Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக் கடற்படை மீண்டும் ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை கடத்தியுள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

04 ஜூலை 2011

இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்களைக் கடத்தும் நடவடிக்கைகள் அளவே இல்லாமல் தொடர்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் 23 ராமேஸ்வரம் மீனவர்களை கடத்திச் சென்று தமிழகத்தின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து விடுவித்த இலங்கை கடற்படையினர் இன்று ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 14 மீனவர்களை கடத்திச் சென்றதாக முறையிடப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரின் இந்த செயற்பாட்டால்; ராமேஸ்வரம் மீனவர்கள் கடும் அதிர்ப்த்தியடைந்துள்ளனர்.

இன்று காலை தனுஷ்கோடி அருகே நாலாம் திட்டு என்ற இடத்தில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு சென்ற இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்களை சுற்றி வளைத்தனர். பின்னர் படகில் இருந்த 14 மீனவர்களையும் அவர்களது படகோடு சேர்த்துக் கடத்திச் சென்று விட்டனர் என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடற்படையிடமிருந்து தப்பி சென்ற மீனவர்கள் இத்தகவலை சக மீனவர்களிடம் தெரிவித்தனர். மீன்வளத்துறை அதிகாரிகளிடமும் இதுகுறித்து புகார் கொடுக்கப்பட்டது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/63594/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் தாங்கள் பிடிக்க வில்லையாம்

Navy denies arrest of Indian fishermen

MONDAY, 04 JULY 2011 18:17

Sri Lanka Navy today denied reports by the Indian media, that it arrested 14 Indian for allegedly fishing in Lankan waters. Navy spokesman Commander Kosala Warnakulasuriya denied the report and said that no arrest of Indian fishermen has been made by the Navy.

“Nothing of this sort has taken place”, he said. In the report, it alleged that the eighteen fishermen had set out to sea in two boats and 14 of them had been arrested and taken to Mannar district in Sri Lanka, Assistant Director of Fisheries Department Markandeyan, said quoting Coastguard officials where one boat was detained.

Four other fishermen were released along with one boat. Following the arrest, Coastguard officials said the released fishermen had told them that they had been fishing in Indian waters near the third sand-dune off Arichalmunai when the Sri Lankan Navy arrested them around 12:30 PM.

The report further states that twenty-three Indian fishermen, along with five trawlers, were arrested on June 21 off the north east coast of Mannar by the Sri Lankan Navy which alleged that they were fishing in Sri Lankan waters.

They were remanded to judicial custody but released on June 29 following an order from Mannar district court.

Following the arrest, Tamil Nadu Chief Minister Jayalalithaa had sought Prime Minister Manmohan Singh’s intervention to secure their release, according to the report. (Supun Dias)

http://www.dailymirror.lk/news/12248-navy-denies-arrest-of-indian-fishermen.html

Edited by தமிழ் அரசு

ராமேஸ்வரம்: தனுஷ்கோடியிலிருந்து மீன்பிடிக்க சென்ற 14 நாட்டுப்படகு மீனவர்களை, இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.

ராமேஸ்வரத்திலிருந்து ஜூன் 20ம் தேதி, மீன்பிடிக்க சென்று இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்த 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து இலங்கை கடல் எல்லையில் அந்நாட்டு கடற்படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள், தனுஷ்கோடிக்கும் கச்சத்தீவிற்கும் இடைப்பட்ட கடல் பகுதியில்தான் தற்போது மீன்பிடித்து திரும்புகின்றனர். இலங்கை கடல் பகுதிக்குள் செல்ல முடியவில்லை. இறால் மீன்பாடு அதிகளவில் இல்லாததால், நஷ்டத்தை சந்திக்க விரும்பாத பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. அதிகாலை 5 மணிக்கு தனுஷ்கோடி கடற்கரையிலிருந்து மீனவர்கள் முத்துக்கனி, நாகூர்கனி ஆகியோருக்கு சொந்தமான இரண்டு நாட்டுப் படகில் நடராஜபுரம் கிராமத்தை சேர்ந்த தர்மராஜ், கலைமணி, நூர்தீன், முகம்மது, பொங்குராஜ், ராஜேந்திரன் உட்பட 18 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 14 மீனவர்களை சிறைப்பிடித்து சென்றனர்

நாகூர்கனி படகில் கரைதிரும்பிய கலைச்செல்வம், உமையராஜ், பால்ராஜ் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் தனுஷ்கோடி திரும்பினர்.

மீனவர் கலைச்செல்வம் கூறியதாவது: காலை 9 மணிக்கு தனுஷ்கோடி கரை அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர், இரு படகுகளையும் கப்பலுக்கு அருகே அழைத்தனர். பின் எங்களது படகில் இருந்த ஐந்து மீனவர்கள், முத்துக்கனி படகில் இருந்த ஒன்பது மீனவர்களை சிறைப்பிடித்து அவர்களது கப்பலில் ஏற்றிச் சென்றனர்.போகும்போது இலங்கை கடல் பகுதிக்குள் வந்தால் கைது செய்வோம். இனிமேல் இலங்கை கடல் பகுதிக்குள் வராதீர்கள் என்று எச்சரித்து எங்களை விரட்டிவிட்டனர். நாங்கள் உடனடியாக கரைக்கு திரும்பிவிட்டோம், என்றார். இச்சம்பவம் தனுஷ்கோடி மீனவர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.உடனே, ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களை மொபைல் போனில் தொடர்பு கொண்ட படகு உரிமையாளர்கள் சிலர், இலங்கை கடல் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என எச்சரித்தனர்.

http://tamil.yahoo.com/ம-ழக-ம-னவர்கள்-ம-ண்ட-ம்-ச-120900809.html

Edited by akootha

இலங்கை கடற்படையினரால் மீண்டும் பிடித்து செல்லப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

திங்கள், 4 ஜூலை 2011( 19:39 IST )

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 20 ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர்.

வழக்கம்போல் தமிழகத்திலிருந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு, அதன் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.கடந்த 30 ஆம் தேதியன்றுதான் அவர்கள் ஊர் திரும்பினர்.

இந்நிலையில், இந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கூட முடியாத நிலையில் தனுஷ்கோடி கம்பிபாடு கடற்கரையில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள், நேற்று 4-வது மணல் தீடை அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்கள் 14 பேரை படகுடன் சிறை பிடித்து சென்று சென்றனர்.

இந்தநிலையில், 14 மீனவர்களையும், அவர்களின் படகையும் சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடற்படையினரிடம் ஒப்படைத்துவிட்டனர்.

அவர்களை இந்திய கடற்படையினர் கரைக்கு அழைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1107/04/1110704055_1.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.