வதேச சட்டங்கள் இவ்வாறான விசாரணையை வலியுறுத்துகின்றன.

சிறிலங்காவில் நடைபெற்ற மோதல்களில் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக உறுதியான முடிவுக்கு நீங்கள் வந்துள்ளீர்கள். முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பிப்பதற்கான அடிப்படை ஆதாரங்கள் உள்ளதாகவும் நீங்கள் கூறியுள்ளீர்கள். எந்த அடிப்படையில் அவ்வாறான ஒரு அறிக்கையை நீங்கள் வெளியிட்டீர்கள்?

நான் பரிசோதித்த ஐந்து நிமிடக் காணொளிக்காட்சி நிர்வாணமாக்கப்பட்டு, கண்கள் கட்டப்பட்ட மக்கள், அவர்களின் கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் இராணுவ உடை தரித்தவர்களால் தலையின் பின்புறம் சுட்டுக் கொல்லப்படுவதான காட்சிகள் சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் இடம் பெற்றுள்ளமையை பாடப்புத்தக உதாரணங்கள் போலத் தெளிவாகக் காட்டுகின்றன. சுடுபவர்கள் சிங்கள மொழியில் பேசுகிறார்கள். சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் குறித்த விசாரணையை நோக்காகக் கொண்ட ஒருவர் புறக்கணித்தது விட முடியாதபடி இது முக்கியமான கவனத்தைக் கொண்டுள்ளது. இந்தக் காணொளிகளுக்குப் பொறுப்பான சங்கிலித்தொடரில் உள்ளவர்கள் யார் என்பது எமக்குத் தெரியாது. இது ஆய்வுக்குட்படுத்தப்பட்டு உறுதிப்படுத்தப்படாமலிருப்பின் அத குறித்து கருத்துக் கூறுவதென்பது பொறுப்பற்றதன்மையதாக இருந்திருக்கும்.

இந்தக் காணொளிக் காட்சிகளை எவ்வாறு நீங்கள் உறுதிப்படுத்தினீர்கள்?

விஞ்ஞானரீதியில் இந்தக் காணொளிக்காட்சியை உறுதிப்படுத்துவதற்காக, அதன் காணொளி மற்றும் ஒலித் தரத்தை ஆய்வு செய்வதற்காக இரண்டு சுயாதீனமான நிபுணர்களை அணுகினேன். அவர்கள் தமது ஆய்வில் இந்தக் காணொளிக்காட்சிகள் போலியாக உருவாக்கப்பட்டவைகள் அல்ல, உண்மையில் என்ன நடந்தனவோ அவையே அக்காணொளிக்காட்சியில் உள்ளன என்ற முடிவுக்கு வந்தார்கள்.

அதேவேளை இதன் வேறு வேறு பகுதிகள் பல்வேறு நடிகர்களால் நடிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு அது பதில் தரவில்லை. அதனால் நான் ஏவுகணை நிபுணர் ஒருவரை அணுகினேன். அவர் துப்பாக்கியின் பின்னுதைப்பை ஆராய்ந்து விட்டு அது உண்மையான துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொல்லப்படும் போது ஏற்படும் பின்னுதைப்புக்கு ஒத்திசைவாக இருக்கிறது என்ற முடிவுக்கு வந்துள்ளார். மரணத்துக்கான காரணங்களை ஆராயும் தடயவியல் நிபுணர் ஒருவர் இதனை ஆராய்ந்து உண்மையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்படும் போது ஏற்படும் உடலசைவே இதுவென உறுதிப்படுத்தினார். திரைப்படங்களில் ஒருவர் சுட்டுக் கொல்லப்படும் போது காட்டப்படும் உடலசைவு விட உண்மையில் ஒருவர் சுட்டுக் கொல்லப்படும் போது ஏற்படும் உடவசைவு வேறுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்குறித்த நிபுணர்களின் முடிவுகளுடன் எனது அபிப்பிராயம் உறுதியானதற்குக் காரணம் எனக்கு முன்னர் பதவி வகித்த பிலிப் அல்ஸ்ரனின் கோரிக்கையின் பெயரில் மேற்படி மூன்று நிபுணர்களும் ஒரு வருடத்திற்கு முன்னர் கிடைக்கக் கூடியதாக இருந்த இந்தக் காணொளியின் ஒரு பகுதியை ஆய்வு செய்திருந்தார்கள். அவர்கள் அந்தக் காணொளி குறித்த நான்கு சந்தேகங்களுக்கு தம்மால் விடை காணமுடியாதிருந்ததாகக் குறித்துக் காட்டியிருந்தார்கள். இது அவர்கள் உண்மைக்குப் புறம்பாக ஒன்றை நிரூபிப்பவர்களல்ல, அவற்றை விகாரப்படுத்தியும் எளிமைப்படுத்தியும் தங்களுடைய முடிவை வந்தடைபவர்களல்ல என்பதையும் அவர்கள் விஞ்ஞானபூர்வமான ஆய்வை மேற்கொள்பவர்கள் என்பதையும் எனக்கு உறுதிப்படுத்தியது. இவ்வடிப்படையில் தற்போது கிடைத்திருக்கும் விரிவான நீண்ட காணொளியின் அடிப்படையில், அவர்கள் தாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விடைகாண முடியுமாக இருந்தது.

உங்கள் நிபுணர்களின் முடிவுகளை அரசாங்கம் நிராகரித்துள்ளதே...

முதலில் இந்தக் காணொளியை நான் பார்த்த போதே நான் நினைத்தேன் இவ்வளவு கொடூரமான ஒன்று விரைவிலேயே போலியானது என முத்திரை குத்தப்பட்டு விடும் என. இது தொடர்பில் அரசாங்கத்தின் பதில்கள் எவையும் உதவியனவாக இல்லை. அவர்கள் தங்களது பலம் முழுவதையும் நாங்கள் சொன்னவற்றில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டுவதிலேயே பயன்படுத்தினார்கள். அதனை நான் பாராட்டுகிறேன். ஏனெனில் அது எமது எங்களது அணுகுமுறையை மீள்மதிப்பீடு செய்வதற்கு உதவியது. ஆனால் அந்தக் காணொளி மீதான அவர்களது அவதானம் மிகக் குறைவாகவே இருந்தது.

அவர்கள் தங்கள் இராணுவத்தனர் சொன்னதை நம்பினார்கள். அதேவேளை அவர்களுடைய நிபுணர்கள் இந்தக் காணொளிக்காட்சியை ஒளி, ஒலி, மருத்துவ, மற்றும் ஏவுகணைத் தொழில்நுட்பம் என்பவற்றின் அடிப்படையில் ஆய்வு செய்வதும் சிரமமாக இருந்தது. அவர்கள் சொன்னவற்றை எல்லாம் நாம் மிகவும் கவனமாக ஆராய்ந்தோம். எனினும் அவர்களுடைய குற்றச்சாட்டுக்களுக்கு விஞ்ஞான ரீதியிலான காரணங்களைக் கண்டு பிடிப்பது சாத்தியமற்றதாக இருந்தது.

சாராம்சத்தில் என்ன நடந்தது என்றால் அரசாங்கத்தின் இவ்வாறான கண்மூடித்தனமான நிராகரிப்பு அங்குள்ள ஒரு சிறிய குழுவினரால் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தால் கூட அவற்றை மூடி மறைக்கும் நடவடிக்கையாகவே அமைந்தது. ஆனால் கிடைக்கும் சான்றாதார்கள் இதனை ஏற்றுக்கொள்ளக் கூடியனவாக இல்லை என்பதே உண்மை.

சிறிலங்காவிற்கு விஜயம் செய்வதற்கு நான் அனுமதி கோரியிருந்தேன். ஆனால், இது வரை அது நிராகரிக்கப்பட்டே இருக்கிறது. எவ்வாறாயினும் நான் வெளிப்படையானதும் ஆக்கபூர்வமானதுமான சில பேச்சுவார்த்தைகளை சட்டமா அதிபர் உட்பட்ட அரசாங்கப் பிரதிநிதிகளுடன் ஜெனிவாவில் வைத்து மேற்கொண்டேன். அவர் சிறிலங்காவில் சட்ட நிலைமைகளில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி பற்றி எடுத்துக் கூறியதோடு, சிறிலங்கா மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உருவாக்கியிருக்கும் கடும் வெதனையான நிலைமை குறித்தும் விளக்கினார். நான் அவருக்குச் சொன்னேன் இந்த விசாரணைகளுக்கு எங்களால் ஏதாவது உதவி செய்யக் கூடியதாக இருந்தால் அவற்றைச் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம் என்று. இது தான் முன்னேறிச் செல்வதற்கான ஒவ்வொருவரிடமும் காணப்படும் வழிமுறையாகும்.

இதன் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்? அது உள்நாட்டு நடவடிக்கையாக இருக்குமா அல்லது சர்வதேச நடவடிக்கையாக இருக்குமா?

நான் நினைக்கிறேன் ஒரு முறையான உள்நாட்டு விசாரணையே பிரதான முக்கியத்துவம் வாய்ந்தது. சமூகங்கள் தங்களுடைய கடந்த காலத்துடனும் தங்களுடைய சொந்த யதார்த்த நிலைமைகளுடனும் ஒரு உடன்பாட்டுக்கு வந்தாக வேண்டும். இதுவரை எது எப்படியோ இந்தப் போக்கில் முன்னேற்றம் ஏற்படுவதற்கோ அன்றி இவ்வாறான முன்னேற்றங்களை எட்டுவதற்கான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலோ மிகச்சிறியளவிலான ஆதாரங்களையே காணக்கிடைக்கின்றது. அதேவேளை தவறான எதுவும் நடைபெறவில்லை என்ற கண்மூடித்தனமான நிராகரிப்பே பெருமளவில் மேற்கொள்ளப்படுகிறது. அதன் காரணமாக உள்நாட்டு விசாரணைக்குச் சமாந்தரமாக சர்வதேச விசாரணை ஒன்றும் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவே நான் நினைக்கிறேன். ஒன்று மற்றையதைப் புறந்தள்ளாதபடிக்கு.

நீங்கள் ஆய்வு செய்த ஆதாரங்களின் அடிப்படையில் திட்டமிட்டே பொதுமக்கள் இலக்குகளைத் தாக்கியமை, அவர்களைச் சித்திரவதைக்கு உட்படுத்தியமை, பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கியமை, சட்டத்துக்குப் புறம்பான முறையில் படுகொலை செய்தமை என்பவை இடம் பெற்றுள்ளன என தனிப்பட்ட ரீதியில் நீங்கள் உணர்கிறீர்களா?

இவை தொடர்பில் முழுமையாக விசாரணை செய்வதற்குப் போதுமான காரணங்கள் இருக்கின்றன என்றே நினைக்கிறேன்.

இவ்வாறு பொதுமக்களைப் படுகொலை செய்யப்படுவது தொடர்பான காணொளிக்காட்சிகள் அரிதானவை என்று நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் அரிதானவை என்ற உங்கள் கூற்றின் அடிப்படையில் உங்கள் முடிவில் உங்களுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சந்தேகமோ கேள்வியோ ஏற்பட்டதில்லையா? (இவ்வாறான காணொளிகள் பெருமளவிலும் அனேக இடங்களிலும் காணப்படுகின்ற போதும்.)

பொது மக்கள் கொல்லப்படும் ஐந்து நிமிடங்கள் கொண்ட காணொளிக்காட்சியையும் ( அதனை நான் ஆய்வுக்குட்படுத்தி இருந்தேன்.) சனல் 4இல் காட்டப்பட்ட 3 பேர் படுகொலை செய்யப்படும் காணொளிக்காட்சியையும் தவிர்ந்த வேறேதாவது காணொளிக் காட்சிகள் பற்றி அறிந்திருக்கிறீர்களா? நீங்கள் குறிப்பிடுவதைப் போல அவ்வாறு வேறு காணொளிக்காட்சிகள் இருக்குமானால் அவற்றின் உண்மைத் தன்மையைப் பரிசீலிப்பதற்காக அவை சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஏனெனில் மக்கள் வதந்திகளின்படி செயற்பட்டு உண்மையில் என்ன நடந்தது என்பது வெளிப்படுத்தப்படாமல் போய்விடும். எனக்குத் தெரியும். இறந்த மனித உடல்களைக் கொண்ட புகைப்படங்கள் ஏராளம் இருப்பதை நான் அறிவேன். அரசாங்கத்தின் கோரிக்கைக்கேற்ப அவற்றை தனிப்பட நானே அனுப்பி வைத்திருக்கிறேன். ஆனால் நீங்கள் எழுப்பிய காணொளிக்காட்சிகள் பற்றிய கேள்வியிலிருந்து இது வேறுபட்டது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/63350/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐநா பிரதிநதி ஹைன்ஸ் உடனான நேர்காணல் - தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-

01 ஜூலை 2011

Bookmark and Share

பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பது என்பதல்லப் பெருமை. பயங்கரவாதிகள் நிராகரிக்கும் பெறுமானங்களைப் பாதுகாக்கும் வகையில் போராடித் தோற்கடிப்பது தான் சவாலான விடயம்.

ஐநா பிரதிநதி ஹைன்ஸ் உடனான நேர்காணல் - தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-பகுதி 02

சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் தன்னிச்சையான நியாயத்துக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பிலான ஐநாவின் விசேட பிரதிநிதி கிறிஸ்ரோபர் ஹைன்ஸ்

பகுதி -2

உள்நாட்டு மட்டத்தில் உறுதியான முடிவு எதனையும் நாங்கள் காணவில்லை என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். எவ்வாறான உறுதியான முடிவை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

நான் ஆய்வு செய்த விடயங்களிலிருந்து ஒரு உறுதியான உதாரணத்தைக் காட்ட என்னை அனுமதியுங்கள். அந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட சில படையினரின் முகங்களை ஒருவர் தெளிவாகக் காண முடியும். நான் எதிர்பார்ப்பது இதனைத் தான். போர் முடிவடைந்து இரண்டு வருடங்களுக்குப் பின்னர் இன்றைய நிலையில் இதனோடு சம்பந்தப்பட்டவர்கள் சிலராவது சட்டத்தின் முன் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும். சகல சான்றுகளும் அதற்கு எதிராக இருந்த போதிலும் கூட இன்னமும் தவறாக எதுவும் நடக்கவில்லை என்பதும், பொதுமக்கள் இழப்பு பூச்சியமாகவே இருந்தது என்பதும் அரசாங்கத்தின் பிரதிபலிப்பாக இருப்பது எனக்குக் கவலை அளிக்கிறது. பல ஆயுத மோதல்களில் நடப்பது போல, குறிப்பாக இவ்வாறான கசப்பான ஒரு அனுபவத்தை ஏற்றுக் கொள்வது அவ்வளவு கடினமான ஒன்றல்ல. ஆகக் குறைந்தது சில வரம்புமீறல்கள் நடைபெற்றிருக்கலாம் அவை பற்றி விசாரணை மேற்கொண்டு அதற்குக் காரணமான கொடியவர்களை சட்டத்தின் முன் கொண்டு வந்திருக்கலாம்.

பொறுப்புக்கூறும் கடப்பாட்டு விடயங்களைக் கையாளும் விருப்புடன் அரசாங்கம் இதுவரை மேற்கொண்ட முடிவின்படி நியமித்துள்ள கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு போதுமானதல்ல என்று நீங்கள் கூறுகிறீர்களா?

அவர்களுக்கான ஆணையின் பரப்பெல்லை மிகக்குறுகியது. அத்தோடு பொறுப்புக்கூறும் கடப்பாட்டினை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை இதுவரை காட்டவில்லை.

நீங்கள் அதனைப் போதுமானதல்ல என்று உணர்ந்தால், நீங்கள் தீர்மானம் எடுக்க முன்னர் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முதலில் தனது பணியைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என அரசாங்கம் சொல்வது நியாயமானது என உங்களால் சொல்ல முடியாது அல்லவா?

அது தான் ஆபத்து, காலம் செல்லச் செல்ல சாட்சியங்களும் ஆதாரங்களும் காணாமல் போய் விடும். மோதல் முடிவுக்கு வந்து ஏற்கெனவே இரண்டு வருடங்கள் கடந்து விட்டன. தவறாக எதுவுமே நடக்கவில்லை என்ற ஒரேயடியான மறுப்புத் தான் எஞ்சியிருக்கும் பொதுவான பதிலாக இருக்கிறது. கைவசமுள்ள சான்றுகளோடு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது என்பது கடினமானது.

சிறிலங்கா இவ்வாறான ஒரு விசாரணையைத் தொடர்ந்தும் நிராகரித்து வந்தால் எவ்வாறான விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும்?

அனைத்து நாடுகளையும் கொண்ட இச் சமூகத்தி;ல் சிறிலங்கா தனக்குரிய சரியான இடத்தைப் பெற வேண்டும் என நம்புவதற்கு எல்லாவகையான காரணங்களும் உள்ளன. உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றிப் பதிலளிக்கப்படாத கேள்விகள் மக்கள் தொகையின் குறித்த ஒரு பகுதியினரிடையே நிழல் போல எதிர்காலத்தில் படர்ந்திருக்கும். எனது ஆலோசனை என்னவென்றாவல், உண்மையில் என்ன நடந்தது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். வரம்புமீறல்களை துடைத்தெறிந்து அப்போது எது உள்ளதோ அந்த உறுதியான அடித்தளத்துடன் முன்னோக்கிச் செல்லுதல் வேண்டும்.

போரின் ஒரு தரப்பினரான விடுதலைப் புலிகள் துடைத்தழிக்கப்பட்டு விட்டதாகக் கருதப்படுகிறது. அதன் காரணமாக மோதலின் போது அவர்களால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறும் கடப்பாடு அவர்களுக்குக் கிடையாது. எனினும் அவ்வமைப்பின் சில உயர்மட்டத் தலைவர்கள் இன்னும் உள்ளனர். நீதியின் பெயராலும் நியாயத்தின் பெயராலும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்கு அவர்கள் பொறுப்புக்கூறும் கடப்பாட்டை மேற்கொள்ள வைக்க முடியும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

நிச்சயமாக, விடுதலைப் புலிகளுடன் இணைந்திருந்தவர் உட்பட எந்த ஒரு தனிநபரும் அவர் சர்வதேச குற்றங்களுடன் தொடர்பு பட்டவராக இருப்பின் அவர் பொறுப்புக் கூறும் கடப்பாட்டைக் கொண்டவர். அரசியல் தொடர்பு பற்றியதல்ல கேள்வி. அது குற்றம் இழைக்கப்பட்டது தொடர்பானது. இது இலங்கைக்கு மட்டும் பொருத்தமானது அல்ல. உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இது பொருந்தும்.

சர்வதேச குற்றவியல் நீதியின் வளர்ச்சியிலிருந்து தீர்மானிக்கக் கூடியதாக இருப்பது வெளிநாட்டில் இலங்கையின் தலைவர்களும் அதிகாரிகளும் வழக்கை எதிர்கொள்ளும் அபாயத்திலுள்ளார்கள் என்பதனையா? அவ்வாறான நாடுகளுக்கு அவர்கள் செல்வதைத் தவிர்ப்பது நல்லதா?

கடந்த சில வருடங்களாக சர்வதேச சட்டவியல் கோட்பாடு புதிய வழிமுறைகளிலும் சில சந்தர்ப்பங்களில் நீட்டித்த முறைமையிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரட்டைக் குடியுரிமை உடையோர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் சட்ட அதிகாரத்துக்குள் வரக்கூடும்.

அரசாங்கம் பூச்சிய பொதுமக்கள் இழப்புக் கொள்கையைக் கடைப்பிடித்தது என்று தொடர்ந்தும் அது கூறி வருகிறது. அரசாங்கம் பொய் சொல்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

இது குறித்து தீர்ப்புச் சொல்லும் நிலையில் நான் இல்லை. ஆனால், முறையான விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் எனச் சொல்லக் கூடிய வகையில் போதுமானளவு விடயங்களை நான் கண்டுள்ளேன்.

நிராயுதபாணியாக இருந்த ஒசாமா பின்லேடன், அவருடைய மனைவி, மற்றும் பலர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் இருந்த அமெரிக்கத் துரப்பினரால் கொல்லப்பட்டனர். இதனைப் போர்க்குற்றமாக நீங்கள் கருதுகிறீர்களா?

ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட போது பயங்கரவாதத்திற்கு எதிரான விசேட பிரதிநிதியும் நானும் அவர்களுடைய நடவடிக்கை தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்தின் உண்மையான மற்றும் சட்ட அடிப்படைகள் பற்றி ஆராயும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததை நீங்கள் ஊடகங்களில் கண்டிருக்கக்கூடும்.

எவ்வாறிருப்பினும், சம்பவத்தின் உண்மைக்காரணிகளைப் பற்றி மட்டுமல்ல, நடைமுறைப்படுத்தப்பட்ட சட்ட அடிப்படைகள் குறித்தும் அங்கு கணிசமான சர்ச்சைகள் உள்ளதை அங்கீகரிக்க வேண்டியுள்ளது.

ஆனால், அங்கு கண்கள் கட்டப்பட்டு, நிர்வாணமாக்கப்பட்ட சிறைபிடிக்கப்பட்டோர் அவர்களுடைய கைகள் பின்புறம் கட்டப்பட்டு அவர்களுக்குப் பின்னாலிருந்து தலையில் சுட்டுக் கொல்லப்பட்டதாகச் சர்ச்சைகள் எதுவும் இல்லை. எத்தகைய சூழ்நிலைகளிலும் இவற்றை நியாயப்படுத்திவிட முடியாது.

போரோடு சம்பந்தப்பட்ட விடயங்களை பின்னுக்கு வைத்து விட்டு போருக்குப் பிந்தைய அபிவிருத்தியில் சிறிலங்கா முன்னேறிச் செல்வதற்கு உதவி செய்வது நாட்டின் எல்லா இனக்குழுமங்களுக்கும் நன்மை பயக்கும் அல்லவா? அதைவிடுத்து கடந்தகாலத்தையே மீளவும் மீளவும் பேசுவது ஏன் அவ்வளவு முக்கியமாகப்படுகிறது?

இதில் முக்கியமான பிரச்சினையாக நான் காண்பது அதில் சம்பந்தப்பட்டுள்ள மனித உயிரின் பெறுமதியையே. அந்தப் பிரச்சினையை எந்தவொரு குறிப்பிட்ட காலப்பகுதியினாலும் கட்டுப்படுத்திவிட முடியாது. பொதுமக்கள் சட்டத்துக்குப் புறம்பாகப் படுகொலை செய்யப்பட்டால், அதுவும் அப்பாவிப் பொதுமக்கள் அவ்வாறு கொல்லப்பட்டால், அதற்கு எவரும் பொறுப்பேற்காது விட்டால் அது ஒவ்வொருவரினதும் உயிரின் பெறுமதியை இல்லாதொழித்துவிடும். எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவதற்கு கடந்தகாலத்துடனான கணக்கு வழக்கை முடித்தாக வேண்டி இருக்கிறது.

அத்தோடு, மனித உயிர்களின் பெறுமதிக்கு ஒரு நாடு கொண்டிருக்கும் அக்கறைக்கு மேலாக சர்வதேச சமூகமும் அதேயளவு அக்கறையைக் கொண்டிருக்கிறது. அந்தக் காணொளிக் காட்சிகள் காட்டுவது மனித மனச்சாட்சிக்கு விரோதமான விடயங்களையாகும்.

ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய ராச்சியம் போன்ற நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை மூடி மறைப்பதற்காகவா பலம் பொருந்திய மேற்கத்தைய நாடுகளும் அவர்களுடைய ஏஜென்டுகளும் இந்தச் சிறிய நாட்டைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று பெரும்பாலான இலங்கையர்கள் தமது எண்ணக்கருத்துக்களுக்கு நியாயம் காண்கிறார்களே?

நான் கடந்த வருடம் ஐநாவின் பிராந்தியத்துக்கு உட்பட்ட 45 நாடுகளில் சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் பற்றிய வழக்குகளை எடுக்க வேண்டி இருந்தது. சில வழக்குகள் மற்றையவற்றை விட மிக தெளிவாக வெளித்தெரியக் கூடியனவாக இருந்தன. இது மிகவும் தெளிவாக வெளித்தெரிந்தது. ஏனெனில் படுகொலைகள் காணொளிக்காட்சிகளாகப் படம் பிடிக்கப்பட்டிருந்தன. அத்தோடு மேலதிக ஆதாரங்கள் இப்படுகொலைகள் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டிருப்பதை உறுதி செய்தன. பல பத்தாயிரக்கணக்கான மக்கள் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை அது புலப்படுத்தியது. இந்த விடயத்தில் நாடு சிறியதா பெரியதா என்று கவனத்திற் கொள்வது பொருத்தப்பாடற்ற ஒன்று. ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட என்னைப் போன்ற பதவியிலுள்ள ஒருவர் கடமை தவறுவதென்பது மிக மோசமான அலட்சியப்படுத்தல் ஆகும். என்னுடைய பணி சட்டத்துக்குப் புறம்பாக இடம் பெற்ற படுகொலைகள் குறித்த ஆதாரங்களைத் திரட்டி ஐநாவின் கவனத்துக்குக் கொண்டு வருவதே தவிர, அவை குறித்து விசாரணையை மேற்கொள்வதல்ல.

லிபியாவின் மீதான ஆகாயத் தாக்குதலகள்; குறிப்பாக பொதுமக்கள் செறிவாக உள்ள இடங்களின் மீதான தாக்குதல்கள் சிறிலங்காவின் மீதான போர்க்குற்றத்தின் சமமட்டத்திலான குற்றமாகக் கூட ஏன் கவனத்தில் கொள்ளப்படவில்லை?

இதிலுள்ள நேரெதிரான விடயம் என்னவென்றால், லிபியாவின் நிலைமைகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் ஆலோசனைக்குள்ளாக்கப்பட்டதோடு, பாதுகாப்பு கவுன்சில் லிபியாவின் பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக லிபிய அரசாங்கத்திற்கெதிராக படைகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கியிருந்தது. நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலும் நேட்டோ படைகள் லிபியா மீது குண்டு வீசிக் கொண்டிருக்கிறது. சிறிலங்காவைக்காட்டிலும் அதிகூடிய கொடூரத்தை லிபியா சந்தித்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் புலம் பெயர் சமூகத்தினாரால் இத்தகையதொரு கடுந்தீங்கான பணிக்கு எவ்வளவு நிதி வழங்கப்பட்டது?

இந்த விடயத்தைப் பற்றி என்னிடம் எந்தக் குறிப்பான தகவல்களும் இல்லை. ஆனால் அங்கு பல நிகழ்ச்சி நிரல்கள் இருக்கலாம் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதனால் தான் நான் நடாத்தியது போல விடயங்களைத் தோண்டி எடுத்து விஞ்ஞானபூர்வமான ஒரு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் அரசியற் காரணங்களுக்கு அப்பால்.

வரலாற்றில் முதற்தடவையாக பயங்கரவாதத்தைத் தோற்கடித்து சிறிலங்கா ஒரு பெரும் சாதனையைப் புரிந்துள்ளது. எனினும் அதனைத் தர்மசங்கடத்தில் மாட்டிவிடுவதற்காக ஒரு சர்வதேச சதி வலை பின்னப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் கூறுகிறது. அவ்வாறான சதி முயற்சி ஏதாவது உள்ளதா?

அப்படியான சதித்திட்டத்தின் அடிப்படை என்னவாயிருக்கும் என்று எனக்குத் தெரியாது. சிறிலங்கா அரசாங்கம் பயங்கரமான எதிரியுடன் போரிட்டது என்பது குறித்து பரவலான அங்கீகாரம் உள்ளது. அதுவும் தங்கள் சொந்த மக்கள் மீதும் மற்றவர் மீதும் கொடூரமான நடவடிக்கைகளை மேற்கொண்ட ஒரு எதிரியுடன் போரிட்டிருக்கிறது. ஆனால் பயங்கரவாதிகளுக்கு எதிராகப் போராடும் ஒருவர் பயங்கரவாதிகள் பயன்படுத்தும் அதே ஆயுதத்தைக் கொண்டு அவர்களுடன் போராடக் கூடாது. பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பது என்பதல்லப் பெருமை. பயங்கரவாதிகள் நிராகரிக்கும் பெறுமானங்களைப் பாதுகாக்கும் வகையில் போராடித் தோற்கடிப்பது தான் சவாலான விடயம்.

இதனைச் சொல்லி என்னை நிறைவு செய்ய அனுமதியுங்கள்: சாதாரண மக்கள் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களைப் பார்த்து அதிர்ச்சி அடைவார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இதில் அவர்கள் சம்பந்தப்படாததாலும், அவர்கள் அறிவுறுத்தப்படாததாலும், அவர்களுடைய பெறுமானங்களுடன் இது பொருந்திப் போகாததாலும் இப்படியும் இது நடந்திருக்குமா என்று அவர்கள் அதிர்ச்சியடையக் கூடும். எனினும், இதனைக் கையாள்வதற்காக, எவ்வாறாயினும் உண்மையான காரணிகளை நிறுவி, உயிரின் பெறுமானத்தை மீளமைக்க முயற்சிக்க வேண்டும் என்று கூற விரும்புகிறேன்.

நன்றி : லக்பிம

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/63350/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.