Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புற்றுநோய் விழிப்புணர்வுக்காக யாழிலிருந்து கொழும்புக்குச் சைக்கிள் பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புற்றுநோய் விழிப்புணர்வுக்காக யாழிலிருந்து கொழும்புக்குச் சைக்கிள் பயணம்

news

வேகமாக அதிரித்துவரும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும், யாழ்ப்பாணத்தில் நவீன வசதிகளைக்கொண்ட புற்றுநோய் சிகிச்சை நிலையமொன்றினை அமைப்பதற்காக தெற்கிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஆரம்பிக்கப்பட்டுள்ள நடைப்பயணத்தை ஊக்குவிக்கும் வகையிலும் யாழ்.றோட்டறிக் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி இன்று காலை சைக்கிள் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்.றோட்டறிக் கழகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட புற்றுநோய் விழப்புணர்வுக்கான சைக்கிள் பயணத்தில், யாழ். நீர்வேலியைச் சேர்ந்த சுப்பிரமணியம் சிறீகாந்தன் என்ற தன்னார்வ சமூகசேவகர் நல்லூரிலிருந்து இன்று காலை 7 மணியளவில் தனது பயணத்தை ஆரம்பித்தார். ஆரம்ப நிகழ்வில் யாழ்.புற்றுநோய் நிபுணர் வைத்தியக்கலாநிதி எஸ்.ஜெயக்குமாரன், யாழ். றோட்டறிக் கழகத்தின் புதிய தலைவர் றொட்டேறியன்.எஸ்.சங்கர், செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் மற்றும் றொட்டறிக்கழக அங்கத்தவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் அமைந்துள்ள புற்றுறோய் சிகிச்சை நிலையத்தில் சிறுவர் புற்றுநோய் விடுதி ஒன்றினை அமைப்பதற்கும், 30 கட்டில்கள் கொண்ட ஆண், பெண் புற்று நோய் விடுதிகளை அமைப்பதற்கும் கதிர்வீச்சு சிகிச்சை உட்பட நவீன புற்றுநோய் சிகிச்சை உபகரணங்களை கொண்டதாக யாழ். புற்றுநோய் சிகிச்சை நிலையத்தை மேம்படுத்துவதற்குமான நிதியைத் திரட்டுவதற்காக நேற்று தெற்கின் தெய்வேந்திர முனையிலிருந்து வடக்கின் பருத்தித்துறை முனை நோக்கி ஆரம்பிக்கப்பட்ட நடைப்பயணத்தை ஊக்குவிக்கும் வகையில் சிறீகாந்தனின் சைக்கிள் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சைக்கிள் பயணத்தில் செல்லும் சிறீகாந்தன் இன்று இரவு வவுனியாவிலும், நாளை இரவு புத்தளத்திலும் தங்கித் தனது பயணத்தைத் தொடரவிருக்கின்றார். நாளை மறுதினம் கொழும்புக்குச் செல்வதற்குத் திட்டமிட்டுள்ள சிறீகாந்தன் பாணந்துறையிலிருந்து யாழ்.நோக்கி வரவிருக்கும் நடை பயணக்குழுவுடன் இணைவார் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

02 ஜுலை 2011, சனி 8:10 மு.ப

http://onlineuthayan.com/News_More.php?id=59682388902309403

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.