Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் ஏக பிரதிநிதிகள் என்பதை 23 ஆம் திகதி தமிழர்கள் நிரூபிப்பர்–அரியநேத்திரன் எம்.பி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யார் ஏக பிரதிநிதிகள் என்பதை 23 ஆம் திகதி தமிழர்கள் நிரூபிப்பர்–அரியநேத்திரன் எம்.பி

Saturday, July 2, 2011, 19:16

சிறீலங்கா

இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைக்கும் வகையில் அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் எட்டுச் சுற்றுப் பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ள நிலையில் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நாடாளுமன்ற தெரிவுக் குழுவை நியமிக்கவுள்ளதாக அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களுள் ஒருவரான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம ஜயந்த கருத்து தெரிவித்துள்ளமை இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தை மேலும் காலம் கடத்திச் செல்வதற்கான ஏற்பாடாகும்.

இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் குறிப்பிட்டார்.

திருக்கோவில் பிரதேச சபைக்கான தேர்தல் பிரசார கருத்தரங்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர் தமிழ் நேசன் தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் சந்திரநேருவின் இல்லத்தில் இடம்பெற்றது.

அங்கு நாடாளுமன்ற உறுப்பினர். பா. அரியநேத்திரன் மேலும் பேசுகையில்,

“அரசாங்கம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தை இழுத்தடிப்புச் செய்யும் நோக்கில் முன் வைக்கவுள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். இதனை இந் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி) ஏற்கவில்லை. ஆகவே நாடாளுமன்ற தெரிவுக் குழு என்பது கிடப்பில் போடத்தக்க அம்சமாகும்.

அரசாங்கம் எதைக் கூறினாலும் வடக்கு கிழக்கு மக்களின் அரசியல் பலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளதை நாம் பல தடவை நிரூபித்துள்ளோம். எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் மக்கள் இன்னும் பலமான முறையில் நிரூபிக்கவுள்ளனர்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற முக்கிய அமைச்சர்களும், பேரினவாத சிந்தனையாளர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் அல்லர் என்று அரசியல் வரலாறு தெரியாமல் கூக்குரலிடுவதாலும், அறிக்கைகள் விடுவதாலும், உணர்வுள்ள தமிழ் மக்கள் வீறு கொண்டெழுந்து தமது பலத்தை எமக்கு மேலும் மேலும் அளிக்கின்றனர். இந்த வகையில் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி என்பது போல் மக்களை உசுப்பேற்றும் அமைச்சர்களுக்கு நாம் ஒரு வகையில் நன்றி தெரிவிக்க வேண்டியுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு முன் வைக்கின்ற அல்லது கேட்கின்ற அல்லது ஏற்றுக் கொள்கின்ற அரசியல் தீர்வையே வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். இதனை விடுத்து அரசாங்கமும், பேரினவாத சிந்தனையாளர்களும் திணிக்கின்ற அரசியல் தீர்வை துளியேனும் தமிழ் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பதை அமைச்சர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இனப்பிரச்சினை விவகாரத்தை குழப்பியடித்து, காலத்தை வீணடித்து தமிழ் மக்களை ஏமாற்றலாம் என்று அரசாங்கம் நரித் தந்திரம் செய்ய முற்பட்டால் சர்வதேசம் இதனை நன்கு புரிந்து கொள்ளும்.

யாருக்கு தீர்வு மக்களுக்கா? மேற்குலக நாடுகளுக்கா? கட்சிகளுக்கா? என்று அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த கேள்வி எழுப்பியுள்ளார். அவருக்கு யதார்த்தம் புரியாமை இக் கேள்விகளை தோற்றுவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கோருகின்ற தீர்வு சிறுபான்மை தமிழ் பேசும் சமூகங்களுக்கு தனி நபர்களுக்கோ, கட்சிக்கோ அல்ல. கடந்த 62 வருட காலமாக ஏமாற்றப்பட்டுவரும் தமிழ் பேசும் சிறுபான்மை சமூகங்களுக்கு நீதி நியாயமான அரசியல் தீர்வையே நாம் கேட்கின்றோம். உப்புச் சப்பில்லாத தீர்வை நாம் கேட்கவில்லை.

இழப்புக்களுக்கு மேல் இழப்புக்களை சந்தித்த தமிழினம் வெறும் எலும்புத் துண்டுக்காக காத்திருக்கவில்லை. இந் நாட்டில் வாழும் பெரும்பான்மையின சமூகம் அனுபவிக்கின்ற சகலவிதமான அரசியல் உரிமைகளையும், சலுகைகளையும் இந் நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகமும் அனுபவிக்க வேண்டும். இதனை கேட்பது தவறா? அல்லது இனவாதமா?

உரிமைகளையும், சலுகைகளையும் ஒருசாரார் அனுபவிக்க, மறுசாரார் கொத்தடிமைகள் போன்று வாழ்வது எந்த வகையில் நியாயமாகும்?

எமது மக்கள் சலுகைகளுக்காக சோரம் போகின்றவர்கள் அல்லர், மாறõக உணர்வு ரீதியாக சிந்தித்து உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்கள். செயற்படுபவர்கள். இந்த உண்மையை எதிர்வரும் 23 ஆம் திகதி யாவருக்கும் உணர்த்துவதற்காக எதிர்பார்த்துள்ளனர். இதன் மூலம் யார் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்பது உலகிற்கு மீண்டும் பறைசாற்றப்படும்” என்றார்.

http://www.tamilthai.com/?p=20769

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.